Begin To Possess | சுதந்தரிக்க தொடங்குங்கள் | Suthantharika Thodanungal | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு : Begin To Possess | சுதந்தரிக்க தொடங்குங்கள் | Suthantharika Thodanungal

 

Language / தேவ செய்தி மொழி : Tamil | தமிழ்

 

Message Date / தேவ செய்தி நாள் : 23 May 2021 | 23 மே 2021

 

Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர் இராபர்ட் சைமன்

 

Begin To Possess | சுதந்தரிக்க தொடங்குங்கள் | Suthantharika Thodanungal | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

நாள் : 23, மே 2021
தலைப்பு : சுதந்தரிக்கத் தொடங்குங்கள்
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.

கர்த்தர் நமக்கு அனேக வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். அவைகளை நாம் சுதந்தரிக்க தொடங்க வேண்டும். ஒரே ஒரு வசனத்தை குறித்து தியானிக்கலாம்.

உபாகமம் 2:24 கூறுவதை பார்க்கலாம்
24. “நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய்”.

வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க தொடங்குங்கள்.

ஐந்து குறிப்புகளை காணலாம்:
1. எழுந்து – (தீர்மானம்) -Decision
2. திசை – (இலக்கு) – Direction
3. உறுதி – Determination
4. இதோ, (அர்ப்பணம்) தரிசனம் -Dedication
5. காரியத்தை நடப்பித்தல் -Demonstration

1. எழுந்து – (தீர்மானம்) – Decision

உபாகமம் 2:24 – ல் “நீங்கள் எழுந்து” என்று வாசிக்கிறோம்.
ஒருவேளை நீங்கள் உட்கார்ந்து இருக்கலாம். பயந்து இருக்கலாம். இப்பொழுது தேவன் உங்களை எழுந்திருக்க சொல்லுகிறார்.
ஏசாயா 52:1,2 கூறுகிறது
“எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை”.

சீயோன், எருசலேம் உட்கார்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் பயம், கலக்கம். எழும்பு சீயோனே! உன் வல்லமையை தரித்து கொள்! அந்த இடத்திற்கு தேவையான அலங்கார வஸ்திரத்தை, துதியின் உடையை (ஜெபம், வேத வாசிப்பு, இவைகளை) தரித்துக் கொள்! ஈட்டி, கேடயம், தூங்கக்கூடாது. தூசியை உதறிவிட்டு எழுந்திரு. உன் தலையில் பெரிய பாறாங்கல் இல்லை. உன் தலைமேல் தூசி தான் இருக்கிறது. அதை உதறிவிட்டு எழுந்திரு. என் கிருபை உனக்குப்போதும், பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும் என்று இயேசு சொல்லுவார்.

ஏசாயா 60:1 இவ்வாறு கூறுகிறது
“எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது”.

இந்த தேவ செய்தியை கேட்கும் பொழுது, தேவன் உன்னோடே கூட பேசுகிறார்.

லூக்காவில் திருந்திய குமாரன் கதையில் தன் வயிற்றை அந்த மகன் நிரப்ப ஆசையாய் இருந்தான். அவன் சொல்லுகிறான் நான் எழுந்து என் தகப்பனிடத்திற்க்கு போவேன். கர்த்தர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை நாம் சுதந்தரித்துக் கொள்ள முதலாவது நாம் எழுந்திரிக்க வேண்டும் அதாவது தீர்மானம் பண்ண வேண்டும்.

2. திசை – (இலக்கு) – Direction

உபாகமம் 2 : 24 – ல் “நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி” என்று வாசிக்கிறோம்
நமக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். நாம் அந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும். கர்த்தர் நமக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தால், அந்த இலக்கை நோக்கி நீங்கள் முன்னேற ஆரம்பிக்க வேண்டும். அதற்காக ஜெபிக்க வேண்டும். அதற்கான பயிற்சிக்கு உங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். முதலாவது நாம் எழும்பி ஆகிவிட்டது. 40 ஆண்டுகள் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது எழுந்து முன்னேறி கர்த்தர் கொடுத்த தேசத்தை சுதந்தரிக்க வேண்டும். கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க வேண்டும்.

3. உறுதி – Determination
உபாகமம் 2: 24 கூறுகிறது : “அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்..

ஆற்றை கடக்க வேண்டும். வாழ்க்கையில் அநேக கஷ்டங்கள் வரும். ஒரு அழகிய பாடல் உண்டு.
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே!
யோசனையால் உன்னைக் கலக்காதே தினமே!
வைப்பாய் உன் காலடி, தற்பரன் சொற்படி!
வானவன் இயேசு தம் வாக்கு மாறாரே!
வெள்ளம் பெருகினும் வல்லமை குன்றாதே ! ஆமென்…

அர்னோன் எனும் ஆற்றை கடந்து போக வேண்டும். அர்னோன் என்றால் முறுமுறுப்பு என்று பொருள்.
அனேக வேளைகளில் நாம் எழும்பி பிரகாசிக்கும் போது, ஆறு, சலசலப்பு, கூச்சல் போன்ற தடைகள் குறுக்கே வரும். தேவன் உனக்கு வாக்கு கொடுத்திருப்பாரானால், மலையும் தடுக்க முடியாது, மனிதனும் தடுக்க முடியாது, பேய் பிசாசும் தடுக்க முடியாது. முன்னேறிச் செல். வாக்குத்தத்தம் பண்ணினவர் மாறிடார். வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க தொடங்கு. இந்த ஆறு என்கிற சலசலப்பு, கூச்சல் ஒன்றும் நம்மை ஒன்றும் செய்யாது. பரலோகத்தின் தேவன் நம்மை காப்பார்.

