Carmel 24 Hours Chain Prayer – August 08, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஆகஸ்ட் 08, 2020

Carmel 24 Hours Chain Prayer – August 08, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஆகஸ்ட் 08, 2020

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி

08 ஆகஸ்ட் 2020 காலை 08 : 00 மணியிலிருந்து 09 ஆகஸ்ட் 2020 காலை 08:00 மணிவரையில்.

ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை

15 நிமிடங்கள் – துதி ஸ்தோத்திரம் மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்
ஸ்தோத்திரங்கள்

1. அக்கிரமங்களை எல்லாம் மன்னித்தார்.

2. நோய்களை எல்லாம் குணமாக்கினார்.

3. பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டார்.

4. கிருபையினால் முடிசூட்டினார்.

5. இரக்கத்தினால் – தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குவது போல் – முடிசூட்டினார்.

6. நன்மையினால் திருப்தியாக்குகிறார்.

7. பெலத்தினால் இடைக்கட்டுகிறார்.

ஜெபியுங்கள் !
1. ஓடுக்குப்படுகிற யாவருக்கும் – பொருளாதாரத்தில, சமூகத்தில், பணித்தளத்தில், குடும்பத்தில் – கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்யுபடி (சங்கீ 103:6).

2. கர்த்தர் தமது மிகுந்த இரக்கத்தின்படி நமது அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து இந்த கொடிய கொள்ளைநோயை முற்றிலும் விலக்கும்படி (சங்கீ 103:4).

3. கர்த்தர் தமக்கு பயப்படுகிற பயத்தை நமக்கு கட்டளையிட்டு அவரது கிருபையை நம்பில் விளங்கப்பண்ணும்படி (சங்கீ 103:17-18).

4. நமது பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் – சந்ததி முழுவதும் – வாழ்க்கையில் கர்த்தரின் நீதி விளங்கும்படி (சங்கீ 103 :17-18).

5. நமது தலைவர்கள் செம்மையான பாதையில் தேசத்தை வழிநடத்த – சரியான முடிவுகளை எடுக்க (சங்கீ 103:19).

6. கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு அதின்படி செய்கிற ஆவிக்குரிய பெலன் உள்ளவர்களாக நம காணப்பட (சங்கீ 103:20).

7. நம்முடைய வாழ்க்கையிலே தேவனுக்கு பிரியமானதை செய்ய (சங்கீ 103:21).

8. நம்முடைய வாழ்க்கை முழுவதும் அவரது கிரியையாகவே விளங்க – அவரே வனைத்து, இயக்கி, உருவககுகிற ஒரு வாழ்க்கையாக விளங்க.

9. தேவனுடைய தூதர்களாக (Messengers, செய்தியாளர்கள்) பணிவிடைக்காரராக, சேனைகளாக (இராணுவ வீரனாக) காணப்பட (சங்கீ 103:20-21).

10. போதகரின் உடல்நிலை மிகவும் சீராக தேறிவருகிறது. பாஸ்டர், பாஸ்டரம்மா, உதவியாளர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

பொதுவான குறிப்புகள்:
# வியாதி மற்றும் மூப்பினால் பெலவீனத்துடன் காணப்படும் நம் கர்மேல் உறவுகள் மற்றும் அவர்களை பராமரிப்போரின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.
# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.
# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

CARMEL 24 HOURS PRAYER CHAIN
08 August 2020 08:00 AM to 09 August 2020 08:00 AM.

OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes – Praise and Worship and Sanctification Prayer
Praise!

1. He forgave my sins.

2. He healed all my diseases.

3. He saved my life from destruction.

4. He crowned me with grace.

5. As a father to his child – He crowned me with mercy.

6. He satisfied me with goodness.

7. He girdedth me with strength.

Pray!

1. For the Lord to execute righteousness and judgement to all those who are oppressed – financially, socially, in work place, in family (Psalms 103:6).

2. For God to forgive us through his tender mercies and totally remove this dreadful pandemic (Psalms 103:4).

3. For God to command to us the fear of fearing him and bestow his grace (Psalms 103:17-18).

4. For the judgement of God to be seen in the lives of our children, children’s children – whole generation (Psalms 103:17-18).

5. For our leaders to lead the nation in right path – to take right decision. ( Psalms 103:19).

6. We should become spiritually strong people who hear God’s word and do accordingly ( Psalms 103:20).

7. In our lives to do that which is pleasing to God (Psalms 103:21).

8. Our whole life should become his handiwork – my whole life should be moulded, made and formed by him.

9. We should be God’s Angels ( Messengers, News Reporters), God’s servants, God’s Army (Soldier) (Psalms 103:20-21).

10. Pastor’s health is steadily improving. Best health, strength, well-being and protection of Pastor, Pastoramma and office staff.

General Points
# Senior Citizens, sick and weak Carmeleans and their care-givers must enjoy good health, strength and divine protection.

# Medical professionals, Sanitation Workers, Policemen, Government Employees, Merchants, Bankers – Welfare of all public relation people should be taken care.

# People in agony and despair should not curse God, but should return to him in repentance.

# Pray for our loves ones staying in different cities/states/countries.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with