Carmel 24 Hours Chain Prayer – June 20, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூன் 20, 2020

Carmel 24 Hours Chain Prayer – June 13, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூன் 20, 2020

கர்மேல் ஜெபசங்கிலி
ஜூன் 20, 2020 காலை 08:00 மணியிலிருந்து ஜூன் 21, 2020 காலை 08:00 மணிவரை

24 மணி நேரத்திற்கான ஓர் ஜெப உருவரை

15 நிமிடங்கள்: துதி ஸ்தோத்திரம், சுத்திகரிப்பு, பாவமன்னிப்பு ஜெபம் (கடந்த வார குறிப்புகளின் அடிப்படையில்)

45 நிமிடங்கள்: மன்றாட்டு ஜெபம்
ஊழியர்களுக்காக…(சங்கீதம் 35:27)

1. உடல் பெலவீனத்துடன் உள்ள நம்முடைய போதகரின் பூரண சுகம், புதுபெலன்.

2. போதகருக்கு உதவியாக இருக்கும் நம்முடைய பாஸ்டரம்மா, குடும்பத்தினர் மற்றும் அலுவலக பணியாளருக்கு தேவனால் வரும் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நீடித்திருக்க.

3. அனைத்து சபை போதகர்கள், சுவிசேஷகர்கள், மிஷனரிமார்களுக்கு தேவசுகம், தேவபெலன், தேவஆரோக்கியம் மற்றும் தீர்க்காயுசு உண்டாகி, அவர்கள் மூலமாக நிறைவேறவேண்டிய ஊழியங்கள் யாவும் தடையின்றி நிறைவேற.

4. தொடர்ந்து சபைகள் மூடப்பட்டுள்ளதால் ஊழியத்தினால் வரும் பிழைப்பு நலிந்துபோய் தவிக்கும் ஊழியர்கள் மற்றும் மிஷனரிகளின் தேவைகள் யாவும் தேவனால் ஆச்சரியமாய் சந்திக்கப்படவேண்டும். நன்மை ஒன்றும் குறைவுபடக்கூடாது.

உறவுகளுக்காக… (சங்கீதம் 37:25).

5. தொடர் ஊரடங்கினால் நம்முடைய உறவுகளில் அநேகருடைய தொழில் நலிந்துள்ளது, சிலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கர்த்தர் தாமே அவர்கள் தேவையை ஆச்சரியமாக சந்தித்து புதிய வாய்ப்புகளை உண்டாக்க.

6. வறுமை மற்றும் வருமான குறைவினால் குடும்பங்களில் சண்டை, சச்சரவு, போராட்டங்கள் ஒன்றும் ஏற்படாமல் குடும்பங்களில் அன்பும், இணக்கமும், விசுவாசமும் வளர்ந்தோங்கவேண்டாம்.

மாநிலத்திற்காக…

7. கொரோனா தொற்றின் பரவல் தமிழ்நாட்டில் வேகமாய் பரவிவருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் மேல் கர்த்தர் தயவாக இரங்கி நோயின் தொற்றை அடியோடு அகற்றவேண்டும்.

8. மாநில தலைவர்கள், அமைச்சர்கள், சுகாதார துறை அதிகாரிகள், மாவாட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசுப் அதிகாரிகள் தேவனால் வழிநடத்தப்பட்டு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும். நோயின் தொற்று ஆட்சியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் போன்றோரை தாக்காதபடிக்கும் அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

தேசத்திற்காக…

9. இந்திய சீன எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட போர் பதட்டத்தின் காரணமாக அநேக இந்திய படைவீரர்கள் உயிர் நீத்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளுடனான குழப்பங்கள் மாறி சமாதானம் நிலவவேண்டும்.

10. நம்முடைய தேசம் ஒன்றான மெய்த்தேவனையும், சத்தியத்தை அறிகின்ற அறிவுக்குள்ளாகவும் கடந்துவரவேண்டும்.

பொதுவாக

# வியாதி பெலவீனத்துடன் உள்ள நம் கர்மேல் உறவுகளை நினைத்துகொள்ளுங்கள். பூரண சுகத்தையும் ஆரோக்கியத்தையும் அனுபவித்து நலமுடன் வாழவேண்டும்.

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில் / மாநிலம் / நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.

CARMEL PRAYER CHAIN
June 20, 2020 08:00 AM to June 21, 2020 08:00 AM

24 Hour Prayer Outline

15 Minutes:
Praise and Worship, Prayer for sanctification and forgiveness (Refer previous week’s prayer points).

45 Minutes:
Intercessory prayer.

God’s Servants…(Psalms 35:27)

1. Complete recovery and renewed strength to our Pastor who is not keeping well.

2. God’s protection, good health, strength to our Pastoramma, family members and office staff who are taking care of our Pastor.

3. Good health, strength and length of days to all servants of God, evangelists, missionaries so as to fulfil all that God wants to accomplish through them.

4. Due to closure of churches, many a full-time servant and missionaries are struggling to meet their ends. God should miraculously meet all their personal and family needs. They should lack no good thing.

Loved ones of Carmel… (Psalms 37:25)

5. Many of our loved ones have lost their business, jobs due to this lockdown. God should meet all their needs and open up new avenues.

6. No strife, contentions and infightings in families to be be seen due to lack of income and poverty. Love, one-mindedness and faith must only grow.

Our State…

7. The Government has declared total lockdown in the four districts of Chennai, Chengelput, Tiruvallur and Kanchipuram for the next 12 days. Through immense mercies of God the spread of infection should get completely arrested.

8. Leaders of state, ministers, health secretaries and district collectors should only devise plans and programmes which are beneficial to all sections of people. MLAs, MPs, Ministers and Administrative should be protected from the spread of infection.

Our Nation…

9. Due to the tension at Indo-China border many of our soldiers have lost their precious lives. All the confusion prevalent with the neighbouring countries must be resolved and peace to be established.

10. Our nation should know the only true God and come into the knowledge of knowing the truth.

General

# Remember the dear ones of Carmel who are sick and weak. They must live a good life and enjoy supreme health and strength.

# Medicos, health workers, policeman, government staff, business people, bankers – the welfare of all public relation workers should be guarded.

# People, instead of cursing God amidst their pains, they must return to him.

# Pray for our loved ones who are stranded/staying in different states/districts and countries.

# God to stop this pandemic (Coronavirus) COVID-19 in a miraculous manner.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with