For All Days Good Days! – Part 1 | எந்நாளும் நந்நாளாயிருக்க! – பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! – Pagam 1 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title | செய்தி  தலைப்பு: For All Days Good Days! – Part 1 | எந்நாளும் நந்நாளாயிருக்க! – பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! – Pagam 1

Message Title / தேவ செய்தி தலைப்பு: For All Days Good Days! | எந்நாளும் நந்நாளாயிருக்க! | Enthanaalum Naannallaiyeruka! |

Message Date / தேவ செய்தி நாள் : 09 October 2022 | 09 அக்டோபர் 2022

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

 

For All Days Good Days! – Part 1 | எந்நாளும் நந்நாளாயிருக்க! – பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! – Pagam 1 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

             

எந்நாளும் நந்நாளாயிருக்க வேண்டும். எல்லா நாளும் நல்ல நாளாயிருக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாஞ்சை.

உபாகமம் 6:24

  1. இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.

                                       எதற்கு கட்டளையிட்டார்?

                  எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கு  கட்டளையிட்டார்.

கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளின் படி செய்யும் போது எல்லா நாளும் நமக்கு நல்ல நாளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு காரியம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் .

கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்றால் என்ன?

Fear of God is not horror or terror which makes Men Run and flee away and hide themselves from God . on the other hand It is a phenomenon that makes men  obey  and follow God out of their love and awesome respect and reverence for God that is  born out of our knowledge about God and His perfect attributes such as His love , holiness,  justice , etcetera toward us .

 

கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பது கர்த்தரிடத்திலிருந்து ஓடி ஒளிய செய்யும் மனிதனின் திகிலோ, பயங்கரமோவன்று. அதற்கு மாறாக  கர்த்தரை பற்றும் அறிவிலும் அவர் நம்மிடம் பாராட்டும், அன்பு,  பரிசுத்தம், நியாயம்   போன்ற அனைத்து பூரண குண நலன்களின் நிமித்தமும், அவருடைய குணாதிசயங்களை அறிந்து அவருக்கு கீழ்ப்படிந்து, அவரையே பின்பற்ற வேண்டுமென்று மனிதனுக்குள் அவர் மேல் காணப்படும் அன்பும் அளவற்ற மரியாதையும் கலந்த ஒரு ஆகச்சிறந்த உணர்வே ஆகும்.

அவர் எதை பரிசுத்தம் என்கிறார்? அவர் எதை செய்யக்கூடும்? செய்யக்கூடாது? என்கிறார். அவருடைய நியாயம் என்ன?

அவர் எவ்வளவு பெரிய தேவன். வானத்தையும், பூமியையும் அண்ட சராசரத்தையும் உண்டாக்கினவர். இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம் என்று சொல்லுகிறார். அவர் வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம். அவர் சரி என்றால் நானும் சரி அவர் தவறு என்றால் நானும் தவறு.

அவர் யார்?  அவரை நான் நேசிக்கிறேன். அந்த நேசத்திலே ஒரு மரியாதை இருக்கிறது. அன்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. பக்தி இருக்கிறது. அந்த நேசத்திலே பயமும் இருக்கிறது. அவர் வேண்டுமென்று சொன்னால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். மிகவும் எளிமையான காரியம் இது. இதற்குப் பெயர்தான் தேவ பயம். இந்த தேவ பயம் மட்டும், நம் வாழ்க்கையில் இருந்தால், எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும்.

உபாகமும் 10:12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,

உபாகமம் 10:12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு பயந்து, அவருடைய வழிகளில் எல்லாம் நடந்து,  அவரிடத்தில் அன்பு கூர்ந்து உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும்,  உனக்கு நன்மை உண்டாகும்படி, உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து வாழ்ந்தால் எல்லா நாளும் நல்ல நாளாக இருக்கும்.

எனது சாட்சி:

எனது  திருமணத்தின் போது தாலியில்லாமல் திருமணம் செய்வதை குறித்து எதிர்ப்பு  வந்தது. ஆனாலும் நான் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றேன். என் மனதில் பக்தி இருக்கிறது. அவர் மீது அன்பு இருக்கிறது. அவர் வேண்டும் என்று சொன்னால் வேண்டும். அவர் வேண்டாம் என்றால் வேண்டாம். இதுவே தேவபயம். இந்த தேவபயம் மட்டும் நமது வாழ்க்கையில் இருக்குமானால் எல்லா நாளும் நல்ல நாளாக இருக்கும்.

