Message Title / தேவ செய்தி தலைப்பு : Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
Message Date / தேவ செய்தி நாள் : 30 October 2022 | 30 அக்டோபர் 2022
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Semana Iru | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
நீ பெரியவனாய் இரு. கல்வி, ஊழியம், செய்யும் வேலை என எல்லாவற்றிலும் நீ பெரியவனாய் இரு. நன்மைகள் ஒன்றும் குறைவுபடாமல் ஐசுவர்ய சம்பூரணராய் இருக்க வேண்டும். சந்தோஷம், சமாதானம், வேலைவாய்ப்பு, சாட்சி, வசதி வாய்ப்புகள் எல்லாவற்றிலும் நாம் சீமான்களாய் இருக்க வேண்டும்.
ஆதியாகமம் 24 : 35 கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார் என எலெயெசார் சொல்லுகிறார். பரதேசியாய், நாடோடியாய் வந்த அவருக்கு வெள்ளியையும், பொன்னையும் கொடுத்தார்கள். ஆலயமாகிய நம்முடைய சரீரத்தை நாம் பரிசுத்தமாய் பாதுகாக்க வேண்டும். நம்முடைய சரீரத்தில் விக்ரகங்களுக்கு இடம் கொடாதிருக்க வேண்டும். நம்முடைய தேவன் நம்மை ஆசீர்வதிக்கிற தேவன். நாம் சீமான்களாய் இருப்பது தேவனுடைய சித்தம்.
2 கொரிந்தியர் 8 : 9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.
எல்லாம் அவருடையது. அவருடைய தரித்திரத்திலே நாம் ஐசுவரியவான்களாக வேண்டும். இந்த காற்று மண்டலத்தில் இருக்கிற ஐந்து பஞ்ச பூதங்களும் (ஆகாயம், பூமி , தண்ணீர் காற்று, சூரியன்) நமக்காகத்தான்.
ஐசுவரியவானான அவர் ஏன், நமக்காக தரித்திரர் ஆனார்?
நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு அவர் தரித்திரரானார். வேதத்தில் நாம் தரித்திரராக இருக்க வேண்டும் என்று இல்லை.
ஒரு ஆட்டுக்குட்டியை கூட பலியிட வசதி இல்லை என்றால் ஒரு காட்டு புறாவையாவது பலியிடு என்றதனால், யோசேப்பும், மரியாளும் காட்டுப் புறாவை கொண்டு வந்தார்கள். அவ்வளவு வசதி இல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு மகனாய் இயேசு பிறந்தார்.
ஏன் இயேசு பாவமானார்?
ஏன் இயேசு சாபமானார்?
நமக்காக நம்முடைய பாவங்களை சிலுவையில் அறைவதற்காக இயேசு சிலுவையில் பலியானார். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும் போது நாம் கடன் வாங்காதிருப்போம். நாம் குறைவுள்ளவர்களாக அல்ல. நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
நீங்கள் சீமான்களாகும்படிக்கு சில காரியங்களை சொல்லுகிறேன்.
- கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்
உபாகமம் 8 :10 முதல் உள்ள வசனங்களை பார்க்கலாம்.
கர்த்தர் உங்களுக்கு கொடுத்த எல்லா நன்மைகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். அப்பொழுது ஆண்டவரை மறந்து போகாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ள மறந்து போகக்கூடாது. கர்த்தரை மறக்காதீர்கள்.
உபாகமம் 8: 12, 13, 14 வசனங்களை பார்க்கலாம்
12 – நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,
13 – உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும்,
14 – உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,
16 – உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,
உன் தாய் தந்தையர் முற்பிதாக்கள் இந்த வேலையை தொழிலை செய்ததில்லை எல்லா சூழ்நிலையிலும் பிதாவை நினைப்பாயாக. நாம் ஐசுவர்யத்தை சம்பாதிக்க கூடிய பலனை கர்த்தர் நமக்கு தருவார்.
- தேவ ஆலோசனையை நாம் கேட்க வேண்டும்
சங்கீதம் 16 : 5 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
என்னுடைய ஆண்டவர்தான் என்னுடைய பங்குமானவர். என்னுடைய தொழிலை அவர்தான் பராமரித்து வருகிறார். நேர்த்தியான இடங்களில் எனக்கு பங்கு கிடைத்தது. ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இரவு நேரங்களில் உள்ளே இருக்கும் இயந்திரங்கள் என்னை உணர்த்தும். கர்த்தருக்கு பயந்து அவருடைய வழிகளிலே நடக்கும் போது நீ செய்வது எல்லாம் வாய்க்கும். அவருடைய ஆலோசனைகள் பயங்கரமாய் இருக்கும்.
