Election 2024 Prayer Points – தேர்தல் 2024 ஜெபக் குறிப்புக்கள் | தேசம் பயப்படாமல் மகிழ்ந்து களிகூர ஜெபக் குறிப்புக்கள்

Election 2024 Prayer Points | தேர்தல் 2024 ஜெபக் குறிப்புக்கள் | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

கர்மேல் ஊழியங்கள் இணைந்து வழங்கும் தேசம் பயப்படாமல் மகிழ்ந்து களிகூர ஜெபக் குறிப்புக்கள்:

 

சத்தியத்தின் சத்தம் கருத்துக்களம் கர்மேல் ஊழியங்கள் இணைந்து வழங்கும்

தேசம் பயப்படாமல் மகிழ்ந்து களிகூர ஜெபக் குறிப்புக்கள்:

  1. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மலர.
  2. லஞ்சலாவண்யம் இல்லாத நல்லாட்சி மலர.
  3. நலிவுற்றோர் நலம் பெறக்கூடிய நல்லாட்சி மலர.
  4. மக்களுக்கு இலவசங்களை வழங்குவதைவிட, மக்களின் வாங்கும் திறனை உயர்த்துகின்ற நல்லாட்சி மலர.
  5. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் வள்ளுவன் வாக்கின்படி பிறப்பினால் வரும் இனவேறுபாடுகளை முற்றிலும் அகற்றி சமத்துவம், சமதர்மம், சமநீதி, சமவாய்ப்பு ஆகியவற்றை சகலகுடிகளுக்கும் வழங்கும் நல்லாட்சி மலர.
  6. மக்களிடையே உள்ள பிரிவினைவாதங்களை அழித்து, நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய நல்லாட்சி மலர.
  7. நல்லோரின் நலனை பேணிக்காத்து, தீயோரைத் திருத்துகிற நல்லாட்சி மலர.
  8. மக்களின் ஆரோக்கியமான கருத்து சுதந்திரத்திற்கும். விமர்சனங்களுக்கும் இடமளிக்கிற நல்லாட்சி மலர.
  9. தன்மான உணர்வுடன் உழைத்து, சம்பாதித்து குடும்பம் நடத்துகிறவர்களாக, மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நல்லாட்சி மலர.
  10. திறமைக்கேற்ற கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்கப்பண்ணுகிற நல்லாட்சி மலர.
  11. மத சுதந்திரம், வழிப்பாட்டு சுதந்திரம், அடிப்படை கலாச்சார சுதந்திரம் ஆகியவற்றை யாவருக்கும் அளிக்கின்ற – சிறுபான்மையினரின் நலன் காக்கின்ற நல்லாட்சி மலர.
  12. மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்தாமல், மக்களுக்குப் பணிசெய்கிற நல்லாட்சி மலர
  13. மக்களின் வரிச்சுமையைக் குறைத்து, மக்கள் பயன்பெறும் நல்ல மாற்று திட்டங்கள் மூலம் அரசுவருமானத்தைப் பெருக்கக்கூடிய நல்லாட்சி மலர.
  14. மனித உரிமைகளைப் பேணிபாதுகாக்கும் நல்லாட்சி மலர.
  15. பெண்களுக்கும் மற்றும் நலிவுற்றோருக்கும் எதிரான வன்கொடுமைகளை – வன்புணர்வுகளை – முற்றுமாக அழிக்கின்ற நல்லாட்சி மலர.
  16. கொலை, கொள்ளை போன்ற வன்முறை ஈன செயல்களின் அச்சமின்றி வாழும் சமூகத்தை உருவாக்கும் நல்லாட்சி மலர.
  17. தொங்குசட்டமன்றம், குதிரைப்பேரம், ஆட்சிகவிழ்ப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இல்லாத நிலையான நல்லாட்சி மலர.
  18. விவசாயம், நெசவு, குயம்வனைதல், பாய்முடைதல் போன்ற பாரம்பரிய தொழில்கள் நலிவடையாமல், அவைகளை நவீன வளர்ச்சிபாதைக்கு அழைத்துச் செல்லும் நல்லாட்சி மலர.
  19. தரமான கல்வி, நல்லாரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பான போக்குவரத்து போன்றவைகளை உறுதிச்செய்யும் நல்லாட்சி மலர.
  20. நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் தனிச்சிறப்புவாய்ந்த மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்றவை சிதையாமல் காத்து அவைகளை முன்னேற்றபாதைக்கு கொண்டுச்செல்லும் நல்லாட்சி மலர.
  21. வாக்காளர் யாவரையும் தேவஆவியானவர் ஆட்கொண்டு தம் திருவுளசித்தத்தின்படி நடத்தும்படியாக.
  22. கிறிஸ்தவ வாக்காளர் யாவரும் தங்கள் ஜனநாயகக் கடமையைத் தேவபயத்துடன் நிறைவேற்றும்படியாக.
  23. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தேசநலனுக்கு, ஒற்றுமைக்கு, நல்லிணக்கத்திற்கு மாறாக செயல்படுகிற கட்சிகளும், அவர்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிற கட்சிகளும் முற்றுமாய் தோற்கடிக்கப்படும்படிக்கு.
  24. ஊழியத்தை ஆதாயத் தொழலாகச் செய்யும் ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்கள், சொற்ப்ப ஆதாயத்திற்கென தேர்தலில் சபையை விலைபேசும் ஈனச் செயலைச் செய்யாதபடிக்கு.
  25. தீர்க்கதரிசனம் என்ற பெயரில் ஆரூடம் சொல்பவர்கள் ‘சில சிரங்கை வாற்கோதுமைக்காகவும் ரொட்டி துண்டுகளுக்காகவும்’ கள்ளதீர்க்கதரிசனம் சொல்லி பரிசுத்த வரத்தை கேலிகூத்தாக்காதபடிக்கு.
  26. தேவபிள்ளைகள் ஒருவராவது வாக்குக்கு பணம் வாங்குகிற குற்றச் செயலைச் செய்யாதபடிக்கு.
  27. தேவதீர்மானத்திற்கு விரோதமான மந்திரங்கள், தந்திரங்கள் முற்றிலும் செயலற்று போக.
  28. இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள், தேர்தல் அதிகாரிகள் முற்றுமாக தேவகட்டுபாட்டில் நேர்மையுடன் செயல்பட.
  29. வன்முறைச் செயல்கள் – பணபலம் இன/ஊர்கட்டுபாடுகள்/உணர்வுகள் மேற்கொள்ளாதபடிக்கு நல்லவர்கள், தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட.
  30. நமது நாட்டின் பன்முகத்தன்மை சிதையாமல் பாதுகாக்கப்பட்டு ஒற்றுமையை ஓங்கி வளரச்செய்கின்ற நல்லாட்சி மலர.
  31. மக்கள் நலன் சாராத சுயநல சந்தர்ப்பவாத அரசியல் முற்றுமாக அழிக்கப்பட.
  32. நமது நாட்டின் கனிமவளங்கள், நீர்வளங்கள், இயற்கை வளங்கள், பண்பாட்டுச்சின்னங்கள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை பாதுகாக்கும் நல்லாட்சி மலர.
  33. நமது இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தின் முகப்புரை (preamble) சற்றேனும் சிதையாமல் காக்கப்பட.
  34. நம் தாய்த் திருநாட்டில் சத்தியம் ஜெயிக்கும்படியாக- நாடெங்கும் சத்தியத்தின் சத்தம் தொனிக்கும்படியாக – மக்கள் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு நேராக – இருளிலிருந்து ஒளிக்குள்ளாக – சாவிலிருந்து சாவாமைக்கு – நடத்தப்பட.
  35. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு.

