Carmel Online Sunday Service || Kind Attention To Our Carmel Believers || Few Things To Remember – Part 2||கர்மேல் இணையவழி ஞாயிறு ஆராதனை | விசுவாசிகளின் பணிவான, கனிவான கவனத்திற்கு பாகம் – 2

Carmel Online Sunday Service || Kind Attention To Our Carmel Believers || Few Things To Remember – Part 2||கர்மேல் இணையவழி ஞாயிறு ஆராதனை | விசுவாசிகளின் பணிவான, கனிவான கவனத்திற்கு பாகம் – 2

சபை மூடப்படவில்லை, கட்டிடம் தான் மூடியுள்ளது! (இணையவழி ஆராதனை | கணிவான கவனத்திற்கு – பாகம் 2 )

அன்பான கர்மேல் குடும்பத்தாரே,
இந்த நாட்களில் நம்முடைய கூடிவருகையின் முறைமை மட்டுமே மாறியுள்ளது. கூடுகை தடைசெய்யப்படவில்லை. நம்முடைய ஆராதனைகள் ஓரு கட்டிடத்தின் கீழ் நடைபெறாமல் இணைய வழியாக நடைபெறுகிறது.

1. தனித்தனியே நம் வீடுகளில் இருந்தாலும், ஞாயிறு ஆராதனையில் சபையார் எல்லாரும் இணையத்தின் வழியாக ஒன்றாக இணைந்து தேவனை ஆராதிக்கிறோம் என்பதை நினைவுகூறுவோம்.

2. பல்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டு வந்து சபை வளாகத்தை நேரத்தில் வந்தடையவேண்டும் என்று ஆவலை கொண்ட நாம், அதே ஆவலை இணைய ஆராதனையின் தொடக்கத்திற்கு முன்பாக காண்பிக்கலாமே!

3. வாகன நெரிசல், பொது போக்குவரத்துகளின் தாமதம் போனற காரணங்களுக்காக ஒருவேளை சபை ஆராதனைக்கு வர தாமதமாகலாம். ஆனால் இணையத்தில் இணைய தாமதமாக, தாமதிக்ககூடாதே!

4. Replay தான் இருக்குமே, ஆராதனையில் இணையாவிடினும் நாம் பின்பு பார்த்துகொள்ளலாம் என்ற மனநிலை நமக்கு இருக்கக்கூடாது . Replay என்பது நாம் மறுபடியும் செய்தியை கேட்டு பயனடையவேண்டும், அளிக்கப்பட்ட செய்தி வேறு சபையின் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று நோக்கத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

5. போதகர் நம்மை பார்க்கிறாரா? இல்லையா? என்பதல்ல, கர்த்தர் நம் பிரயாசத்தை, நம் உண்மையை கவனிக்கிறார், அதற்கேற்ப நமக்கு பலனளிக்கிறார் என்று எண்ணம், எதிர்ப்பார்ப்புடன் நாம் ஆராதித்தல்வேண்டும் (எபி 11:6).

6. நமது ஊழியர்கள் சபை வளாகத்தில் அராதனையை நடத்துவதற்கு எடுக்கும் அதே அளவு (அதிலும் கூடுதலானதுமான) பிரயாசத்தை இணையவழி ஆராதனைக்கு எடுக்கிறார்கள். நம்முடைய பிரயாசமும், முயற்சியும் அவ்வண்ணமே இருக்கவேண்டுமல்லவா?

7. இணையத்தின்வழியே ஆராதனை செய்யும்போதும் தேவசமூகத்தை உணருகிறோம், தேவவார்த்தையை கேட்கிறோம். தேவன் நம் ஆராதனைகளை கவனிக்கிறார், அங்கீகரிக்கிறார் என்ற பயயக்தியோடு நாம் பங்கெடுக்கவேண்டும்.

CHURCH IS NOT CLOSED, ONLY THE BUILDING IS!
(For the Kind attention of believers | Part 2)

Dear Carmeleans
These days, our assembling is not prohibited. Only the way in which we come together has changed. Our Worship Services are taking place, not inside a building, but through online medium.
1. We may all be worshipping in our respective homes. But we must bear in mind that when we take part in the Sunday Online service, we are actually gathering together ‘as a church’.
2. Coming from far and near places we have always loved to reach the Prayer House before the start of the service. Even in an online service, we could register our excitement by logging well before the start time.
3. Traffic jam, bus delay, train delay etc., might have contributed to our late coming to regular church services. But what could delay us from joining the online service on time?
4. REPLAY is not meant to watch/join in the service according to your own convenience. The purpose of REPLAY is only for viewing the message “again” for edification and also to share the video with friends (who do not belong to our fellowship) for their benefit and blessing.
5. The question is not whether our Pastor is watching us or not? The truth is that our God who watches over us sees our truthfulness and the efforts that we take to honour God in our Worship Service. He is a rewarder of them that seek him diligently (Heb 11:6).

6. Just like our regular worship service, our Ministers put in the same (and even more) amount of time and effort for producing/relaying the Online service. Through our earnest participation we acknowledge and emulate their efforts.

7. Even in an online service, we experience God’s presence, we hear God’s word. We participate in the Worship

Service with all fear and reverence that our Holy God is watching over us and recognising our efforts.

Please do call and share these points with Carmeleans who are not part of KS/CKC WhatsApp Group.

Continue to pray for me 🙏.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with