எரிகோவை சுற்றி சுற்றி வந்தால் என்ன நடக்கும்?
அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயலில் மகத்துவமானவர். அந்த செயலில் இரகசியம் உண்டு. மனுஷருக்கு செம்மையாய் தோன்றுகிற வழிகள் அநேகம் உண்டு. உனக்கு ஆலோசனை தந்த கர்த்தரை ஸ்தோத்தரி.
- கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும்
நீதிமொழிகள் 3: 33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும். அவர் ஆசீர்வதிக்கும் பாத்திரங்களாய் நாம் இருக்க வேண்டும். இரண்டு மார்க்கம் உண்டு.
- துன்மார்க்கம்
- பரலோக மார்க்கம்.
தவறான மார்க்கத்தில் செல்லுபவர்களை உலகம் ஆசீர்வதிக்கும் . ஆனால் கர்த்தருடைய பாதையில் செல்லுபவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் .அதுவே பரலோக மார்க்கம். தேவாசீர்வாதம் ஐசுவர்யத்தை கூட்டும். அதனோடு அவர் வேதனையை கூட்டார்.
- ஊழியக்காரருடைய வளத்தை கர்த்தர் விரும்புகிறார்
சங்கீதம் 35 : 27 என் நீதி விளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
ஊழியக்காரரின் வளத்தை கர்த்தர் விரும்புகிறார். கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். எனக்காக கர்த்தர் இவைகளை செய்தார் என்று சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
- உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்
கொரிந்தியர் 9 : 6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
கொரிந்தியர் 9 : 7 – அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். உங்களது மனதில் நிர்ணயம் பண்ணிக் கொள்ளுங்கள். நீ எவ்வளவு செலுத்த நிர்ணயம் செய்கிறாயோ அதை உற்சாகமாய் கொடு. விதை நிலங்களை நாங்கள் தேடி விதைக்கிறோம். பெருக விதைத்தால், பெருக அறுக்க முடியும். விதையை சாப்பிட்டுவிட்டால் அறுக்க முடியாது. ஆண்டவருக்கு வேலை செய்யும் போது கண்ணீரோடு கொடுக்காதீர்கள்.
2 கொரிந்தியர் 9 : 10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
உங்களுக்கு விதைப்பதற்கு விதையையும், புசிப்பதற்கு ஆகாரத்தையும், ஆண்டவர் கொடுத்திருக்கிறார். விதைக்க வேண்டிய விளை நிலத்தில் விதைக்க வேண்டிய வேளையில் விதை. அதில் கர்த்தருக்கு விருப்பம் உள்ளதா? என்று அறிந்து கொள்ளுங்கள். இப்படி விளைந்து வருவதுதான் நீதியின் விளைச்சல்.
நீதிமொழிகள் 3 : 9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
நாம் எதற்காக இதை கொடுக்கிறோம்? ஆண்டவரை கனம் பண்ணுவதற்காக கொடுக்கிறோம். உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். காயீன் தன்னுடைய விளைச்சலில் முதல் காணிக்கையை கொண்டு வந்தார்.
ஆனாலும் ஆபேல் கர்த்தருக்கு கொடுப்பதில் மிகுந்த உற்சாகமாக காணப்பட்டார். ஆண்டவர் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார் . கர்த்தரை மகிமைப்படுத்த, கணப்படுத்த, பழகுங்கள்.
மல்கியா 3 : 8 – மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
உங்கள் கையின் பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க விரும்புகிறார். நம்மை கர்த்தர் ஆசீர்வதிக்க விரும்புகிறார். நாம் யாரும் கடனாளியாக இருக்க கூடாது என்பது தேவனுடைய சித்தம்.
நீயோ கடன் வாங்காதிருப்பாய் !
கடன் கொடுப்பாய் !
நீ சீமானாய் இருப்பாய் !
நீங்கள் சீமான்களாய் இருக்க
- கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.
- தேவ ஆலோசனையை நாம் கேட்க வேண்டும்.
- கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவர்யத்தை தரும்.
- ஊழியக்காரருடைய வளத்தை கர்த்தர் விரும்புகிறார்.
- உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.