Carmel 24 Hours Chain Prayer – January 22, 2021– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜனவரி 22, 2021
கர்மேல் 24 மணிநேர சங்கிலி ஜெபம் | வெள்ளி, 22 ஜனவரி மாலை 06 முதல் சனி, 23 ஜனவரி மாலை 06 வரை | ஒரு மணிநேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
துதி, ஸ்தோத்திர சுத்திகரிப்பு ஜெபநேரம்
15 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபவேளை 45 நிமிடங்கள் : ஜெபக்குறிப்புகள்:
ஜெபியுங்கள் !
1. கர்த்தருடைய பெரிதான கிருபையினால் நம்முடைய சபையில் கடந்த ஒரு சில வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஞானஸ்நான ஆராதனை நடைபெற்றுவருகிறது. கர்த்தர் சபையில் புதிய ஆத்துமாக்களை கொண்டுவரவும், ஞானஸ்நான ஆராதனை தொடர்ந்து நடைபெற விசுவாசிகள் ஊக்கத்துடன் பிரயாசப்பட கர்த்தர் பூரண கிருபை அருளவேண்டும்.
2. நம்முடைய இணையவழி சிறுபிள்ளைகள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வாதித்து வருகிறார். இந்த ஆண்டின் சிறுபிள்ளைகள் விழாவை சிறப்புடன் நடத்திட கர்த்தர் தாமே ஆலோசனையை தந்து தம்முடைய ஊழியர்களை நடத்திட.
3. உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர். டெல் மற்றும் சகோதரி. உமா அவர்களுக்காகவும், உங்களுக்கு தெரிந்து சுகவீனத்துடன் காணப்படும் வேறு கர்மேல் உறவுகளுக்காகவும் ஊக்கத்துடன் வேண்டிக்கொள்ளவும். தேவன் பரிபூரண சுகத்தை தந்து பெலப்படுத்தவேண்டும்.
4. நம்முடைய மிஷனரி குடும்பங்களை பெயர்பெயராக நினைத்து இந்த புதிய ஆண்டிலும் கர்த்தர் அவர்களை கொண்டு நிறைவேற்றவேண்டிய ஊழியங்களை நிறைவேற்றவும், மிஷனரிகள் மற்றும் குடும்பத்தினரின் சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தேவைகள் யாவும் குறைவின்றி சந்திக்கப்படவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
5. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. கர்த்தருக்கு சித்தமான ஒரு நல்லாட்சி அமைய பாரத்துடன் வேண்டிக்கொள்ளுங்கள்.
6. தமிழ்நாட்டில் நீண்ட இடைவேளிக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு பத்து மற்றும் பன்னிரெண்டாக் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. கர்த்தர் தாமே நம்முடைய பிள்ளைகளை தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுக்காக்கும்படிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
7. கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லும் நம்முடைய உறவுகள் ஒவ்வொருவரும் அவர் (இயேசு) நடந்தபடியே தாங்களும் நடந்து (1 யோவான் 2:6) புதிதான வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள (ரோமர் 6:4) கர்த்தர் கிருபை செய்யவேண்டும்.
8. சபை முழுவதும் அவர் விரும்பும் பரிசுத்தத்திலே வளர, அவருடைய பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாகும்படிக்கு நாம் அழைக்கப்பட்டவர்கள் (எபி 12:10) என்ற உணர்வோடு பரிசுத்தத்தில் வளர்ந்துபெருக, அந்த உணர்வை கர்த்தர் எல்லாருக்கும் கட்டளையிட
9. தேவப்பிள்ளைகள் எல்லா நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து தேவனையும, தேவனுடைய சித்தத்தை அறிகின்ற அறிவிலேயும் வளர. கர்த்தர் விரும்பாத, கர்த்தருக்கு வேதனையை தரக்கூடிய அசுத்தமும், அருவருப்பும் முற்றுமாக சபையைவிட்டு அகன்றுபோகவேண்டும்.
10. நம்முடைய பாஸ்டர் அய்யா, பாஸ்டர் அம்மா மற்றும் உடன் பணியாளர்களின் உடல் சுகம், பெலன், ஆரோக்கியம். கர்த்தர் தாமே தம்முடைய நிறைவான அபிஷேகத்தை அவர்கள்மேல் பொழிந்தருளி சபைக்கும், தேவபிள்ளைகலுக்கு அவர்கள் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.
CARMEL 24 HOUR PRAYER CHAIN | 22 JANUARY 06 PM TO 23 JANUARY 06 PM | ONE HOUR PRAYER OUTLINE
Praise and Worship : 15 Minutes
Intercessory Prayer : 45 Minutes
PRAYER POINTS
PRAY !
1. By the abundant mercies of God, we have been able to conduct Baptism Service for the past weeks in our Church. Pray and labour for the Lord to add more souls to his Kingdom and also for regular Baptism Services.
2. God has been richly blessing our Online Kids Corner ministries. Pray for God’s counsel and direction to conduct this year’s Children Rally in a special way.
3. Pray fervently for the deliverance and healing of Br. Del and Sr. Uma who are not doing well. Pray also for the healing of other loved ones known to you who are battling sickness and weakness.
4. Remember our Missionary Families individually. All the ministry plans for this year to be fulfilled with no obstacle whatsoever. God to grant good health, strength even to their children and for all the needs to be met.
5. Tamil Nadu is going to face Assembly Elections in a few months time. Pray that God commands a Government which is fully committed to the welfare of all its people is elected.
6. After a long interval schools for 10th and 12th Standards have re-opened this week. Pray for God to protect the children.
7. God to give grace to every Carmelean who says He/She is in Christ to walk in the way He (Jesus) walked (1 John 2:6) and chose to live in the newness of life (Romans 6:4).
8. Our church should grow and mature in the standard of holiness expected by God with the sure conviction that we have been called to be the partakers of his holiness (Heb 12:10).
9. People of God should fully submit themselves to God and His Will and grow in the knowledge of Knowing the Will of God.
10. Pray for Pastor and Pastoramma for God grant them good health and strength and new unction to fulfil their ministries and continue to be a blessing to the whole church.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்