Prayer for Indian Election – 2019 in Tamil

சத்தியத்தின் சத்தம் கருத்துக்களம்
கர்மேல் ஊழியங்கள்
இணைந்து வழங்கும்

தேசம் பயப்படாமல் மகிழ்ந்து களிகூர ஜெபக் குறிப்புக்கள்

1. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மலர

2. லஞ்சலாவண்யம் இல்லாத நல்லாட்சி மலர

3. நலிவுற்றோர் நலம் பெறக்கூடிய நல்லாட்சி மலர

4. மக்களுக்கு இலவசங்களை வழங்காமல், மக்களின் வாங்கும் திறனை உயர்த்துகிற நல்லாட்சி மலர

5. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் வள்ளுவன் வாக்கின்படி பிறப்பினால் வருகிற இனவேறுபாடுகளை முற்றிலும் அகற்றுகிற – சமத்துவம், சமதர்மம், சமநீதி சகலகுடிகளுக்கும் வழங்கும் – நல்லாட்சி மலர

6. மக்களிடையே உள்ள பிரிவினைவாதங்களை அழித்து, நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய நல்லாட்சி மலர

7. நல்லோரின் நலனை பேணிக்காத்து, தீயோரைத் திருத்துகிற நல்லாட்சி மலர

8. மக்களின் ஆரோக்கியமான கருத்து சுதந்திரத்திற்கும, விமர்சனங்களுக்கும் இடமளிக்கிற நல்லாட்சி மலர

9. தன்மான உணர்வுடன் உழைத்து, சம்பாதித்து குடும்பம் நடத்துகிறவார்களாக, மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நல்லாட்சி மலர

10. திறமைக்கேற்ற கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்கப்பண்ணுகிற நல்லாட்சி மலர

11. மத சுதந்திரம், வழிப்பாட்டு சுதந்திரம் யாவருக்கும அளிக்கின்ற – சிறுபான்மையினரின் நலன் காக்கின்ற நல்லாட்சி மலர

12. மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்தாமல், மக்களுக்குப் பணிச்செய்கிற நல்லாட்சி மலர

13. மக்களின் வரிச்சுமையைக் குறைத்து, மக்கள் பயன்பெறும் நல்ல மாற்று திட்டங்கள் மூலம் அரசுவருமானத்தைப் பெருக்கக்கூடிய நல்லாட்சி மலர

14. மனித உரிமைகளைப் பேணிபாதுகாக்கும் நல்லாட்சி மலர

15. பெண்களுக்கு எதிரான பாலின வன்கொடுமைகளை முற்றுமாக அழிக்கின்ற நல்லாட்சி மலர

16. கொலை, கொள்ளை போன்ற வன்முறைச் செயல்களின அச்சமின்றி வாழும் சமுதாயத்தை உருவாக்கும் நல்லாட்சி மலர

17. தொங்குநாடாளுமன்றம், குதிரைப்பேரம், ஆட்சி கவிழ்ப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இல்லாத நிலையான நல்லாட்சி மலர

18. விவசாயம், நெசவு, குயம்வனைதல், பாய்முடைதல் போன்ற பாரம்பரியதொழில்கள் நலிவடையாமல், நவீன வளர்ச்சி பாதைகக்கு அழைத்துச் செல்லும் நல்லாட்சி மலர

19. தரமான கல்வி, நல்லாரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பான போக்குவரத்து போன்றவைகளை உறுதிச்செயயும் நல்லாட்சி மலர

20. தமிழ் நாட்டின் தனிச்சிறப்புவாய்ந்த மொழி, கலாச்சாரம், பண்பாடு சிதையாமல் காத்து முன்னேற்றத்திற்கு கொண்டுபோகும் நல்லாட்சி மலர
21. வாக்காளர் யாவரையும் தேவஆவியானவர் ஆட்கொண்டு தம் திருவுளசித்தத்தின்படி நடத்தும்படியாக

22. கிறிஸ்தவ வாக்காளர் யாவரும் தங்கள் ஜனநாயகக் கடமையைத் தேவபயத்துடன் நடத்தும்படியாக

23. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக – தேசநலனுக்கு, ஒற்றுமைக்கு, நல்லிணக்கத்திற்கு மாறாக செயல்படுகிற கட்சிகளும் அவர்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிற கட்சிகளும் முற்றுமாய் தோற்றடிக்கப்படும்படிக்கு

24. ஊழியத்தை ஆதாயத் தொழிலாகச் செய்யும் ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்கள், சொற்ப்ப ஆதாயத்திற்கென தேர்தலில் சபையை விலைபேசும் ஈனச் செயலைச் செய்யாதபடிக்கு

25. தீர்க்கதரிசனம் என்ற பெயரில் ஆரூடு சொல்லி சில சிரங்கை வாற்கோதுமைக்காக – ரொட்டி துண்டுக்களுக்காக – கள்ளதீர்க்கதரிசனம் சொல்லி பரிசுத்த வரத்தை கேலிகூத்தாக்காதபடிக்கு

26. விசுவாசிகள் ஒருவராவது வாக்குக்கு பணம் வாங்குகிற குற்றச் செயலைச் செய்யாதபடிக்கு

27. தேவதீர்மானத்திற்கு விரோதமான மந்திரங்கள், தந்திரங்கள் முற்றும் செயலற்று போக

28. எந்திரங்கள், தொழில் நுட்பங்கள், தேர்தல் அதிகாரிகள் – முற்றுமாக தேவகட்டுபாட்டில் செயல்பட

29. வன்முறைச் செயல்கள் – பணபலம் – இன / ஊர் கட்டுபாடுகள் / உணர்வுகள் மேற்கொள்ளாதபடிக்கு
(நல்லவர்கள், தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்படிக்கு)

30. நமது நாட்டின் பன்முகத்தன்மை சிதையாமல் பாதுகாக்கப்பட்டு ஒற்றுமையை வளரச்செய்கின்ற நல்லாட்சி மலர

31. நமது நாட்டின் கனிமவளங்கள், நீர்வளங்கள், இயற்கை வளங்கள் பணபாட்டுச்சின்னங்கள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை பாதுகாக்கும் நல்லாட்சி மலர

32. சத்தியம் ஜெயிக்கும்படியாக

33. நமது அரசியல் சாசனத்தின் முகப்புரை சிதையாமல் காக்கப்பட

Share with