Message Title / தேவ செய்தி தலைப்பு : Why Ask My Name? | என் நாமத்தை கேட்பானேன்? | En Naamathai Ketpaanean?
Language / தேவ செய்தி மொழி : Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள் : 25 April 2021 | 25 ஏப்ரல் 2021
Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர் இராபர்ட் சைமன்
Why Ask My Name? | என் நாமத்தை கேட்பானேன்? | En Naamathai Ketpaanean? | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
நாள் : 25.04.2021
தலைப்பு : என் நாமத்தை கேட்பானேன்?
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.
நேற்றைய தினத்தில் ஒரு வேத பகுதியை தியானிக்கும் போது அது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. அந்த வேத பகுதியை இன்று நாம் தியானிக்கலாம் .
ஆதியாகமம் 32: 27,28,29,30 வசனங்களை பார்க்கலாம்.
27. அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
28. அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
29. அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
30. அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
அவர் அவனுடைய பெயர் என்ன? என்று கேட்டார். யாக்கோபு என்று அவன் சொன்னான். இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும் என்றார். இப்போது யாக்கோபு உம்முடைய நாமத்தை எனக்கு அறிவியும் என்று கேட்கிறான். அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன்? என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
ஓசியா 12:4 இவ்வாறு கூறுகிறது,
“அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
யாக்கோபு அழுது அவரை நோக்கி கெஞ்சினான். என்ன கெஞ்சுகிறான்?
என்னை ஆசீர்வதியும், என்னை ஆசீர்வதியும் என்று யாக்கோபு கெஞ்சினான்.
அந்த மனிதன் அவரோடு போராடுகிறான்? என்ன போராடுகிறான்?
உன்னுடைய பெயரை சொல்லு என்று கேட்டபோது, அவன் தன்னுடைய பெயரை சொல்லுவதற்கு, சற்று தயங்குகிறான். போராடுகிறான் ஏன் ?
மனைவி, மக்கள், ஆடு, மாடு, வேலைக்காரர், வேலைக்காரிகள், பரிவாரங்கள் எல்லாம் இருந்தும் யாக்கோபு, என்னை ஆசீர்வதியும், என்று கேட்டது ஏன்?
இதற்கு மேற்பட்ட ஒரு ஆசிர்வாதம் உண்டு என்று அவன் எண்ணுகிறான். யாக்கோபு என்றால் எத்தன் என்று பொருள். அவன் பெயர் மாற்றம் வேண்டும் என்று எண்ணினான். இன்று நமக்கும் ஏமாளி, சண்டைக்காரன், பொறாமைக்காரி, கோபக்காரன், போன்ற சில பெயர்கள் இருக்கின்றன. அவன் பெயர் எத்தன் என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்குகிறான். அவரால்தான் அவன் பெயரை மாற்ற முடியும் என்று அவனுக்குத் தெரிந்தது, எனவேதான் அவனது பெயரை இஸ்ரவேல் என்று கர்த்தர் மாற்றினார்.
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். எனவேதான் தன் சொந்த குமாரனை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 :26 கூறுகிறது,
“அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்”.
உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். தமிழில் மிக அழகாக இருக்கிறது. பெயர் என்பது ஒரு குறியீட்டு சொல். நாமம் என்பது ஒரு நபருடைய தனித்தன்மையை காட்டுகிறது. உம்முடைய மகத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவன் கேட்கிறான். நான் யார் என்று தெரியாதா? என்று அவர் கேட்டு விட்டு, அவனை ஆசீர்வதித்தார். நம்முடைய வாழ்க்கையிலும் அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார்.
அவனுக்கு அவர் யார்? என்று நன்றாக தெரியும். யாக்கோபு, யார் இவர்? என்று அறிய வேண்டும் என்று போராடினார்.
இவர் யார்?
- யாக்கோபுக்கு தன்னை வனாந்தரத்தில் வெளிப்படுத்தினவர்.
- யாக்கோபை ஆசீர்வதிப்பதில் பிரியமுள்ளவர்.
- யாக்கோபுடைய எல்லா வாழ்க்கை பயணத்திலேயும் யாக்கோபுடன் இருந்தவர்.
- எல்லா விதமான ஆபத்திலேயும் யாக்கோபை காத்தவர் இவர்.
- ஒருபோதும் யாக்கோபை கைவிடாதவர் இவர்.
- யாக்கோபுடன் பண்ணின உடன்படிக்கையை எப்போதும் நினைவு கூறுபவர் .
- தான் கொடுத்த வாக்குத்தத்தத்தில் எப்போதும் உண்மையுள்ளவர்.
இந்த தேவன் யார்?
இந்த தேவன் யாரும் இல்லாத போது நம்மை ஆசீர்வதிக்கும் தேவன்.
துர்ச்சனப்பிரவாகம் என்னை சூழ்ந்து கொண்டது. மரணநிழல் என்னை சுற்றி இருக்கிறது. என்றாலும், நான் போகிற இந்த பயணத்தில், என் தேவன் என் கூடவே இருக்கிறார். நான் பயப்படவே மாட்டேன். எல்லா சூழலிலும் அவர் என் கூடவே இருக்கிறார்.
சங்கீதம் 23:4 கூறுகிறது,
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
எந்த சூழ்நிலையிலும் உன்னை காத்து, மீட்டு, நீ திரும்பிவரும் மட்டும், உன்னை கைவிடாது இருக்கும் தேவன் அவர். கொடுத்த வாக்குத்தத்தத்தில், உண்மையுள்ளவர். நாம் வேண்டுமானால் நமது உண்மையில் மாறலாம். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என் தேவன். அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுபவர். நீ எங்கு சென்றாலும் இந்த தேவன் உன்னுடனே கூட இருக்கிறார். இவர் யார்? இவர் என்னுடைய தேவன்.
எத்தனை (எத்தன்) இஸ்ரவேலாக மாற்றினவர்
சவுலை பவுலாக மாற்றினவர்
தரித்திரனை ஐஸ்வர்யவானாக மாற்றினவர்
எத்தனை மாற்றங்கள் செய்தவர் இவர்
என்றும் மாறாதவர் இவர்
கொடுத்த வாக்குத்தத்தத்தை மாற்றாதவர் இவர்
அவரது நாமத்தை கேட்பானேன்?
செய்தியைக் கேட்டு அறிவோமா!
என்னில் மாற்றங்கள் பெற்றிடவே….