God Casts Off His People? | தேவன் தம் ஜனத்தை தள்ளிவிட்டார்? | Devan Tham Janangalai Thallivittaar?
Message Title / தேவ செய்தி தலைப்பு: God Casts Off His People? | தேவன் தம் ஜனத்தை தள்ளிவிட்டார்? | Devan Tham Janangalai thallivittaar?
Message Date / தேவ செய்தி நாள்: 26 June 2022 | 26 ஜூன் 2022
Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
God Casts Off His People? | தேவன் தம் ஜனத்தை தள்ளிவிட்டார்? | Devan Tham Janangalai Thallivittaar? | Message | Tamil | Pr Robert Simon | Carmel Ministries | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Carmel Ministries
Sermon Abstract:
சங்கீதம் 77:1 முதல் 20 வரை உள்ள வசனங்களை தியானிக்கலாம்.
சங்கீதம் 77 மிகவும் அருமையான ஒரு வேத பகுதி. இந்த சங்கீதத்தின் தலைப்பு ஆசாபின் சங்கீதம். எந்த சங்கீதத்தை எடுத்தாலும் தாவீது சொல்லியிருப்பார் என்று நாம் சொல்லுவோம். இந்த சங்கீதத்தை ஆசாப் எழுதியுள்ளார்.
1 நாளாகமம் 25 : 1 கூறுகிறது – மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; ..
ஆசாப் ஒரு தீர்க்கதரிசி. எதுதூனும் ஒரு தீர்க்கதரிசி. இவர்கள் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.
ஆசாப் இந்த சங்கீதத்தை எழுதி எதுதானிடம் கொடுத்தான். நம்முடைய வேதாகமத்தில் ஆசாப் எழுதியதில் 12 சங்கீதங்கள் காணப்படுகிறது .
சங்கீதம் 77 இல் உள்ள 20 வசனங்களில் இருந்து ஏழு குறிப்புகளை காணலாம்.
- ஆத்தும வியாகுலம்
- ஆவியின் ஆராய்ச்சி
- ஆய்வின் பயன்
- ஆவியின் விழிப்பு
- ஆத்தும வெளிச்சம்
- ஆழங்கள் அவரைக் காணும்
- ஆண்டவர் நடத்துவார் ஆமென்.
1. ஆத்தும வியாகுலம்
சங்கீதம் 77:1 – நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
தாவீது தன் மகன் அப்சலோமால் விரட்டப்பட்டதை குறித்து வேதனை ஒரு பக்கம் . ஆசாப் தேவனை நோக்கி தனது கலக்கமான நேரத்தில் கெஞ்சி கேட்கிறார். எனது ஆத்துமா ஆறுதல் அடைய மறுக்கிறது. அவர் இரவு பகலாக ஜெபித்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. நான் ஜெபிக்கும் போது என் ஆவி தொய்ந்து போயிற்று . இரவிலும் அவரது கை தளராமல் ஜெபத்தில் இருந்தது. அதற்கு ஆண்டவர் செவி கொடுத்தார்.
தாவீதின் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்த ஆசாப் சாலமோனின் காலத்திலும் வாழ்ந்து வருகிறான் . சாலமோன் காலத்து நிகழ்வுகளை குறித்தும் ஆசாப் வேதனை அடைகிறான் .
- ஆவியின் ஆராய்ச்சி
சங்கீதம் 77: 5 – பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
சங்கீதம் 77: 6. – இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக் கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சி செய்தது.
ஆசாப் தான் எழுதின சங்கீதங்களை குறித்து ஆராய்ச்சி செய்கிறான். அந்த ஆராய்ச்சியின் முடிவு- அவன் சிந்திக்கிறான், ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளி விடுவாரோ? அவருடைய கிருபையும் முற்றிலுமாய் அற்றுப் போயிற்றோ? நிறைய வாக்குத்தத்தங்கள் தந்தாரே- அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதோ? ஆண்டவர் இரக்கம் செய்ய மறந்தாரோ? இப்படியெல்லாம் ஆசாபின் மனம் ஆராய்ச்சி செய்தது. சேலா.
- ஆய்வின் பயன்
சங்கீதம் 77: 10 – அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
கடல் கொந்தளித்தது. கப்பல் ஆடியது. இயேசு படகில் இருக்கிறார். அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்.
நீங்கள் கடல் கொந்தளிக்கும் போது, பதறிப் போகும் இயேசுவின் சீடர்களாக இருக்க விரும்புகிறீர்களா?
