Code of Conduct expected from Children of God when they return to their respective Churches after Corona Virus Lock Down – லாக்டவுன் முடிந்து, சபை ஆராதனைக்கு வரும் போது விசுவாச தேவப்பிள்ளைகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்


லாக்டவுன் முடிந்து, சபை ஆராதனைக்கு வரும் போது விசுவாச தேவப்பிள்ளைகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

1. இத்தனை நாட்களாக ஆன்லைன்-ல் ஆராதனை செய்து பழகிவிட்டேன். எனவே வீட்டிலேயே உக்கார்ந்து ஆன்லைன்-ல் ஆராதித்து கொள்கிறேன் என்று சொல்ல கூடாது. சபைக்கு சென்று ஆராதிப்பது தான் “வேதமுறை”. அதுவே தேவன் விரும்பும் ஆராதனை முறை.

2. ஒரு வேளை லாக்டவுன் சமயத்தில் பல போதகர்களின் செய்திகளை ஆன்லைனில் கேட்டு இருக்கலாம். அந்த செய்தி உங்களுக்கு மிகவும் பிடித்து போய் இருந்திருக்கலாம் .அதற்காக சபையை மாற்றுவது சரியல்ல. அதே போல், அக்கா , எங்க சபை பாஸ்டர் செய்தி ஆன்லைனில் எப்படி இருந்தது? இந்த வாரம் எங்கள் சபைக்கு வந்து பாருங்கள். செய்தி அதை விட சூப்பரா இருக்கும்… என்று தயவு செய்து யாரையும் அழைக்க வேண்டாம்.

என்னுடைய சபை தூரமாய் இருக்கிறது. எனவே வீட்டுக்கு பின்னாடி ஒரு சபை இருக்கிறது. அங்கு போய் கொள்கிறேன். என்று சொல்ல கூடாது.

அவரவர்கள் கடைசியாக தாங்கள் எந்த சபைக்கு போய் கொண்டு இருந்தீர்களோ , (அதாவது லாக்டவுன்க்கு முந்தய வாரம்) அதே சபைக்கு போங்கள். அது தான் சபை ஒழுங்கு. அங்கே உங்கள் சபை போதகர் சிரித்த முகத்துடன் உங்களை வரவேற்க காத்து கொண்டு இருப்பார்.

3. ஆராதனைக்கு நுறு நுறு பேராக வாருங்கள் என்று சபை போதகர் கூறும்போது ( தனி மனித இடைவெளிக்காக ) 100 பேர் மட்டும் போங்கள். “பக்தி வைராக்கியம் காட்டுகிறேன்” என்று சொல்லி 150 பேராக சென்று சபைக்கு பிரச்சனை கொண்டு வரவேண்டாம்.

4. சபை போதகர் அல்லது மூப்பர் சொல்லும் இடத்தில் மட்டுமே உட்காரவேண்டும். “இது என்னோட பழைய இடம்” இங்க தான் உட்காருவேன் என்று சிறுபிள்ளையை போல அடம் பிடிக்கக்கூடாது.

5. சபையில் நுழைவதற்கு முன் எதற்கு கை கழுவ வேண்டும்? எதற்கு சானிடாய்சர் போட வேண்டும்? எதற்கு மாஸ்க் போட வேண்டும்? “நான் தேவனோடு உறவாடுகிற விசுவாசி” எனக்கு எதுவும் தேவையில்லை என்று வீம்பு பேசக்கூடாது , உங்கள் விசுவாசத்தை சபை பாராட்டுகிறது. அதே நேரத்தில் சபையின் நலனை கருத்தில் கொண்டு சபைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

6. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் சபை விசுவாசிகளை நீங்கள் பார்க்கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டு கட்டி பிடித்து நலம் விசாரிப்பதை விட, சற்று தூர நின்று விசாரியுங்கள்.

அதே போல ஆராதனை முடிந்த பிறகு, நலம் விசாரிக்கிறேன் என்று சொல்லி கும்பலாக சென்று பேசக்கூடாது. ஒரு வேளை உங்கள் சபையில் அடுத்த ஆராதனை இருக்கலாம். ரெண்டாவது ஆராதனைக்கு வருபவர்களுக்கு இடையூறு செய்யாமல் “தேவஆசீர்வாதத்தோடு” உங்கள் வீடுகளுக்கு விரைந்து செல்லுங்கள்.

7. ஆராதனை முடிந்த பிறகு, கும்பலாக போதகரிடம் சென்று ஜெபிப்பதை தவிர்ப்பது நல்லது. மிக மிக அவசியமாக ஜெபிப்பவர்கள் மட்டும் தனி மனித இடைவெளி விட்டு ஜெபிக்க செல்லுங்கள்.

சத்துரு நம்மை நிந்திக்க தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். மிகவும் விவேகமாக நடந்து கொள்ளுங்கள்

உங்கள் கிறிஸ்தவ contacts யோடு share பண்ணுங்கள்.

உங்கள் அன்பு போதகர்

Pr. இராபர்ட் சைமன்

Code of Conduct expected from Children of God when they return to their respective Churches after Corona Virus Lock Down

1. Don’t say that since I have got used to worshiping through on-line services, I would continue with the same. Going to our Prayer House for a Sunday Worship Service is biblical and God given pattern.

2. You may have had the opportunity to listen to the sermons of various other servants of God on-line. You may have even liked those sermons. But that doesn’t mean that you can shift your fellowship to other/their churches. In the same way, do not allure members of other churches by referring to your Pastor’s online messages and inviting them to come and attend your services.

3. Don’t say that my church is far away and hence would choose a church which is in my backyard. You must resume fellowship with only those churches to which you were going before lock-down. That is the order and discipline expected of a true believer. It is only there that your Pastor would be waiting with a smile on his face to receive you.

3. For the sake of social distancing, if your Pastor requires his people to attend only in the batches of 100, please abide by the same. Be not over-zealous and cause problems to your Pastor, by exceeding the given numbers.

4. During worship service, please do sit in the place advised by the Church Pastor or Elders. Like little ones, do not make a fuss by saying ‘this is where I usually sit”.

5. Don’t contend by saying that I am a sincere believer Why must I wash my hands? Why must I use sanitizer? or Why should I wear a mask? The church appreciates your faith. At the same time, for the sake of overall well-being, you must extend your fullest cooperation to the church.

6. You are seeing your church believers after a long time. Our of excitement don’t seek an embrace or extend your hand. Nothing wrong in inquiry others, but bear in mind the social distancing rule.

Similarly, after the end of service, please do not try to form groups or a mini crowd to exchange pleasantries Your church may have to start the next service immediately. Instead of inconveniencing believers coming for the second service, with the fullness of God’s blessings, please make it a point to leave the premises at the earliest.

7. Better to avoid crowding before the Pastor for prayer, after the end of the service Only those in utmost need of prayer should seek Pastor’s prayer by maintaining adequate social distancing.

NEVER GIVE PLACE TO THE ADVERSARY TO BRING ANY KIND OF DISGRACE. WALK WISELY WITH ALL WISDOM

Share with this information your Contacts.

Yours loving Pastor,
Pr. Robert Simon

Share with