கர்மேல் 24 மணி நேர சங்கிலி ஜெபம்
ஆகஸ்ட் 01 காலை 08:00 மணியிலிருந்து ஆகஸ்ட் 02 காலை 08:00 மணிவரை
ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஒர் உருவரை
15 நிமிடங்கள் : துதி ஸ்தோத்திரம் மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்
45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்
ஸ்தோத்தரிக்க!
நோய்தொற்று மற்றும் ஊரடங்கில் நம் குடும்பங்களை பாதுகாத்து வழிநடத்திவரும் தேவனை உளமாற ஸ்தோத்தரிப்போம்!
கர்த்தர் நமக்கு தந்துள்ள் ஊழியர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் !
ஜெபகுறிப்புகள்:
1. கர்மேல் உறவுகள் தேவசித்தத்தை அறிகிற அறிவில் வளர்ந்து பெருகவேண்டும். தேவனுக்கு சித்தமான எல்லாவற்றிலும் தேறினவர்கள் ஆகவேண்டும்.
2. தேவசித்தத்தை குறித்த பூரண நிச்சயம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
3. பரலோகத்தில் உள்ள தேவசித்தம் விசுவாசிகளின் வாழ்க்கையில் பூலோகத்தில் பூரணமாக செய்யப்படவேண்டும்.
4. தேவன் நமக்கு அருளும் சந்தர்ப்பங்களில் தவற்விடாமல் தேவசித்தத்தை நிறைவேற்றவேண்டும் (எபிரேயர் 12:17).
5. கர்மேல் உறவுகள், மூத்த குடிமக்கள், பெலவீனத்துடன் காணப்படுவோர், அவர்களை பராமரிக்கும் தேவப்பிள்ளைகள் ஒவ்வொருவரின் சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.
6. குடும்பங்களில் உள்ள இரட்சிக்கப்படாத உறவினர்கள் இரட்சிக்கப்படவேண்டும் (அப்போ 16:31). ஞானஸ்நானம் எடுக்க தீர்மானித்தவர்கள் தங்கள் தீர்மானத்தில் உறுதியுடன் இருக்கவண்டும்.
7. ‘எழும்பி பிரகாசி’ என்ற கட்டளைபெற்ற நாம் ஆத்தும பாரத்தோடு கண்ணீரோடு அழிந்துபோகும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக வரும் ஆண்டுகளில் இன்னும் ஊக்கத்துடன் ஜெபிக்கவும் பிரயாசப்படவும்வேண்டும்.
8. இணையவழி ஊழியம் மட்டுமே சாத்தியமாய் காணப்படும் இந்நாட்களில் சமூகவலைதளைகளில் நம் தேவசெய்திகளை தங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பரப்பி ஊழியம் செய்ய நம் உறவுகள் உற்சாகப்படவேண்டும்.
9. குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் சண்டை, சச்சரவு பிரிவினைகள் யாவும் நீங்கி அன்பு, சந்தோஷம், சமாதானம் மற்றும் செழிப்பு நிலைத்திருக்கவேண்டும்.
10. போதகரின் உடல்நிலை நன்கு தேறிவருகிறது. இந்நாட்களில் நமக்காக ஜெபிக்கவும் தேவதூதுகளை ஆயத்தப்படுத்தவும் தேவன் அவருக்கு கிருபை செய்துள்ளார். போதகரின் பூரண சுகம், கவனித்துகொள்ளும் பாஸ்டரம்மா, சபை பணியாளர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.
பொதுவான குறிப்புகள்:
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.
# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.
# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.
# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.
CARMEL 24 HOUR CHAIN PRAYER
August 01, 08:00 AM to August 02, 08:00 AM
OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes : Praise and Worship and Sanctification prayer
45 Minutes: Intercessory prayer
Praise Points :
Praise God with all your heart for His protection during this pandemic and lock-down season.
Praise God for His servants who minister to us with love and burden during these days!
Prayer Points :
1. The loved ones of Carmel should grow in the knowledge of knowing the will of God. They should stand mature in all the will of God.
2. They should stand fully assured in the will of God.
3. The will of God concerning believers should be done ‘perfectly’ in earth as it is in heaven.
4. Should never fail to fulfill the will of God when God provides an opportunity (Heb 12:17).
5. Health, strength, God’s protections and well-being of all Carmel loved ones, particularly senior citizens, sick and weak people and their care-givers
6. Unsaved family members of Carmel believers to get saved (Acts 16:31) Those who have decided to take baptism must stand firm in their decision.
7. We have received a call to ‘Arise and Shine‘. Therefore we must pray and labor with burden and vision for the salvation of perishing souls (Passion|Vision|Mission).
8. In these days, Social Media is the only and best available platform to spread the word of God. Believers, therefore, should actively minister to friends and relatives by sharing our Messages.
9. In all our families, instead of strife and quarrel, there should only be love, joy, peace and prosperity God.
10. Pastor’s health is improving steadily. These days, God has enabled him to pray for us, prepare and preach God anointed messages. Continue to uphold Pastor, Pastoramma and Staff for complete health.
General Points :
# Medical professionals, Sanitation Workers, Policemen, Government Employees, Merchants, Bankers – Welfare of all public relation people should be taken care.
# People in agony and despair should not curse God, but should return to him in repentance.
# Pray for our loves ones staying in different cities/states/countries.
# The Lord God should miraculously stop this COVID-19 pandemic.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்