பிரியமானவர்களே!  வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து கட்டளைகளும் எனக்கு நன்மை உண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும்.

உபாகமம் 10:13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

ஏன் கர்த்தருடைய வழிகளில் நடக்க வேண்டும்?

 உனக்கு நன்மை உண்டாகும்படிக்கு கர்த்தருடைய வழிகளில் நடக்க வேண்டும்.

                   ஏன் காணிக்கை, தசமபாகத்தை செலுத்த வேண்டும்?

          வேதத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து கட்டளைகளும் எனக்கு நன்மை உண்டாகும்படி     காணிக்கை, தசமபாகத்தை செலுத்த வேண்டும்            

                          விதைத்தால்தானே  அறுக்க முடியும்.

வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து கட்டளைகளும் எனக்கு நன்மை உண்டாகும்படி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரவிசங்கர் ஐயா சொல்லுவார்

  • POWER IS GOD
  • POINTS ARE GOD
  • PRESENTATION IS MINE

அதுபோல கர்த்தர் அருளிய வசனங்களை வைத்து கர்த்தருக்கு பயப்படுகிறதினால் வரும் 10 ஆசீர்வாத குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கர்த்தருக்கு பயப்படுகிறதினால் வரும் ஆசீர்வாதங்கள்

கர்த்தருக்கு பயப்படுகிற பயம் உங்களில் காணப்பட்டால் 10 ஆசீர்வாதங்கள் கிடைக்கும். அவைகளை குறித்து பார்க்கலாம்.

  1. கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது ஞானம் கிடைக்கும்

நீதிமொழிகள் 9:10 – கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

கர்த்தருக்கு பயப்படுகிற பயம்தான் ஞானத்தின் ஆரம்பம். கர்த்தருக்கு பயப்படுதலின் முதல்படி ஞானம். அதுவே என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இல்லாமல் வேறு ஞானம் இருந்தால் அது பேய்த்தனத்துக்கு அடுத்த ஞானமாக இருக்கும்.  இல்லையென்றால் லௌகீக ஞானமாக இருக்கும்.

சார்லஸ் ஸ்பர்ஜன் சொல்லுகிறார்: அநேகர் பலிபீடத்தின் நிழலிலிருந்து நரகத்திற்கு போவார்கள். அதைவிட பயங்கரம் அநேகர் பலிபீடத்திலிருந்தே நரகத்திற்கு போவார்கள்.

                                          எது நிலைத்து நிற்கும்?

                 கர்த்தருக்கு பயப்படுகிற பயமே நிலைத்து நிற்கும்.

சங்கீதம் 111:10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

அவருடைய கற்பனையின்படி நாம் செய்தால் நல்ல புத்தி இருக்கிறது. அவருடைய கற்பனைகளின் படி நாம் செய்யவில்லை என்றால் நமக்கு இருப்பது கெட்ட புத்தி. சிலருக்கு பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் பிரமாணங்கள் வேண்டாம், வாக்குத்தத்தங்கள் வேண்டும். பிரியமானவர்களே! கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இருந்தாலே, நமக்கு நல்ல புத்தி வந்துவிடும். உங்களுக்கென்று தனி முத்திரை கிடைக்கும். உங்களுடைய நீதி வெளிப்படும்.

நீதிமொழிகள் 1:7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

மூடர் என்பவர் யார்?

அவர்களுக்கு கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இருக்காது. அவர்கள் ஞானத்தையும். போதகத்தையும் அசட்டை பண்ணுவார்கள்.   வேதத்தை அசட்டை பண்ணுகிறவர்கள் ஞானவானாய் இருக்க முடியாது. நாம் ஞானமாய் நடக்க வேண்டுமெனில் நமக்கு கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இருக்க வேண்டும் . ஞானமாய் நடக்க உண்மையாய் வாஞ்சிப்பாயானால், கர்த்தருக்கு பயப்படுகிற பயம் உனக்கு தானாக வந்துவிடும். ஞானத்தினால் தான் நம் வீடு கட்டப்படும். ஞானம் தன் வீட்டை கட்டும். ஞானத்தினால் தான் தேவன் இந்த ஆகாயவிரிவையே ஸ்தாபித்தார்.

