Prayer Points for Academic School / College Students and Teachers | பள்ளி / கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான  ஜெபக் குறிப்புக்கள் | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

Prayer Points for teachers and students for a new academic year (Prayer Points for Academic School / College Students and Teachers) | புதிய கல்வியாண்டின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஜெபக் குறிப்புக்கள் (புதிய கல்வியாண்டின் பள்ளி / கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான  ஜெபக் குறிப்புக்கள்) | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

  1. நமது பிள்ளைகளின் புதிய கல்வி ஆண்டு அவர்களுக்கு கர்த்தருக்குள் ஆசீர்வாதமாய் அமைய.
  2. கல்வி துறையில் பணியாற்றுபவர்களுக்காக.
  3. நமது பிள்ளைகளின் எதிர்காலம் முற்றுமாக தேவசித்தத்தின்படி ஆசீர்வாதமாய் அமைய – சரியான கல்வி வழிகாட்டுதலுக்காக.
  4. நமது சபையில் உள்ள
    # வளரிளம் பருவத்தினர்க்காக (for adolescents).
    # அவர்கள் நடுவில் நடைபெறும் ஊழியங்களுக்காக, ஊழியம் செய்பவர்களுக்காக.
  5. கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவில் நமது பிள்ளைகள் திருவசனத்தைப் பிடித்துக்கொண்டு கலங்கரை விளக்குகளாக பிரகாசிக்க.
  6. தேவனுடைய வசனமே நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் வழிகாட்டுதலாக அமைய
    (சங்கீதம் 105).
  7. பிள்ளைகளுக்கு கர்த்தரால் உண்டான ஒரு பாதுகாப்பு வேண்டும். தீய சக்தியின் கிரியைகள் வன்கண்கள் பொறாமையின் ஆவிகள் பிள்ளைகளை அணுகாதபடிக்கு கர்த்தர் வேலி அடித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சங்கீதம் 34:7.
  8. நீதிமொழிகள் 2:11 நல்யோசனை உன்னை காப்பாற்றும், புத்தி உன்னை பாதுகாக்கும். இந்த வசனத்தின் படி பிள்ளைகளுடைய பாதுகாப்பிற்காக.
  9. எல்லாம் சூழ்நிலைகளிலும் பிள்ளைகள் மனம் தளராத படி கர்த்தரை மாத்திரம் நோக்கி பார்க்க. சங்கீதம் 121:1,2 வசனத்தின் படி.
  10. எல்லா விதமான பயத்தின் ஆவிலிருந்து பிள்ளைகள் விடுவிக்கப்பட. கர்த்தர் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல் அன்பும் பெலனும் தெளிந்த புத்தியில் உள்ள ஆவியை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்.
  11. நல்ல நண்பர்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க.
  12. யாக்கோபு 1:5 படி கர்த்தரால் பரத்திலிருந்து வருகிற ஞானம் பிள்ளைகளை நிரப்ப.

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:16

  1. The new academic year should become a blessing to our children in Christ.
  2. The academicians – those working in schools and colleges.
  3. The future of our children, in its entirety, to be blessing according to the will of God and for the right guidelines.
  4. Pray for the
    # Adolescents in our church.
    # Ministries taking place amongst them and for the ministers.
  5. In this crooked and perverse generation, our children should radiate as light house holding on to the holy scriptures.
  6. Gods’ word to become a guideline to us and our children. (Psalm 119:105)
  7. Our Children should have the protection of the Lord. God should fence and guard our children from The work of evil forces, evil eyes, spirit of jealousy. (Psalm 34:7)
  8. Discretion shall preserve thee, understanding shall keep thee: (Prov 2:11). Children should be protected according to this verse.
  9. In all circumstances children should never get weary but fix their eyes only upon the Lord.
  10. Our Children should be delivered from all kinds of spirit of fear. God has not given us a spirit of fear, but a spirit of love, strength and sobriety.
  11. Our children should find good friends.
  12. Our children should be filled with the wisdom that comes from above. (According to James 1:5)

The effectual fervent prayer of a righteous man availeth much. James 5:16

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with