Carmel Preparatory Fasting Prayer Days | November 03, November 04 and November 05, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | நவம்பர் 03, நவம்பர் 04 and நவம்பர் 05, 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்
1. குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர்கள் இரட்சிக்கப்பட.
2. குடும்ப உறவுகளில் உள்ள விரிசல்கள் நீங்கி குடும்பங்களில் தெய்வீக சமாதானம் காணப்பட.
3. நமது பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருக்க; அவர்கள் வாழ்வுவளம் பெரிதாயிருக்க;
கோணலும் மாறுபாடுமான மக்களின் மத்தியில் அவர்கள் திருவசனத்தைப் பிடித்துக்கொண்டு திசைக்காட்டும் கலங்கரை தீபங்களாக விளங்க.
4. விசுவாச குடும்பங்களுக்கு விரோதமான எல்லா தீய ஆலோசனைகளும், எண்ணம்களும் அழிக்கப்பட.
5. அவர்களுக்கு நியாயமாய் வரவேண்டிய நன்மைகள் வர.
6. நாம் அனைவரும் தேவ அன்பினால் நெருக்கப்பட்டு – ஏவப்பட்டு – ஒரு சிலரையாகிலும் அக்கினியினிற்று மீட்டெடுக்க.
7. நமது பணித்தளங்களில், கல்விக்கூடங்களில், நம் குடியிருப்பு பகுதிகளில், நம் உறவுகள் நடுவினில், நாமும் நம் குடும்பமும் கர்த்தருக்கென்று ஒளியாக, உப்பாக – எரிந்து பிரகாசிக்கிற தீபச்சுடர்களாக, சாட்சிகளாக விளங்க.
8. நம்முடைய வாழ்க்கையின் எல்லையெங்கும் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று எழுதப்பட.
9. தரித்திரம், கடன்சுமை, குறைவு என்று இல்லாது சுபிட்சத்துடன், நிறைவுடன் வாழ.
10. நம் சபையார் எதிர்பார்த்து காத்திருக்கும் நன்மைகள் நம் தேவெனால் அவர்களுக்கு அருளப்பட.
11. நம் சபையார் அனைவரும் ஆவிக்குரியவர்களாக – திவ்யசுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகக் காணப்பட.
12. நமது சபையின் ஊழியங்களுக்காக, தன்னார்வ தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, போதகர்களுக்காக.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்