நீதிமொழிகள் இரண்டாம் அதிகாரம் மூன்றாம் வசனம் முதல் வாசித்துப் பாருங்கள்.

வாழ்க்கையில் நம் வெற்றியாளராக சிறக்க நம்முடைய ஆளுமை திறன் வளர்ச்சிக்கு 7 காரியங்கள் மிகவும் தேவை. அவை.

  • ஞானம்
  • அறிவு
  • புத்தி
  • விவேகம்
  • நீதி
  • நியாயம்
  • நிதானம்

                     இந்த ஏழும் நமக்கு வேண்டுமெனில் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நம்மில் காணப்பட வேண்டும். இந்த ஏழும் தான் உன்னுடைய குடும்பத்தை, ஊழியத்தை, வியாபாரத்தை வளர்ச்சி அடைய செய்யும் காரியங்களாய்  இருக்கும்.

  1. கர்த்தருக்கு பயப்படும்பொழுது வளமான வாழ்வு நமக்கு கிடைக்கும்.

நீதிமொழிகள் 19:23 கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

               கர்த்தருக்கு பயப்படுதல் என்பது உங்கள் வாழ்க்கைக்குரிய, ஜீவனுக்குரிய ஒன்று. வாழ்வியலுக்கு ஏதுவான ஒன்று. வளமுடன் வாழ்வதை குறிக்கிறது.  கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நம்மில் இருந்தால் நம்முடைய வாழ்வியலில் மாற்றம் ஏற்படும். கர்த்தருக்குப் பயப்படுகிறவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. கர்த்தருக்கு பயப்படும் பொழுது ஐஸ்வர்யமும், மகிமையும், வளமான வாழ்வும் உண்டாகும்.

                      நீதிமொழிகள் 14:27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

கர்த்தருக்கு பயப்படும் பொழுது வளமான வாழ்வு ஊறிக்கொண்டே இருக்கும். சத்துருக்களின் போராட்டம் எங்களது வாழ்க்கையில் எவ்வளவாய் பெருகின போதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சி குறையவேயில்லை. கர்த்தருக்கு பயப்படும் பொழுது ஜீவ ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும். கர்த்தருக்குப் பயப்படுகிறவன் மரணக்கண்ணிகளுக்குத் தப்புவான்.

  1. கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது நன்மை குறைவுபடாது

சங்கீதம் 34:9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக்  குறைவில்லை.

 

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்று வேதத்தில் பார்க்கிறோம். கர்த்தருக்கு பயப்படும் பொழுது  நன்மை என்று சொல்லுகிற ஒன்றும் குறைவுபடாது. பொல்லாதவர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது, பரமபிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானதை கொடுப்பது அதிக நிச்சயமாமே.

நன்மை செய்வதில் சோர்ந்து போகாதீர்கள் என்றார். நமக்கு நன்மை செய்யும் படியாக அவர் காத்திருக்கிறார்

  1. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நம்மில் காணப்படும் பொழுது நம்முடைய சந்ததி ஆசீர்வதிக்கப்படும்

     சங்கீதம் 103:17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

 

நீதிமொழிகள் 14:26 கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

 

கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நம்மில் காணப்படும் பொழுது நம்முடைய சந்ததி ஆசீர்வதிக்கப்படும். இன்றைக்கு துன்மார்க்கமாய் வாழ்கிறார்கள். குடும்பத்தில் ஆசீர்வாதங்களை பார்க்க முடியவில்லை. இந்த வசனத்தில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தை நாம் பற்றி கொண்டு பின்பற்றும்போது, கர்த்தருக்கு பயந்து வாழும் பொழுது நம்முடைய சந்ததியை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

                    நம்முடைய அலுவலகங்களுக்கு நாம் பிந்தி செல்வோமா? கர்த்தருக்கு ஆராதனை நடக்கும் போது சபைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருப்போமா?

