Carmel Preparatory Fasting Prayer Days | February 29, March 01 and March 02, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | பெப்ரவரி 29, மார்ச் 01, மற்றும் மார்ச் 02, 2024 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்
- நமது இந்திய தாய்த் திருநாட்டிற்க்காக – நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக.
- நல்லாட்ச்சி அமைய.
- பாசிஸ சர்வாதிகார சக்திகள் முற்றுமாய் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் தளிர்த்தோங்க.
- சமூகநீதி, சமத்துவம், மத நல்லிணக்கம், மனித நேயம் போன்றவை நிறைந்து நிறைவுடன் காணப்பட.
- மந்திரங்கள், தந்திரங்கள் போண்ற தில்லுமுல்லுகள் செயலற்று போக.
- பண ஆதிக்கம் செயலிழந்து மக்கள் மனசாட்சியுடன் வாக்கள்க்க – தேவன் மக்களின் இதயங்களை ஒருமுகப்பட்த்த.
- சமாதாந்த்தோடு, விடுதலையோடு அச்சமின்றி தேர்தல் நடைபெற.
- பள்ளி, கல்லூரி தேர்வு எழுதுபவர்க்ளுக்காக.
- நமது சபையில் உள்ள
# சிறு பிள்ளைகளுக்காக.
# சிறு பிள்ளைகள் ஊழியங்க்ளுக்காக.
# சிறு பிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்காக. - நமது குடும்பத்திலும், சபையிலும் உள்ள முதியோர்களுக்காக – அவர்களுக்கு நல்ல சுகம், பெலன், ஆரோக்கியத்திற்காக.
- அவர்கள் தங்கள் முதிர்வதிலும் கனிதந்து பசுமையும், புஷ்டியுமாயிருக்கும் படிக்கு.
- அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக தங்கள் குடும்பங்களுக்கும், திருச்சபைக்கும் ஆசீர்வாதமாயிருக்க.
- அவர்களை பராமரிக்கிறவர்களுக்காக.
- கர்மேல் முதியோர் வள மையத்திற்காக – கர்த்தரின் ஆலோசனைக்காக – வழி நடத்தலுக்காக.
- இரட்ச்சிக்கபடாத நம் குடும்ப உறவுகளுக்காக.
- பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணைக்கப்பட – இசைவிணைப்பாய் கட்டப்பட.
- நமது சபை விசுவாசிகளின் மனவஞ்சை – இருதயத்தின் விருப்பங்கள் – விண்ணப்பங்கள் – கர்த்தருக்குள்ளாக நிறைவேற.
- விசுவாசிகளின் எல்லை எங்கும், மற்றும் அவர்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றும் கர்த்த்ருக்குப் பரிசுத்தம் என்று விளங்க.
மேலும், விசுவாசிகள் யாவரும் தேவபக்திக்கு நேராகப் பிரயாசப்பட:
1 Tim 4:8 சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.
- நம்முடைய விசுவாசிகள் ஆவிக்குரியவர்களாக விளங்க.
- ஆவியின் கனி
- ஆவியின் சிந்தை
- ஆவியினால் நடத்தப்படுதல்
- ஆவிக்குள்ளாக
- நம்முடைய சபை ஜெபிக்கிற ஜெபவீரர்கள் நிரம்பிய சபையாக விளங்க மன்றாடி ஜெபிப்போம்.
- சத்தியத்தை அறிந்து, அதை மனதார நேசித்து, ஏற்றுக்கொண்டு, கீழ்படிந்து, கைக்கொண்டு நடக்க.
- விசுவாசிகளை பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து தூக்கியெடுத்து, அவர்கள் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் அவர்கள் வாயிலே கொடுக்கும்படி.
- சபையில் நடைபெற்றுவரும் எல்லா ஊழியங்களுக்காக, மேலும், தடைபட்டிருக்கும் ஊழியங்கள் தடையின்றி நடைபெற.
- திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, திருத்தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுகாக.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்