Vilittiru ! Vilippayiru !! – Pagam – 2 | விழித்திரு ! விழிப்பாயிரு !! – பாகம் – 2 | Watch ! Watch !! – Part 2 | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் தேவ செய்தி | Tamil Message | Pr. Robert Simon
Message Date / நாள் : 02 August 2020
Message Title / செய்தி தலைப்பு: Vilittiru ! Vilippayiru !! – Pagam – 2 / விழித்திரு ! விழிப்பாயிரு !! – பாகம் – 2|
Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்
பஸ்கா பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தேவாலயத்துக்கு தனது சீடர்களோடு இயேசு வருகிறார். ஆலயம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தனது சீடர்களோடு பேசும்போது, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி இந்த ஆலயம் இடித்து போடப்படும் இயேசு கூறுகிறார்.
அப்பொழுது சீடர்கள் அவரிடத்தில் கேட்கிறார்கள்,
இது எப்போது நடக்கும்?
உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன?
உலக முடிவின் அடையாளம் என்ன?
அடையாளம் என்னவென்று தம்மிடம் கேட்ட சீடர்களுக்கு இயேசுவானவர் அளித்த பதிலே, ஒலிவமலை சொற்பொழிவு. தன்னுடைய வருகையை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் சீடர்கள் கவனிக்க வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டளைகளை, 15 விழைவு வாக்கியங்களை இயேசு எடுத்துரைக்கிறார். அவருடைய வருகையை எதிர்நோக்கும் நமக்கும் பொருந்தும்.
அடையாளம் என்ன என்று கேட்பதை விட இந்த காலகட்டத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
- ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
- அப்படி ஏமாற்றுபவர்களை பின்பற்றாதீர்கள்.
- பயப்படாதிருங்கள். (அன்பு இருக்குமானால் அன்பு பயத்தை புறம்பே தள்ளி விடும்).
- எச்சரிக்கையாய் இருங்கள்.
- உங்கள் மனநிலையை கவலைக்கு இடம் கொடாதிருங்கள்.
கிறிஸ்தவம் என்பது அறிவு சார்ந்த மதம்.
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வசனம் சொல்லுகிறது.
அவருடைய சித்தத்தை பற்றிய அறிவு நமக்கு வேண்டும். சத்தியத்தை அறிகிற அறிவு வேண்டும். தெய்வத்தைப் பற்றிய அறிவு வேண்டும். காணாதவைகளைப் பற்றிய அறிவு வேண்டும். நித்தியத்தை பற்றிய அறிவு வேண்டும். தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய இருதயம் பாரப்படாதபடிக்கு, ஜாக்கிரதையாய் இருங்கள். இந்த சரீரம் தேவனுடைய ஆலயம். பரிசுத்த ஆவியானவர் இதில் குடியிருக்கிறார். நம்முடைய ஆத்துமாவை பொறுமையினால் (இயேசுவுக்கு இருந்த பொறுமை நமக்கு வேண்டும்) காத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட மணவாளனாகிய இயேசு, தன்னுடைய மண நாளுக்காக காத்திருக்கிறார். அவரோடு நாம் சேர வேண்டும். அவர் காத்திருப்பது போல் நாமும் காத்திருக்க வேண்டும். சொன்னவர் செய்வார். சீக்கிரத்தில் வருவார் கைவிடவே மாட்டார்.
கர்த்தர் சீக்கிரமாய் வரப்போகிறார் என்ற அறிவு வேண்டும்.
சீக்கிரத்தில் வரப்போகும் மணவாளனை எதிர்நோக்கும் நாம் எப்படி இருக்க வேண்டும்?
இந்த தேவ செய்தியை கேட்டு அறியலாமா?
மணவாளனை எதிர்கொள்ள ஆயத்தமா?
விழித்திரு! விழிப்பாயிரு!!
தேவ செய்தியை கேட்க ஆயத்தத்தோடே…..