Message Title / தேவ செய்தி தலைப்பு : Hallelujah… Hallelujah | அல்லேலூயா… அல்லேலூயா
Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள் : 11 April 2021 | 11 ஏப்ரல் 2021
Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்
Bilingual Message : English & Tamil
Hallelujah… Hallelujah | அல்லேலூயா… அல்லேலூயா | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
நாள் : 11 ஏப்ரல் 2021.
தலைப்பு : அல்லேலூயா ! அல்லேலூயா!!
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.
இன்றைய காலை தியானத்திற்கான தலைப்பு மிகவும் சுவாரசியமாக உள்ளது. அல்லேலூயா! அல்லேலூயா!! அவருக்கு ஒப்பானவர் யார்?
113 – ம் சங்கீதத்தை எழுதினவர் யார் என்று தெரியவில்லை. அல்லேல் என்று சொல்லக்கூடிய 6 சங்கீதங்கள் காணப்படுகிறது. அல்லேல் என்று சொன்னால் பொதுவாக அவரை துதிப்பது என்று குறிக்கும். எல்லா முக்கியமான தருணங்களிலும் அவர்கள் இந்த அல்லேல் சங்கீதங்களை பாடுவார்கள். வேத வல்லுநர்களும் இதை ஒத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக அவர்களுடைய பாபிலோனிய சிறையிருப்புக்கு பின்பாக எழுதப்பட்ட சங்கீதம் இது.
ஒன்பது வசனங்களைக் கொண்ட இந்த சங்கீதம் மூன்று பகுதிகளாக பிரிகிறது. தேவனை துதிப்பதற்குண்டான அறைகூவலையும், தேவனுடைய மகத்துவத்தை, மகிமையை வெளிப்படுத்துவதையும் தேவனுடைய நன்மைகளை, கிருபைகளை போற்றக்கூடிய பாடலாய் , சங்கீதம் 113 அமைந்துள்ளது.
இந்த சங்கீதத்தில் ஐந்து முக்கியமான கேள்விகளுக்கு உரிய பதிலை நான் கண்டு மகிழ்ந்தேன்.
- யாரை துதிக்க வேண்டும்?
- யார் துதிக்க வேண்டும்?
- எதை நாம் துதிக்க வேண்டும்?
- அவருக்கு ஒப்பானவர் யார்?
- ஏன் அவரை நாம் துதிக்க வேண்டும்?
1. யாரை நாம் துதிக்க வேண்டும்?
கர்த்தரை துதிக்க வேண்டும்
சங்கீதம் 113 :1 கூறுகிறது
“அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்”.
11. யார் அவரை துதிக்க வேண்டும்?
சங்கீதம் 113 : 2,3 கூறுகிறது-
2. இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.”
3. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
உலகம் முழுவதிலும் யார் அவரை துதிக்கலாம் ? தேவனுடைய சேவகர்கள் அவரை துதிக்க வேண்டும்.
111. எதை நாம் துதிக்க வேண்டும்?
கர்த்தருடைய நாமத்தை துதிக்க வேண்டும்.
நாமம் என்பது குணாதிசயத்தை குறிக்கிறது. ஒரு மனிதரை குறிப்பாய் குறிப்பிட நாம் பெயரை வைத்து அழைக்கிறோம். தேவனுடைய நாமம் அவருடைய குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது.
1V. அவருக்கு ஒப்பானவர் யார்?
அவருக்கு நிகராக யாரையும் நாம் சொல்லமுடியுமா? சூரிய, சந்திர, நட்சத்திரங்கள், சனி, கேது, யானை, எலி பாம்பு அந்த தேவனுக்கு நிகராக முடியுமா? தேவனுக்கு நிகரானவர் யாருமில்லை.
V. ஏன் அவரை நாம் துதிக்க வேண்டும்?
இந்த கர்த்தர் யார்? ஏன் அவரை நாம் துதிக்க வேண்டும்? அதை குறித்த 7 முக்கியமான காரணங்களை பார்க்கலாம்.
1. யாவே மாறாதவர்.
அவர் இருந்தவராகவே இருப்பவர். அவர் ஆபிரகாம், மோசே, தாவீது, பேதுரு, யாக்கோபு, யோவானோடு கூட இருந்தது போலவே நம்முடன் கூட இருக்கிறார்.
2. கர்த்தர் எல்லா தேசங்களிலும், உலக ஜாதிகளில் எல்லாம் உயர்ந்தவர்.
சங்கீதம் 113:4
கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
3. அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
சூரிய சந்திர நட்சத்திரங்களை காட்டிலும், அஷ்டமி, நவமி, தசமி போன்ற எல்லாவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றிற்கும் அவர் மேலானவர்.
4. அவர் உன்னதங்களில் வாசம்பண்ணுகிறவர்.
என் தேவன் சர்வ லோகத்திற்கும் தேவன். அவர் பரமண்டலங்களிலிருக்கிற பரமபிதா.
5. இந்த தேவன் எனக்கு எல்லாம்.
எபிரேயத்தில் ஏல் என்றால் எல்லாம் என்று பொருள். அவரே எனக்கு எல்லாம் .
6. அவர் தன்னையே தாழ்த்தினார்.
வானத்தில் இருந்து பூமியை நோக்கி பார்த்தார். ஏன்? அவர் நம் மேல் அக்கறை உள்ளவராக இருக்கிறார்.
7. நம்பிக்கையற்றவர்களுடைய நம்பிக்கை;
சங்கீதம் 113:7 “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்”.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி எடுத்து, ராஜாக்களுக்கு முன்பாக சிறியவனை உட்கார பண்ணுகிறார். அநேக பிள்ளைகளுக்கு, பிள்ளைத்தாய்ச்சியாக மாற்றுவார். உன்னில் இருந்து ஒரு சாமுவேலை கொண்டு வருவார்.
இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நம்முடைய தேவன். மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.
அல்லேலூயா! அல்லேலூயா!!
நமக்காக யாவற்றையும் செய்து முடிக்கும் கர்த்தரை போற்றி துதிப்போமா?
அல்லேலூயா! அல்லேலூயா!!
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளித்த அன்பருக்கு
அல்லேலூயா! அல்லேலூயா!!
பாவத்திலிருந்து விடுதலை அளித்த பரமனுக்கு
அல்லேலூயா ! அல்லேலூயா!!
இஸ்ரவேலின் தேவனுக்கு அல்லேலூயா !
நம்பிக்கையின் தேவனுக்கு அல்லேலூயா! அல்லேலூயா!!
அல்லே …லூ..யா!!!