Kwality Shares (KS) WhatsApp Group Guidelines – Kwality Shares (KS) WhatsApp வாட்சப் குழு வழிகாட்டுதல்கள்

Kwality Shares (KS) WhatsApp வாட்சப் குழு வழிகாட்டுதல்கள் – ஓர் கனிவான நினைப்பூட்டல்

Last update on: 05, August 2020

அன்பான KS உறுப்பினர்களே,
நம்முடைய குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளை உங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இவைகளை கவனமாய் வாசித்து கடைபிடிக்கவும்.

1. KS (குவாலிட்டி ஷேர்ஸ்) கர்மேல் ஊழியங்களின் அதிகாரப்பூர்வ வாட்சப் குழு. வாட்சப் பயன்படுத்தும் கர்மேல் குடும்பத்தினர் ஒவ்வொரும் இதிலே இணையவேண்டும்.

2. இக்குழுவின் பிரதான நோக்கம் கர்மேல் ஊழியங்கள் மற்றும் அதன் நிகழ்ச்சிகளை குறித்த முக்கிய தகவல்கள், செய்திகள் மற்றும் அறிவிப்புகளை அதன் அங்கத்தினர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும்.

3. உண்மையானதும், சரிபார்க்கப்பட்டதும், அவசியமானதும், உபயோகமுள்ளதும் எல்லாவற்றிற்கும் மேல், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் பக்திவிருத்திக்கு எதுவானதுமான தகவல்களை மட்டுமே இக்குழுவில் பகிர்ந்துகொள்ளும்படி அதன் அங்கத்தினர்களை உற்சாகப்படுத்துகிறோம்.

4. அரசியல்வாதிகள், அரசாங்கம் மற்றும் தேசத்தின் தலைவர்களை விமர்சிக்கும் /குறைகூறும் படங்கள்/கேலிச்சித்திரங்கள்/காணோளிகள்/செய்திகளை இதிலே பகிர்ந்துகொள்வதை உறுப்பினர்கள் கண்டிப்புடன் தவிர்க்கவேண்டும்.

5. தேவ ஊழியர்களை / ஊழியங்களை விமர்சிக்கும் / குறைகூறும் எந்த ஒரு பதிவையும் இங்கு தவிர்க்கவேண்டும்.

6. சபை உபதேசம் அல்லது நம்முடைய நம்பிக்கையை குறித்த மிக முக்கியமான தகவலை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று யாரேனும் விருப்பப்பட்டால், அத்தகவலை முதலில் போதகரின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டுவந்து, அவருடைய ஒப்புதலை பெற்றபின் பதிவிடலாம்.

7. இழிவான / தவறான / அவதூறான பதிவுகள் குழுவின் அட்மின் மற்றும் உறுப்பினர்களுக்கு சட்ட சிக்கலை கொண்டுவந்துவிடும். ஆகையால, அப்படிப்பட்ட பதிவுகளை தவிர்க்கவேண்டும்.

8. பிறந்த நாள் / திருமண நாள்  வாழ்த்துக்கள், காலை-மாலை வணக்கம், வாழ்த்துக்கள், வேதவாக்கிய சித்திரங்கள் போன்றவைகளை தவிர்கக்வேண்டும்.

9. எந்த ஒரு பொருள் மற்றும் சேவையை குறித்த விளம்பரம் /விற்பனை பதிவை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ஒருவேளை அது உறுப்பினர்களுக்கு பயன்படும் என்று நினைத்தால், அதனை முதலில் குழு அட்மினோடு கலந்தாலோசித்து பின்பு பதிவிடவும்.

10. ஒரே பதிவினை திரும்ப திரும்ப பதிவிடுவதை தவிர்க்கவேண்டும். மறுபதிப்புகளை தவிர்க்க, KS குழுவில் பதிவிடப்படும் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

உங்களின் உற்சாகமான பங்கேற்பின் மூலம் குவாலிட்டி ஷேர்ஸ் குழுவை ஒரு குவாலிட்டியான (தரமுள்ள) நல்ல விழுமியங்களை கடைபிடிக்கும் குழுவாக நிலைநிறுத்த உங்கள் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துகிறோம்.

Kwality Shares (KS) Group Guidelines:

Dear KS Members,
We take this opportunity to bring to your kind attention our group guidelines. Kindly read the same and adhere to.

1. KS (Kwality Shares) is the offical WhatsApp group of Carmel Ministries. Members of Carmel Family using WhatsApp are required to join this group.

2. The primary objective of the group is to share with its members information, news and announcements regarding the events/activities of Carmel Ministries.

3. Members are encouraged to post/share in this group information which are true, verified, relevant, useful and most importantly that which could edify the Body of Christ

4. Members must strictly avoid posting/forwarding _images/cartoons/videos/texts_ which comment/criticize the political leaders, Government and heads of the state.

5. Posts/forwards which criticize Servants of God/Ministries should be avoided.

6. If any member wants to share a post that he/she feels important dealing with doctrine/belief of our church, he/she must share it directly with admin/Pastor and take their consent before posting.

7. Derogatory/false/vilifying postings can invite legal trouble to Group admins and members. Therefore members must exercise utmost caution before forwarding such postings.

8. Birthday/Wedding day greetings to members, Good Morning, Good Night messages and Bible verse pictures may please be avoided.

9. Advertisement/promotion for any product may also be avoided. If one feels that it will be of use to members, the same may be done in consultation with Group admin.

10. Redundant postings should strictly be avoided. Members are kindly advised to go through all the messages posted in KS to avoid repetitions/repostings.

We encourage members of Kwality Shares to uphold, as always, high standards and values to keep this a really quality group by their active participation.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with