அர்னோன் எனும் ஆறு வரும். எரிகோ கோட்டை வரும். ஆயி பட்டணம் வரும். சிவந்த சமுத்திரம் வரும் . 37 ராஜாக்கள் படையெடுப்பார்கள். அமலேக்கு வருவான். ஏழு ஜாதிகள் எழும்பும். ஆயுதங்கள் விரோதமாய் உருவாக்கப்படும். சலசலப்பு இருக்கும். என்றாலும் எதுவும் உன்னை அணுகாது. கர்த்தர் உன்னை காத்துக் கொள்வார். முதலாவது எழும்ப வேண்டும். உங்கள் தீர்மானம். இரண்டாவது. உங்களது இலக்கை நோக்கி பிரயாணம் பண்ணுங்கள். மூன்றாவது ஆற்றை கடந்து போங்கள். யார், யாராக இருந்தாலும் நான் நானாக இருக்க வேண்டும்.

4. இதோ, (அர்ப்பணம்) தரிசனம் -Dedication

உபாகமம் 2:24 கூறுகிறது
…எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்;..

தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு சிறு வார்த்தையை விட்டிருக்கிறார்கள். இதோ எழும்பி இந்த ஆற்றை கடந்து போ. ஆண்டவர் நமக்கு முன்பாக போய்விட்டார். நீ உட்கார்ந்து அழுதுகொண்டு இராதே. நான் ஏற்கனவே புறப்பட்டு விட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். உனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுப்பதற்காக, உன்னை உயரத்தில் வைப்பதற்காக, கர்த்தர் உனக்கு முன்பே புறப்பட்டு சென்றுவிட்டார். இதோபார், அதுதான் நமது அர்ப்பணத்திற்க்கு அடையாளம்.
பார்வைக்கும், தரிசனத்திற்கும் வித்தியாசமுண்டு.

பிரியமானவர்களே! கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றை பார்ப்பது பார்வை. தரிசனம் என்பது என் கண்களால் பார்க்கக் கூடாததையும் நான் பார்ப்பது தரிசனமாகும். முன்னால் சிவந்த சமுத்திரம், செங்கோல் செங்கடல். பின்னால் எகிப்தின் சேனை. முன்னால், பின்னால், வலது புறமும், இடது புறமும் பெரிய மலை இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பயம். ஒரே ஒரு பக்கம் பார்த்து விடு, பயம் இருக்காது. மேலே தேவனை நோக்கி பார்த்து விடு. பயமே இருக்காது. நீங்கள் நின்றுகொண்டு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் அற்புதத்தை பாருங்கள் என்று மோசே சொல்லுகிறார். அவருக்காக நான் முன்னேற வேண்டும் அந்த தரிசனம் நமக்கு வேண்டும்.

நான் பார்ப்பது எரிகோ கோட்டை சுவரை அல்ல. அதைத்தாண்டி ஒன்றை பார்க்கிறேன். இதுவே எனது தரிசனம். பார்வையின் படி வாழ்ந்தால் பின்னாடி போவோம். தரிசனத்தின் படி வாழ்ந்தால் முன்னேறி போவோம். சாதாரண வாழ்க்கையிலேயே தரிசனம் தேவை என்றால், ஆவிக்குரிய வாழ்க்கையில் பரம தரிசனம் தேவை. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்கிறார்.

5. காரியத்தை நடப்பித்தல் –Demonstration – அவனோடு யுத்தம் செய்

உபாகமம் 2:24 கூறுகிறது: இதுமுதல் அதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய்”.

எப்படி யுத்தம் செய்ய வேண்டும்? அந்தப் பட்டயம் கையோடு ஒட்டிக் கொள்வது போல யுத்தம் செய்தார்கள். குதிரை யுத்த நாளுக்காக ஆயத்த படுத்தப்படும். ஜெயமோ கர்த்தராலே வரும் . அந்த சத்துருவோடுகூட ஒரு யுத்தம் பண்ண வேண்டும்.

அப்போது தான் ஜெயம் வரும். இந்தப் போராட்டம் என்பது ஒண்டிக்கு, ஒண்டி, நீயா? நானா ? பார்த்துவிடலாம். உன்கூட இருக்கிறவர் பெரியவர். பிரியமானவர்களே நம்முடைய மாம்சம் நமக்கு விரோதமாக போராடும். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரிக்க வேண்டுமென்றால் போராடுவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். நல்ல போராட்டத்தை போராடினேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். ஓட்டத்தை முடித்தேன் என்று பவுல் சொல்லுகிறார்.

இந்த தேவ செய்தியை கேட்டு, நாமும் நமக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவோமா!

பரிசுத்தமாய் ஜீவிக்க போராடு!

விசுவாசத்தைக் காத்துக் கொள்ள போராடு!

சுவிசேஷகனாக போராடு!

சுதந்தரித்துக் (ஆசீர்வாதங்களை) கொள்ள போராடு!!

Share with