Carmel 24 Hours Chain Prayer – April 25 – கர்மேல் 24 மணிநேர ஜெப சங்கிலி – ஏப்ரல் 25

கர்மேல் ஜெப சங்கிலி
ஏப்ரல் 25 (சனி), காலை 8 மணி முதல் ஏப்ரல் 26 (ஞாயிறு), காலை 8 மணி வரை

ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை

15 நிமிடங்கள்: துதி ஆராதனை, மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்
45 நிமிடங்கள்: மன்றாட்டு ஜெபம்

இந்தவார ஜெபக்குறிப்புக்கள்:
1. எல்லா தேவ ஊழியர்களுக்காக, குறிப்பாக நாம் உதவிவருகிற மிஷினரிகளுக்காக.

2. சரீர பெலவீனத்தோடுள்ள நமது கர்மேல் உறவுகளுக்காக, முதிர்வயதானோருக்காக பேர்பேராக.

3. ஊடகவாயிலாக பற்பல செய்திகளைக் கேட்கிறவர்கள், மாறுபாடான உபதேசங்களுக்கு தங்களை விலக்கிக் காத்துக்கொள்ள பாரத்தோடு, விழிப்புணர்வோடு (கொரோனாவைவிடக் கொடியது – ஒட்டினா, உள்ளபோனா body மட்டுமன்று, ஆத்துமாவும் close. Stay away. Stay safe).

4. குடும்பங்களில் தேவசமாதானம், சந்தோஷம் பூரணமாக காணப்பட – அன்பும், ஐக்கியமும் பெருக, ஒருமனம் ஒற்றுமை வளர்தோங்க.

5. ஞானமாய் நடந்து, தெய்வீக புரிதலோடு செயல்பட தேவையான ஞானம், விவேகம், கிருபை – தேவன் அருளிச்செய்ய.

6. சமூக, பொருளாதார, சமய, ஆன்மீக நிலைப்பாடுகளில் பெரும் மாற்றத்தோடு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையை சந்திக்கும் போது, ஆவிக்குரியவர்கள் தேவசித்ததின் மையத்தில் உறுதியாக நிற்க.

7. பரிசுத்தமாயிருக்கிறவர்கள், இன்னும் பரிசுத்தமாக; நீதிசெய்கிறவர்கள் இன்னும் நீதிசெய்ய, நற்கனிகளால் நிறைந்து வளமுடன் வாழ.

8. இந்த வாதையில் எல்லா திருச்சபைகளிலும் ஒரு சுத்திகரிப்பு உண்டாகும்படிக்கு.

9. பிதாவுக்குச் சித்தமானவர்களில் ஒருவராகிலும் கெட்டுபோகாதபடிக்கு.

10. கண்ணீரோடும், விண்ணப்பத்தோடும், ஆனந்தகளிப்போடும் நாம் கர்த்தரிடதில் திரும்ப, சபையாக ஜெபவீட்டில் கூடிவர.

பொதுவாக

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட

# பசி பட்டினியால் வாடுகிறவர்கள்மேல் தேவன் இரக்கம் பாராட்ட – பட்டினிச்சாவிலிருந்து மக்கள் காக்கப்பட

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப

# பெரியோரும், சிறியோரும் வீடுகளில் தேவனுக்குப் பிரியீனமானச் செயல்களில் ஈடுபட்டு தேவ கோபாக்கினையைக் கூட்டிக்கொள்ளாதபடிக்கு

# தேவநாம மகிமைக்கென்று இந்த வாதை ஆச்சரியமாக நிறுத்தப்பட

# பொருளாதார நெருக்கடியிலிருந்து அவரது பிள்ளைகள் காக்கப்படும்படிக்கு (சங் 34.10)
– வேலை இழந்தவர்கள்
– சம்பளம் இழந்தவர்கள்
– வியாபாரிகள்
– தொழில் முனைவோர்
– தேவ ஊழியர்கள்

# மனநிலையில், உளவியல் ரீதியாக எவ்வித பாதிப்பும் வராதபடிக்கு (ஏசா 26.3)
– அறைக்குள்ளேயே இருப்பது
– வெளியேச் சென்று நண்பர்களை, உறவுகளை சந்திக்க இயலாதது
– சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயலாமை
– பயம், திகில்
– எவ்வளவு காலம்? அடுத்து என்ன? … போன்ற கேள்விகள்
– தற்கொலைக்கான அறிகுறிகள்

# பஞ்சத்தின் விளைவாக ஏற்படும் சமூகவிரோத தீயச்செயல்களுக்கு கர்த்தர் தம் பிள்ளைகளை விலக்கிக் காத்திட

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக

# சீக்கீரத்தில் சபைகூடி விடுதலையுடன் தேவனை ஆராதிக்க

Carmel Chain Prayer
April 25(Sat) 08 AM to April 26(Sun) 08 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes: Praise and Worship, Sanctification Prayer
45 Minutes: Intercessory Prayer

THIS WEEK’S PRAYER POINTS:
1. Pray for all Servants of God, especially missionaries supported by us.

2. Pray, mentioning the names of all those Carmeleans who are not keeping well, Pray for the elders.

3. With burden and awareness pray that those who listen to diverse messages in social media are kept away from all erroneous teachings (More dangerous than Corona is ஓட்டினா (that which sticks) If that goes inside, not just body, your soul will also be lost. Stay away Stay Safe).

4. Pray for fullness of God’peace and joy in families – For love, unity and one-mindedness to grow.

5. Pray for God to grant us needed wisdom, understanding and grace to walk wisely with divine understanding.

6. Pray that when faced with a totally different social, economic, religious and spiritual setting, spiritual people should stand firmly in the centre of God’s will.

7. Him that is holy, let him be holy still; Him which does righteousness, let him do righteousness still and live a prosperous life filled with all good fruits.

8. Pray for a work of sanctification to take place in all the churches during this time of pandemic.

9. Pray that none of the God’s chosen are corrupted.

10. Pray that we all return, as a church, to our house of prayer with tears, with prayers, with abundant joy

General
# Medical professionals, Sanitation workers, Police force, Government employees, Merchants, and Bankers – welfare of Public Relation Officers to be preserved.

# Pray for God’s mercy upon all those who are suffering in starvation – no lives must be lost due to hunger.

# Pray that people, in their agony and pain, should not curse God. Bur rather return to him.
# Pray that both elder or younger ones should not engage in acts which are displeasing to God and thereby attract the wrath of God.

# For the Glory of God, pray that this plague is arrested in a miraculous way.

# Pray that His children are well preserved even during this economic crisis (Psalms 34.10).
– Those who lost their jobs
– Those who have lost their salary
– Business people
– Servants of God

# Pray that His children are well preserved even during this economic crisis (Psalms 34.10).
– Those who lost their jobs
– Those who have lost their salary
– Business people
– Servants of God

# Pray that people are not mentally or psychologically affected because of the following (Isa 26.3).
– Being confined to rooms
– Inability to go out and meet friends and relatives
– Inability to participate in important events, be it marriage or mourning
– Fear, anxiety
– How long? What next?…such questions
– Suicidal tendencies

# Pray for our Lord to preserve his people from all the anti-social activities which could creep up during this famine.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்
Pr. Robert Simon / இராபர்ட் சைமன்

Share with