Election 2024 Prayer Points in English:

PRAY FOR THE FORMATION OF A GOOD GOVERNMENT …

1. Which focusses on people welfare.

2. Which discourages bribery.

3. Which works towards the welfare of weak and downtrodden people.

4. Which does not offer freebies but enhances the purchasing power of its people.

5. Which does not encourage preferential treatment to people of a particular sect but embraces and implements Social Justice, Equality, Equal rights, Equal opportunities amongst all people groups.

6. Which debunks separatist forces and creates an environment of goodwill.

7. Which preserve the rights of good people and correct those with evil intentions.

8. Which provides platform for freedom of speech and freedom to criticize.

9. Which provides opportunities for people to work, earn and raise a family with self-dignity and also increase the standard of living of people.

10. Which provides skill-based education, education-based employment and also emoluments commensurate with the work.

11. Which provides freedom of religion, freedom to worship, freedom to follow their culture and also protects the interests of minorities.

12. Which does not dictate and rule but serves and supports its people.

13. Which reduces the tax burden of its people and which promotes alternative schemes that increase the income of the Government.

14. Which preserves human rights.

15. Which completely annihilates violence and sexual assault against women and weaker sections.

16. Which works towards creating a society free of all kinds of dangers and fears like murder, robbery and such other acts.

17. Which is free from unpleasant eventualities like hung assembly, horse-trade and dismissals.

18. Which not only ensures the sustenance of traditional industries viz., agriculture, weaving, pottery and mat-weaving, etc. but also leads them to modern growth path.

19. Which ensures quality education, good health, sanitation, safe transport facilities etc.,
20. Which aims to protect the distinctive languages, culture and tradition of every state and works towards preserving the same and leading it towards growth.

21. Pray that every voter is controlled and led by the Spirt of God according to his will.

22. Pray that every Christian voter discharges his democratic duty with Godly fear.

23. Pray that all the parties and their alliance partners working against the interest of the nation particularly its harmony, integration, interest of the minorities are utterly defeated.

24. Pray that the servants of God who are actually wolves in sheep’s clothing, who make the ministry a business of profit, do not engage in the cheap act of selling their church for petty gains.

25. Pray that those who brazenly fore-tell and those who engage in false prophecies for some barley and few breads do not make a mockery of the God’s holy gifts.

26. Pray that no child of God should engage in the criminal act of receiving money for vote.

27. Pray that all black magic, witchcraft plotted against the purposes of God is totally nullified.

28. Pray that all the machines, technology, polling officers are functioning honestly under God’s control.

29. Pray that no violent acts: financial strength/racial/village controls and feelings overtake but only good and eligible ones are chosen.

30. Pray that a Government which preserves the diverse nature of our country and which upholds its oneness is preserved.

31. Pray that all selfish opportunistic politics is completely eradicated.

32. Pray that the government takes all the needed steps to preserve its mineral, water, natural resources, cultural emblems and historical symbols of our country.

33. Pray that the preamble of the Constitution of India is kept intact and without any tampering.

34. Pray that truth prevails in our motherland – May truth resound all over the nation – May people be delivered from falsehood to truth – May people be delivered from darkness to light.

35. Pray that we may lead a quite and peaceful life with all piety and virtue without any threat whatsoever.

Last Updated on: 04 April 2024, 18:00(IST).

Share with