நான் எஜமானனால் எனக்குரிய கனம் எங்கே? என்று கர்த்தர் கேட்கிறார். அருண்சவுரி ஒரு பெரிய intellectual giant . அவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் MISSIONS IN INDIA அந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு எழுதுகிறார். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அல்ல. பிரியமானவர்களே! அவருடைய அவருடைய மகள் வளர்ச்சி குன்றியவர்கள். என்னுடைய தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டேன். அந்த தெய்வங்கள் எல்லாம் அவளை காப்பாற்றவில்லை. ஆனால் மற்ற தெய்வங்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதவில்லை என்று எழுதுகிறார். இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

அவர் எழுதுகிறார். ஏன் நான் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை? சபையில் ஆராதனை நடக்கும் போது வெளியே நின்று 2 பேர் பேசிக்கொண்டிருக்கிறான். போதகர் பயமில்லாமல் சொல்லுகிறார் அவன் இறந்துவிட்டால் அவன் பரலோகத்துக்கு போவான். கல்லிலே தெய்வத்தை கண்டு தெருவிலே விழுந்து வணங்குகிறவன் இறந்து விட்டால் நரகத்திற்குப் போவான் என்கிறார்களே! சபையில் ஆராதனை நடக்கும் போது வெளியே நின்று பேசிக் கொண்டிருப்பவன் இறந்து விட்டால் பரலோகத்துக்கு போவானா ? இதுதானா கிறிஸ்தவம் என்று கேட்கிறார். இவர் ஜீவன் உள்ள தேவன் என்று சொன்னால் அவருக்கு பயப்படுகிற பயம் எங்கே? கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நம்மில் காணப்பட வேண்டும்.

கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நம்மில் காணப்பட்டால் நம்முடைய பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக அமையும். நம்முடைய வாழ்க்கை நம்முடைய பிள்ளைகளுக்கு சாபமாக மாறிவிடக் கூடாது. நீ பிள்ளையாண்டானை நடக்க வேண்டிய வழியிலே நடத்து முதிர் வயதிலும் அவன் அதை விடாதிருப்பான் என்று வசனம் கூறுகிறதே. பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியிலே நடத்துங்கள்.

                  நீதிமொழிகள் 14:26 கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

லூக்கா 1:50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.

கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது அவருடைய கிருபை நம்மில் காணப்படும. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது

  1. கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது அவர் பிரியம் நம் மேல் இருக்கும்.

                    சங்கீதம் 147:11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

சங்கீதம் 103:11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

கர்த்தருக்கு பயந்து நடக்கும் போது அவருடைய கிருபை, இரக்கம், பிரியம் உங்கள் மேல் காணப்படும் தாம் தெரிந்து கொண்ட வழிகளில் கர்த்தர் நம்மை நடத்துவார் அவருடைய வழியை நமக்கு போதிப்பார். அவருடைய சந்ததி தலைமுறை தலைமுறையாக ஆசீர்வதிக்கப்படும். கர்த்தருக்கு பயந்து நடக்கும் போது அவருடைய உடன்படிக்கையை நமக்கு வெளிப்படுத்துவார். கர்த்தருக்கு பயந்து அவருக்கு காத்திருங்கள் அப்போது அவருடைய பிரியம் உங்கள் மேல் காணப்படும் அவர் சொன்னபடி நாம் செய்தால் அவர் பிரியம் உங்கள் மேல் இருக்கும்.

கர்த்தருக்கு பயப்படுகிறதினால் வரும் ஆசீர்வாதங்கள்:

  1. கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது ஞானம் கிடைக்கும்.
  2. கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது வளமான வாழ்வு நமக்கு கிடைக்கும்.
  3. கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது நன்மை குறைவுபடாது.
  4. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நம்மில் காணப்படும் பொழுது நம்முடைய சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
  5. கர்த்தருக்கு பயந்து நடக்கும் பொழுது அவர் பிரியம் நம் மேல் இருக்கும்.

கர்த்தருக்கு பயந்து நடந்து 5 ஆசீர்வாதங்களை குறித்து அறிந்து கொண்ட நாம் மீதமுள்ள 5 ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போமா!!

                                            அடுத்த வார செய்தியில்….

Share with