Carmel Preparatory Fasting Prayer Days | March 30, March 31 and April 01, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | மார்ச் 30, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்
1. நம் விசுவாசிகளின் பொருளாதார வளத்திற்காக
✔️ தங்கள் வரவு-செலவினை தேவஞானமாய் அறிவோடு கையாள.
✔️ வருமானம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட
✔️ கடன் பிரச்சனைகளுக்கு விலக்கிக்காகப்பட.
2. தொழில் முனைவோருக்காக.
3. பள்ளி, மற்றும் கல்லூரி இறுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களது அடுத்தக்கட்ட நகர்வுக்கான தேவ ஆலோசனை தீர்க்கமாய் அவர்களுக்கு வெளிப்பட.
4. நம் வாலிப பிள்ளைகள் தீய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் தங்களை விலக்கிக் காத்துக்கொள்ள.
5. ஒருவராகிலும் தீயபழக்கங்களுக்கு அடிமையாகாமல் [addict ஆகாமல்] காக்கப்பட, தீயபழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தேவ வல்லமையால் விடுவிக்கப்பட.
6. கோணலும், மாறுபாடுமான சந்ததியின் நடுவில், நம் பிள்ளைகள், திருவசனத்தைப் பிடித்துக்கொண்டு சுடர்களாக – கலங்கரை விளக்குகளாக – விளங்க.
7. திருமண பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு தேவ சித்தத்தின்படியான திருமணங்கள் எற்றகாலத்தில் நடைபெற, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களின் கர்ப்பங்கள் ஆசீர்வதிக்கப்பட, பிரசவத்திற்காக காத்திருப்பவர்களுக்கு ஏற்றவேளயில் சுகபிரசவத்தை கர்த்தர் கட்டளையிட.
8. விசுவாச குடும்ப வைபவங்கள். தேவனுக்குப் பிரியமாய், தேவநாம மகிமைக்கென்று தேவ ஆசீர்வதத்தோடு நடைபெற.
9. நாம் கர்த்தரிலும், அவரை அறிகிற அற்விலும், அவருடைய சித்தத்தை அறிகிற அறிவிலும். இன்னும் மேன்மெலும் வளர.
10. பரிசுத்த ஆவியானவர் அருளும் தேவ அன்பில் பெருகி, வளர்ந்து அவருக்கென்று கனிகொடுக்க.
11. சபையில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காகவும், தன்னார்வ தொண்டர்களுக்காகவும், கர்மெல் அலுவலகப் பணியாளர்களுக்காகவும்.
12. அனுதினமும் புதிய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட.
13. விசுவாசிகளின் தெய்வீக சுகத்திற்க்காக.
14. எங்களுக்காக.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்