Carmel 24 Hours Chain Prayer – August 15, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஆகஸ்ட் 15, 2020

Carmel 24 Hours Chain Prayer – August 15, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஆகஸ்ட் 15, 2020

15 ஆகஸ்ட் 2020 காலை 08:00 மணியிலிருந்து 16 ஆகஸ்ட் 2020 காலை 08:00 மணிவரையில்.

ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை

15 நிமிடங்கள் – துதிஸ்தோத்திரம் மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்
ஸ்தோத்திரங்கள்.

45 நிமிடங்கள் – மன்றாட்டு ஜெபம்

ஜெபியுங்கள் ! தேசத்திற்காக!
ஜெபியுங்கள்! நமது தேசத்திற்காக!

1. நமது இந்திய திருநாட்டின் ‘முகப்புவாசகத்தின்படியே’ (Motto) நாட்டின் எல்லா துறைகளிலும் சத்தியம் ஜெயிக்க.

2. நமது நாட்டில் உள்ள எல்லா திருச்சபைகளும் சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாய் விளங்க.

3. தீவிரவாதம், பிரிவினைவாதம், இனவெறி, லஞ்சலாவண்யம், சுயநலம், சுரண்டல், பிறப்பால் உள்ள வேற்றுமைகள் – போன்ற தீமைகள் ஒழிந்து ஒருமனம், ஒற்றுமை, சமாதானம், மகிழ்ச்சி நாட்டில் தழைத்தோங்க!

ஜெபியுங்கள்! நமது பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்காக !

4. ஆரோக்கியத்திற்காக, பெலனுக்காக.

5. ஆவியின் நிறைவுக்காக.

6. கிறிஸ்துவுக்குள் நின்று தேவநாம மகிமைக்காக அவரது பரிபூரண சித்தத்தின்படி எல்லா ஊழியங்களையும் நிறைவேற்ற.

ஜெபியுங்கள்! சபையாருக்காக!

7. தேவனுக்கு சித்தமான எல்லவற்றிலும் தேறினவர்களாக, பூரண நிச்சயமுடையவர்களாயிருக்க.

8. ஜெபத்தில் உறுதியாக தரித்திருக்க, எல்லா சூழ்நிலைகளிலும் தேவசித்தத்தில் நிலைத்திருக்க, ஆவிக்குரிய சிந்தையுடையவர்களாய் கிறிஸ்துவின் சாயலில் வளர.

9. பிள்ளைகள் கர்த்தருக்குள் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட, வாலிப வயதிலும் கர்த்தருக்குள்ளாகவே காக்கப்பட.

10. சுகம், பெலன் ஆரோக்கியம் நிறைவாக அருளப்பட, வியாதி பெலவீனங்கள் முற்றிலும் அகற்றப்பட.

பொதுவான குறிப்புகள்

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில் / மாநிலங்களில் நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.

CARMEL 24 HOURS PRAYER CHAIN
15 August 2020 08:00 AM to 16 August 2020 08:00 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER

15 Minutes – Praise and Worship and Sanctification Prayer.

45 Minutes – Intercession Prayer.

Pray for our Nation!

1. In line with the motto of our Nation, Truth must prevail in all the sectors.

2. All the churches in our Nation should serve as ‘pillar and ground’ for the truth.

3. Elimination of terrorism, separatism, casteism, racial discrimination, bribery, selfishness and exploitation. Nurturing of oneness, solidarity, peace and happiness amongst people.

Pray for your Pastors! (Pastor and Sister)

4. For good health, strength.

5. For the fullness of Spirit.

6. To fulfill all the ministries in accordance with the perfect will of God.

Pray for the Believers!

7. To stand complete and perfectly sure in all the will of God.

8. To remain steadfast in prayer and stand in the will of God in all the circumstances, to be spiritually minded and grow in the likeness of Christ.

9. For children to be taught, nurtured in the Lord and to remain in Christ even during their youth.

10. For perfect health, strength and well-being and for removal of all sicknesses and weakness.

General Points

# Medical professionals, Sanitation Workers, Policemen, Government Employees, Merchants, Bankers – Welfare of all public relation people should be taken care.

# People in agony and despair should not curse God, but should return to him in repentance.

# Pray for our loves ones staying in different Cities / States / Countries.

# The Lord God should miraculously stop this COVID-19 pandemic.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with