New Year Sing-Song Service – புதுவருட கீத ஆராதனை

New Year Sing-Song Service – புதுவருட கீத ஆராதனை

10 ஜனவரி 2021 மாலை 6 மணி

அன்பான கர்மேலர்களே,

Sing Song Service-க்கான உங்கள் பாடல் பதிவுகளை அனுப்பிவிட்டீர்களா? உங்கள் சுட்டீஸ்களின் பாடல்களை கேட்டு நாம் சபையாக தேவனை மகிமைபடுத்தலாமே! ஏன்? பெரியவர்களும் பெற்றோர்களும் இதிலே கலந்துகொள்ளலாமே! பாடுங்கள்!பதிவுசெய்து அனுப்புஙகள்! பரமனை மகிமைபடுத்துங்கள்!

அனுப்பவேண்டிய வாட்சப் எண்: 9944222022

கவனிக்கவேண்டிவை
1.இந்த ஆராதனை கர்மேல்.ஜெபவீட்டில் நடைபெறும். விசுவாசிகள் நேரடியாக வந்து கலந்துகொள்ளலாம்.

2. பாடலை பாட விரும்பும் விசுவாசிகள் தங்கள் பாடலை வீடியோ பதிவுசெய்து முன்னதாக அனுப்பவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒரே mike-இனை பலருக்கு பயன்படுத்தமுடியாத நிலை உள்ளதால் இந்த ஏற்பாடு செய்துள்ளோம்.
3.வெளியூர், வெளிநாடுகள் மற்றும் தொலைவிலிருந்து வரும் மக்களை தவிர்த்து இதில் பாடல் பதிவுனை அனுப்புவோர் ஒவ்வொருவரும் நேரில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்துகிறோம்!

3.இதிலே பங்குபெற நீங்கள் பாடும் பாடலை வீடியோ எடுத்து 9944222022 என்ற எண்ணுக்கு வாட்சப்பில் அனுப்பவேண்டும்.
4.எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடலாம். உங்கள் பாடல் பதிவு 1 நிமிடத்திற்கு மிகாமல் இருந்தால் நல்லது.

5. ஒரு சரணம், ஒரு பல்லவியை மட்டும் பாடவேண்டும்.

6. பாடினவர்களின் விவரத்தையும் வீடியோவுடன் வாட்சப்பில் அனுப்பவேண்டும்.

7. தனியாகவோ, குடும்பமாகவோ, ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர-சகோதரிகள் இணைந்து பாடலாம்.

8. ஒருவர் தனியாகவும் பாடி அனுப்பலாம், குடும்பத்துடன் இணைந்து பாடி அனுப்பலாம். இரண்டும் தனித்தனி வீடியோ பதிவாக அனுப்பப்படவேண்டும்.

9. உங்கள் வீடியோ கேமரா அல்லது திறன்பேசியை சாய்வாக (landscape) வைத்து வீடியோ பதிவுசெய்யவும்.

10. எளிமையான பின்திரை (backdrop) மற்றும் விளக்கின் வெளிச்சம் உங்களுக்கு முன்னால் (front light) இருப்பதை உறுதிசெய்து க்ளோசப்பில் வீடியோ எடுங்கள்.

நீங்கள் அனுப்பும் வீடியோ பதிவுகள் Sing-Song ஆராதனையில் வெளியிடப்படும் /திரையிடப்படும்!

Share with