Message Title / தேவ செய்தி தலைப்பு : Things What You Have | உங்களுக்கு இருக்கிறவைகள் | Ungaluku Irukiravaigal
Language / தேவ செய்தி மொழி : Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள் : 18 April 2021 | 18 ஏப்ரல் 2021
Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்
Things What You Have | உங்களுக்கு இருக்கிறவைகள் | Ungaluku Irukiravaigal | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
நாள் : 18 ஏப்ரல் 2021
தலைப்பு : உங்களுக்கு இருக்கிறவைகள்.
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.
இன்றைய தலைப்பு கிறிஸ்துவுக்குள்ளாக, ஆவிக்குரிய பிரகாரமாக உங்களுக்கு ஒரு ஊக்க உரை. சாக்ரடீஸ் கூறுவாராம் நீ யார் என்று முதலில் அறிய வேண்டும். மனிதனுக்குள்ளே உள்ள ஆற்றலை மனிதன் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.
தேவன் எப்பொழுதுமே அவருடைய பணியில் நம்மை ஊக்கப்படுத்த விரும்புகிறார். தேவனுடைய பார்வையில் நீ என்ன நிலையில் இருக்கிறாய்? என்பதை முதலில் நீ அறிந்து கொள்ள வேண்டும்.
எபிரெயர் 13:5,6
5.”நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே”.
6. “அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே”.
ஏழு காரியங்களை குறித்து நாம் பார்க்கலாம்.
I. நம்முடைய மூலதனம்: கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் கிருபைகள், தாலந்துகள் (Our Capital).
உங்களுக்கு இருக்கிறவைகளை அடையாளம் காணுங்கள்.
உங்களை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்யப் போகிறார்.
யாத்திராகமம் 4:17 இவ்வாறு கூறுகிறது
“இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்”.
மோசே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஆண்டவர் சொல்லுகிறார், “இந்த கோலை வைத்துக்கொண்டு நீ போ. இதைவைத்து நீ அடையாளங்களை செய்வாய்” என்றார். உங்களிடத்தில் என்ன உள்ளதோ அதை வைத்துக் கொண்டு போங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
எப்பொழுதும் ஆண்டவர் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?
உங்களிடத்தில் என்ன இருக்கிறது?
உங்களுக்கு எழுதப்படிக்க தெரிகிறது. கை கால் நன்றாக உள்ளது. வண்டி ஓட்ட தெரியும். இதை வைத்து கர்த்தர் உங்கள் மூலமாக என்ன செய்யப் போகிறார்? பிரியமானவர்களே! உங்களிடம் இருக்கிறதை கொண்டு உங்களுக்கு பெரிய அற்புதங்களை கர்த்தர் செய்வார். இதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
II. உங்களுக்கு என்ன இருக்கிறதோ அது போதும் என்ற மனநிலை வேண்டும் (Our Contentment).
போதும் என்கிற மனதுடனே கூடிய பெலனே பெரிய சக்தி , ஆதாயம். உண்ணவும், உடுக்கவும் நமக்கு இருந்தால், அது போதும் என்று இருக்க கடவோம் . கிறிஸ்துவுக்குள்ளாக நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். உன்னைக் கொண்டு கர்த்தர் செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கும்.
1 தீமோத்தேயு 6 : 6,7 இவ்வாறு கூறுகிறது
6. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
7. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
111. உங்கள் வாழ்க்கை முறையில் பண ஆசை இல்லாதவர்களாக நடந்து கொள்ளுங்கள் (Be Not Be Covetous).
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.
1 தீமோத்தேயு 6 : 9, 10 இவ்வாறு கூறுகிறது
9.ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நீதிமொழிகள் 30: 15,16 இவ்வாறு கூறுகிறது
15. “தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு”.
16. அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.
திருப்தியடையாதவர்களுக்கு நிறைய பிள்ளைகள் உண்டு.
IV. கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை சார்ந்து கொள்ளுங்கள் (Lean on God’s Promises).
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே”. நமக்கு இருக்கும் பெலன் அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை சார்ந்து கொள்ளுவது.
V. தேவன் நம்முடனே இருப்பதை நாம் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும் (Experience God’s Presence).
நாம் அனுபவிப்பதை விசுவாசிக்க வேண்டும் நாம் விசுவாசிப்பதை அனுபவிக்க வேண்டும்.
VI. அதனாலே தைரியம் கொண்டு (Be Bold).
நீதிமொழிகள் 28:1
“ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்”.
எல்லாரும் கோலியாத்தை கண்டு ஓடும் பொழுது ஒரு சின்ன பையன் அவனுக்கு எதிரே ஓடுகிறானே அவன் தான் தைரியசாலி. இன்றைக்கு நாங்கள், இந்த விசுவாச ஊழியத்திற்கு, ஊழியம் செய்வதற்கு, கர்த்தர் எங்களுக்கு பெரிய அற்புதங்களை செய்தார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள்.
VII. வாயினால் அதை சொல்லுங்கள் (Confess Your Faith).
ரோமர் 10:10
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
நம்முடைய வாயின் வார்த்தைக்கு வல்லமை உண்டு. கர்த்தர் கண்டிப்பாக, நிச்சயமாக இதை செய்வார், என்று நாம் சொல்லும் போது, நிச்சயமாக கர்த்தர் நமக்கு செய்வார்.
நீதிமொழிகள் 18:21
21.“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”.
ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார், என்னை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். நான் நம்பி இருக்கிற தேவன் பெரியவர். அவர் எனக்கு துணைபுரிவார். நான் தண்ணீரை கடக்கும் போது அவர் என் கூடவே இருக்கிறார். விக்கினங்கள் கடந்து போகும் மட்டும் அவர் என்னை செட்டைகளின் மறைவில் வைத்து பாதுகாக்கிறார் என்று, நாம் சுவாசிப்பதை, வாயினால் அறிக்கை பண்ண வேண்டும். அவரை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
இந்த தேவன் எங்களை தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இனிமேலும் எங்களை தப்புவிப்பார். அதினாலே நாம் தைரியம் கொண்டு நம்முடைய வாழ்க்கையில் நன்மையும் கிருபையும் பெற்றுக்கொள்வோமா!
இந்த தேவ செய்தியை கேட்டு, நமக்கு இருக்கிறவைகளைக் கொண்டு, நம்மை நடத்தும் தேவனிடமாய் சார்ந்தது, தேவசகாயம் பெற்றுக்கொள்வோமா!