PRAISE OF YAHWEH, MY MOUTH SPEAK | யாவேயின் துதி, என் வாய் சொல்லட்டும் !! | Yahwehyin Thuthi, En Vaai Sollatum !! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு : PRAISE OF YAHWEH, MY MOUTH SPEAK | யாவேயின் துதி, என் வாய் சொல்லட்டும் !! | Yahwehyin Thuthi, En Vaai Sollatum !!

Message Date / தேவ செய்தி நாள் : 22 September 2024 | 22 செப்டம்பர் 2024

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் திரு. இராபர்ட் சைமன்

PRAISE OF YAHWEH, MY MOUTH SPEAK | யாவேயின் துதி, என் வாய் சொல்லட்டும் !! | Yahwehyin Thuthi, En Vaai Sollatum !! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

இன்றைய தினத்தில் நாம் சங்கீதம் 145 – ஐ குறித்துப் பார்க்கலாம்.

150 சங்கீதங்களில் இந்த ஒரே சங்கீதம் மட்டும் தான் சங்கீதம் (அ) துதிப்பாடல். இந்த சங்கீதம் அநேக வகைகளில் விசேஷித்தது. ஒருவர் ஒரு நாளைக்கு, மூன்று முறை இந்த சங்கீதத்தை சொல்லுவாரானால் வரப்போகிற உலகத்திற்கு உரிய தகுதியை, வரப்போகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள இந்த சங்கீதம் உதவுகிறது .

யூத ஜெப ஆலயங்களில் காலை ஆராதனையில் இரண்டு முறையும், மாலை ஆராதனையில் ஒரு முறையும், இந்நாள் மட்டுமாக இந்த சங்கீதம் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த சங்கீதத்திலிருந்து ஆறு குறிப்புகளை பார்க்கலாம்.

I. தேவனுடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்
சங்கீதம் 145:1-3
1. ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
2. நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
3. கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்;

தேவனுடைய பெயர்கள் எல்லாம் அவருடைய நாமத்தை வெளிப்படுத்துகிறது. அவர் ராஜாதி ராஜா, அவர் பரிசுத்தர், வல்லமை உள்ளவர்.

II. அவருடைய வல்லமையான செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்
சங்கீதம் 145:4 – 6
4. தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
5. உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.
6. ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.

கர்த்தர் மோசேக்கு கொடுத்த வாக்குத்தத்தத்திற்காக மோசே கர்த்தரை துதித்தார். இனி தப்பிப்பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப் போயிற்று. அந்த சூழ்நிலையிலும் கர்த்தரை துதியுங்கள். தப்புவித்தார் இனியும் தப்புவிப்பார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாதது.

III. அவருடைய தயவுக்காக, இரக்கத்திற்காக அவரைத் துதியுங்கள்

சங்கீதம் 145:7 – 10
7. அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்..
8. கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
9. கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது.
10. கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பமே தயவு. என் பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டு ஏற்ற வேளையில் எனக்கு தயவாய் இறங்குகிறார். இயேசு மனதுருக்கம் நிறைந்தவர். நாயினூர் விதவையின் நிகழ்ச்சியை குறித்து வேதத்தில் பார்க்கும்போது இறந்தவர் பிணம் ஊரை விட்டு செல்லுகிறது. நம்பிக்கை நட்சத்திரம், ஜீவன் ஊருக்குள் வந்து கொண்டிருக்கிறது. அந்த பிணத்தை பார்த்து இயேசுவின் மனம் உருகிப் போனது. அவர் மனதுருக்கம் உள்ளவர். சாந்த குணம் உள்ளவர். அவர் தயவுடனே இறங்கினார். அதிசயமும் அற்புதமும் நடந்தது.

IV. தேவனுடைய சர்வ ஆளுகைக்காக அவரை துதியுங்கள்

சங்கீதம் 145:11 – 13
11. மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
12. உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
13. உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவுமுள்ளது.
இயேசு கிறிஸ்து மற்றும் யோவானின் முதல் பிரசங்கமே பரலோக ராஜ்ஜியம் சமீபத்து இருக்கிறது என்பதாகும். ராஜாதி ராஜா என்னுடைய தேவைகளை சந்திப்பார். எல்லாம் அவருடைய ஆளுகைக்குள்ளாக வரவேண்டும்.

V. தேவனுடைய அன்பின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்

சங்கீதம் 145:14 – 17

14. கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
15. எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
16. நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
17. கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

அவருடைய அன்பின் செயல்களுக்கு நிகரே இல்லை. மடங்கடிக்கப்பட்டவர்களை கர்த்தர் தூக்கி விடுகிறார். நன்மை குறைவுபட விடமாட்டார். ஒரு நெருக்கத்தை கர்த்தர் அனுமதித்தாலும் அதிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.

VI. நமது ஜெபங்களுக்கு பதில் கொடுப்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள்

சங்கீதம் 145:18 – 19

18. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
19. அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
என்னை சுற்றிலும் வேலி அடைத்து, என்னை யாரும் அணுகாதபடி பாதுகாப்பார். என்னை சுற்றிலும் நெருக்கங்கள் வந்தது. என் தேவன் என்னை ஒருபோதும் கைவிடவில்லை. எலிசாவை சுற்றிலும் அக்னி, ரதங்கள் வந்த போதும் எலிசாவை காத்துக் கொண்டார்.

VII. தேவன் நம்மை வேலி அடைத்து பாதுகாப்பதற்காக அவரைத் துதியுங்கள்

சங்கீதம் 145:20 – 21

20. கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.
21. என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

இந்த தேவன் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். இந்த தேவன் என்றென்றும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர். .அந்த யாவேயை துதிக்கும் துதி எப்பொழுதும் என் வாயில் இருந்து கொண்டே இருக்கும்!!! ஆமென்! ஆமென்!!

யாவேயை எப்பொழுதும் துதித்திடுவாய்!

யாவரையும் காப்பவரை துதித்திடுவாய்!

யாக்கோபின் தேவனையே துதித்திடுவாய்!

யாவற்றையும் அருள்வோனை துதித்திடுவாய்!!!

Share with