அல்லது
கடல் கொந்தளிக்கும் போது நன்றாக படுத்து தூங்க கூடிய இயேசுவாக இருக்க விரும்புகிறீர்களா? யாரை பின்பற்ற விரும்புகிறீர்கள்? பிரச்சனைகள் வந்தால் நன்றாக படுத்து தூங்கி விடுங்கள். எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். ஜெபம் செய்யுங்கள் .
யாக்கோபை சிரச்சேதம் பண்ணிவிட்டாயிற்று. இப்பொழுது பேதுருவை சிரச்சேதம் பண்ணப் போகிறார்கள். பேதுரு நன்றாக படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறான். எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
4. ஆவியின் விழிப்பு
உம்முடைய பூர்வ காலத்து நன்மைகளை, நீர் எங்கள் முற்பிதாக்களுக்கு செய்த அதிசயங்களை எல்லாம் நினைவு கூருவேன். உம்முடைய கிரியைகளை எல்லாம் நினைவு கூருவேன். உன்னதமானவருடைய வலது கரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
5. ஆத்தும வெளிச்சம்
சங்கீதம் 77: 10 – அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
சங்கீதம் 77: 11 – கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
இப்பொழுது அவனுடைய ஆத்துமாவிற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கிறது. இது என் பலவீனம். எல்லாம் அவர் கையில் இருக்கிறது என்னுடைய எதிர்காலம் அவருடைய கையில் இருக்கிறது.
- என்னுடைய வருஷங்கள் அவருடைய வலது புறத்தில் இருக்கிறது.
- அவருடைய செயல்களை நினைவு கூருவேன்.
- அண்ட சராசரங்களை படைத்தவர், எவ்வளவு பெரிய தேவன் என்னுடைய தேவன். உம்முடைய பூர்வ காலத்து அதிசயங்களை எல்லாம் நினைவு கூருவேன்.
- உம்முடைய கிரியைகளை எல்லாம் நினைவு கூருவேன்.
- உம்முடைய செயல்களை குறித்து பேசுவேன்.
சங்கீதம் 77: 13 – தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
ஆலயத்துக்கு வரும் பொழுது வேதவசன வெளிச்சங்கள் கிடைக்கிறது. என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு உங்களுடைய பரிசுத்த ஸ்தலத்தில் உள்ளது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து உம்முடைய புயத்தினாலேயே மீட்டுக்கொண்டீர். ஆச்சரியமே! அதிசயமே! ஆண்டவரின் செயல்கள் ஆதி பக்தரிடம்!.
- ஆழங்கள் அவரைக் காணும்
சங்கீதம் 77: 16 – ஜலங்கள் உம்மைக் கண்டது; தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
பஞ்ச பூதங்களுக்கு தெரியும். என் தேவன் யார் என்று!
சங்கீதம் 77: 19 – உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.
பெரிய கடல் இருக்கிறது . சிவந்த சமுத்திரம் இருக்கிறது. அங்கே அவருக்கு ஒரு வழி இருக்கிறது. வைப்பாய் உன் காலடி! தற்பரன் சொற்படி! என்ன நிந்தனைகள் வந்தாலும் என்னை கர்த்தர் கைவிடமாட்டார்.
தேவனே சமுத்திரத்தில், எரிகோ கோட்டை முன், எங்களுக்கு முன்பதாக நடந்து செல்கிறீர்கள். ஆனாலும் உமது காலடிகள் எங்களுக்கு தெரியாமல் போயிற்று. தடைகளை உடைத்தெறிகிற தளகர்த்தர், என் கர்த்தர் என் முன்னே போகிறார்!
7. ஆண்டவர் நடத்துவார்.
சங்கீதம் 77: 20 – மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.
ஆண்டவரே! அன்று மோசேயை வழிநடத்தினீர் . இன்று என்னையும் வழி நடத்துவீர். நான் கலங்க மாட்டேன். சோர்வோடு வந்திருக்கும் உங்களுக்கு, கர்த்தர் பெரிய ஆறுதலை தருகிறார். இரவெல்லாம் அழுது ஜெபித்த உங்களுக்கு ,பெரிய அற்புதத்தை தேவன் செய்வார்.
ஆசாப் ஒரு பெரிய தீர்க்கதரிசி, சிறந்த பாடகன். அவனே கலங்கி போனான். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும், கர்த்தர் நம்மை மறந்தாரோ என்று நாம் சில வேளைகளில் எண்ணுகிறோம், தாய் தன் பாலகனை மறந்தாலும் கர்த்தர் நம்மை மறக்க மாட்டார். கர்த்தர் ஒருபோதும் தன் ஜனத்தை தள்ள மாட்டார் . ஆமென்.