Message Title / செய்தி தலைப்பு: Our Walk – New Life Walk – Part – 1 | நமது நடை – நவ வாழ்வு நடை – பாகம் 1
Message Date / நாள் : 10 January 2020 10 ஜனவரி 2021
Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்
ஒவ்வொரு செய்தியும் தனிப்பட்ட முறையில் கர்த்தர் எனக்கு அருளும் செய்தியாக இருக்கிறது. நவ வாழ்வு நடை, இதன் ஒரு பகுதியை குறித்து பேசுகிறேன். புதிய ஜீவனோடு கூட நாம் நடக்க வேண்டும் கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல. கிறிஸ்தவம் என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசு நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும்.
நீங்களாகவே ஒரு நடையை தெரிந்து கொள்ள கூடாது. புதிய ஜீவனில் நடக்க வேண்டும். புதுவாழ்வு வாழ வேண்டும் என்று வேதம் கூறுகிறது. நம்முடைய பழைய மனிதன் அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டு விட்டான். முந்தின பழைய மனிதனை களைந்து, முந்தின வாழ்க்கை முறையை எடுத்துப் போடுங்கள். அது கடைசியில் நம்மை மோசம் போக்கிவிடும்.
பரலோகத்துக்கு போகும் எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். என்னுடைய ஆவி புதிதாக. நம்மை சிருஷ்டித்த அவருக்கு உரிய சாயலுக்கு ஒப்பாய் பூரண அறிவை அடையும்படிக், ஒரு தேவ சாயலாக நாம் மாற வேண்டும். என்னை பார்ப்பவர்கள் புதிய மனிதனாக பார்க்க வேண்டும்.
எப்படி என்னை புதிய மனிதனாக காட்ட முடியும்?
ஞானஸ்நானம் பெரும்பொழுது புதிய மனிதனாக காட்ட முடியும்.
புதிதான ஜீவன் உள்ளவர்களாக நாம் நடக்க ஏழு காரியங்களை நாம் பின்பற்றவேண்டும்.
1. மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசேயர் 3:1 இவ்வாறு கூறுகிறது,
“நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்”
கிறிஸ்துவோடு கூட எழும்பும் நாம், கிறிஸ்து உடனே கூட இருந்திருப்போம். இயேசு கிறிஸ்துவோடு கூட நாம் எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேட வேண்டும். என்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தால் நான் பரலோகம் போகமுடியும் என்று மேலானவைகளையே தேடுங்கள், நாடுங்கள்.
நாம் கர்த்தருடைய காரியத்தை பார்க்க பார்க்க, கர்த்தர் நம்முடைய காரியங்களை பார்ப்பார்.
சத்தியத்திற்கு கீழ்ப்படியவில்லையெனில் நவ வாழ்வு எப்படி வரும்?
2. வாயில் வம்பு வார்த்தைகள் வரக்கூடாது உங்களது வாயில் வம்பு வார்த்தைகள் வரக்கூடாது. அப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் பரலோகத்திற்கு போக முடியாது.
3. பொய் சொல்லாதீர்கள்.
நாம் எல்லாரும் கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். பொய் சொல்லாதிருப்போம். பொய்யர் அனைவரும் அக்கினியும், கந்தகமும் எரிகிற இரண்டாம் மரணமாகிய நரகத்திற்கு தள்ளப்படுவார்கள் என்று வசனம் கூறுகிறது.
Pastor Franklin Simon, பொய் என்பது நீ பேசுவதில் இல்லை மற்றவர்களை நம்ப பண்ணுவதில் இருக்கிறது என்றார்.
4. ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3: 13 இவ்வாறு கூறுகிறது
“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்”.
நீங்கள் ஒவ்வொருவரும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தர். ஏதோ ஒரு நோக்கத்திற்கு, தேவன் ஒவ்வொருவரையும் தெரிந்து கொண்டுள்ளார். நான் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். பரிசுத்தன் மட்டுமல்ல தேவனுக்கு பிரியமானவன் கூட. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
5. உருக்கமான மனதுருக்கம்.
பாடை பின்னால் அந்த தாயார், அழுது கொண்டு வருவதை இயேசு கண்டு மனதுருகினார். நாமும் பிறர் கஷ்டப்படுவதை பார்க்கும்பொழுது இரக்கப்படவேண்டும். எப்படி இந்த இரக்கம் வரும்? அவர்கள் பார்க்கும் காரியத்தை நம்முடையதாக கருதி பார்க்கும் பொழுது உருக்கமான இரக்கம் நமக்குள் வரும்.
நவ வாழ்வு நடை பயில
- மேலானவைகளையே நாடவேண்டும்
- வம்பு, தூஷணம் நம்முடைய வாயிலிருந்து புறப்படக் கூடாது
- பொய் பேசாதீர்கள்
- ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
- உருக்கமான மனதுருக்கம் காணப்பட வேண்டும்
பிரியமானவர்களே! இப்புதிய ஆண்டிலே நவ வாழ்வு நடை நடந்து, இயேசுவண்டை சேர்வோமா!!