Carmel 24 Hours Chain Prayer – May 09 – கர்மேல் 24 மணிநேர ஜெப சங்கிலி – மே 09

கர்மேல் ஜெப சங்கிலி
மே 09, காலை 08 மணியிலிருந்து மே 10, காலை 08 மணிவரை

ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
15 நிமிடங்கள் : துதி ஆராதானை மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்
45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்

ஜெபக் குறிப்புகள்:
1. கர்மேல் ஆன்லைன் VBS மே 10 முதல் மே 15 வரை நடக்கவுள்ளது. இதை வழிநடத்தும் பாஸ்டரம்மாவுக்காக, இதனை ஒருங்கினைக்கும் Dr. பிரவீன், Sr.எப்ஸிபா, சிறுபிள்ளை ஊழியக்குழுவினர் மற்றும் ஊடகத் துறையினருக்காக ஊக்கமாய் வேண்டிக்கொள்ளுங்கள். அநேக பிள்ளைகள் இதிலே கலந்துகொண்டு பயனடையவேண்டும்.

2. தேவப்பிள்ளைகள், சமூகவலைதளங்களில் பரவிவரும் கள்ளபோதனைகளிலிருந்து தங்களை விலக்கி காத்துக்கொள்ளவேண்டும்.

3. சுவிசேஷ ஊழியங்கள் தடையின்றி நடந்து அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. விசுவாசிகள் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடாமல், தேவனை இன்னும் கிட்டி சேரவேண்டும்.

5. நம்முடைய மிஷனரி போதகர் சாம் ஜெபராஜ் (தில்லி) அவர்கள் சுகவீனமாக உள்ளார். சீக்கிரத்தில் அவர் குணமடைய வேண்டும். தேவசமூகம், தேவபாதுகாப்பு, தேவனால் தேவைகள் சந்திக்கபடுவதை நம்முடைய மிஷனரிகள் அனுபவிக்க வேண்டும்.

6. தங்கள் பணியிடம், சந்தை, தொழிற்சாலைகளுக்கு இப்போது திரும்பியுள்ள, மற்றும் ஏற்கனவே பணியாற்றிவருகிற நம் கர்மேல் உறவுகள் தேவ பாதுகாப்பு உண்டாக.

7. சமூக, பொருளாதார, சமய, ஆன்மீக நிலைப்பாடுகளில் பெரும் மாற்றத்தோடு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையை சந்திக்கும் போது, ஆவிக்குரியவர்கள் தேவசித்ததின் மையத்தில் உறுதியாக நிற்க.

8. குடும்பங்களில் தேவசமாதானம், சந்தோஷம் பூரணமாக காணப்பட – அன்பும், ஐக்கியமும் பெருக, ஒருமனம் ஒற்றுமை வளர்தோங்க.

9. கண்ணீரோடும், விண்ணப்பத்தோடும், ஆனந்தகளிப்போடும் நாம் கர்த்தரிடதில் திரும்ப, சபையாக ஜெபவீட்டில் கூடிவர.

10. தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும். மக்கள் நலன் காக்கும் தீர்மானங்களை தேசத்தின் தலைவர்கள் எடுக்க தேவ ஆலோசனை அவர்களுக்கு உண்டாக வேண்டும்.

பொதுவாக
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# பசி பட்டினியால் வாடுகிறவர்கள்மேல் தேவன் இரக்கம் பாராட்ட – பட்டினிச்சாவிலிருந்து மக்கள் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# பொருளாதார நெருக்கடியிலிருந்து அவரது பிள்ளைகள் காக்கப்படும்படிக்கு (சங் 34.10)
– வேலை இழந்தவர்கள்
– சம்பளம் இழந்தவர்கள்
– வியாபாரிகள்
– தொழில் முனைவோர்
– தேவ ஊழியர்கள்

# பஞ்சத்தின் விளைவாக ஏற்படும் சமூகவிரோத தீயச்செயல்களுக்கு கர்த்தர் தம் பிள்ளைகளை விலக்கிக் காத்திட.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்காக ஜெபியுங்கள்

CARMEL PRAYER CHAIN
MAY 09, 08 am to MAY 10, 08 am

OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes : Praise and Worship and Prayer for Sanctification
45 Minutes: Intercessory Prayer

Prayer Points
1. Carmel Online VBS is planned between 10th and 15th May. Pray for our Pastoramma, Dr. Praveen, Sr. Hepsi, Children Ministry and Media Team Members who are working on this online VBS Project. Pray that many children are benefited by this.

2. Pray that our people are protected from all kinds of false teachings that are being spread in Social Media.

3. Pray that the work of evangelism is not affected due to this pandemic ( Corona Virus COVID-19 ). Pray for more souls to get saved and receive baptism.

4. Pray for his people to grow closer to God and stay away from things which are displeasing to God.

5. Pray for all our missionaries for God’s presence, protection and providence.

6. Pray for our believers who are in the marketplace, workplace and business establishments. Pray for their safety and security.

7. Pray that when faced with a totally different social, economic, religious and spiritual setting, spiritual people should stand firmly in the center of God’s will.

8. Pray for fullness of God’ peace and joy in families – For love, unity and one-mindedness to grow.

9. Pray that we all return, as a church, to our house of prayer with tears, with prayers, with abundant joy.

10. Pray for God’s mercy and miraculous intervention for this pandemic ( Corona Virus COVID-19 ) to stop in our country. Pray for God’s counsel over leaders of the country to take right decisions for the well-being of its people.

General
# Medical Professionals, Sanitation Workers, Police Force, Government Employees, Merchants, and Bankers – welfare of Public Relation Officers to be preserved.

# Pray for God’s mercy upon all those who are suffering in starvation – no lives must be lost due to hunger.

# Pray that people, in their agony and pain, should not curse God. Bur rather return to him.

# Pray that His children are well preserved even during this economic crisis (Psalms 34.10).
– Those who lost their jobs
– Those who have lost their salary
– Business people
– Servants of God

# Pray for our Lord to preserve his people from all the anti-social activities which could creep up during this famine.

# Pray for all our relatives who are stationed/stuck in different cities, states and countries.

# Pray for our Pastor and Pastoramma

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்
Pr. Robert Simon / இராபர்ட் சைமன்

Share with