Carmel 24 Hours Chain Prayer – January 08, 2021– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜனவரி 08, 2021January 08, 2021

Carmel 24 Hours Chain Prayer – January 08, 2021– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜனவரி 08, 2021

 

கர்மேல் 24 மணிநேர சங்கிலி ஜெபம்

வெள்ளி, 08 ஜனவரி மாலை 06 முதல் சனி, 09 ஜனவரி மாலை 06 வரை

ஒரு மணிநேர ஜெபத்திற்கான ஓர் உருவரை


துதி, ஸ்தோத்திர சுத்திகரிப்பு ஜெபநேரம் : 15 நிமிடங்கள்

மன்றாட்டு ஜெபவேளை : 45 நிமிடங்கள்
ஜெபக்குறிப்புகள்:

ஜெபியுங்கள் !

1. இந்த ஆண்டிலும் கர்த்தர் தாமே புதிய தரிசனங்களை, புதிய திட்டங்களை நம்முடைய ஊழியருக்கு கொடுத்து சபையின் அனைத்து ஊழியங்களும் தங்குதடையின்றி நிறைவேறவேண்டும். பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்கு தேவன் தாமே நல்ல சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் அபிஷேகத்தை அருளி இந்த ஆண்டு முழுவதும் வழிநடத்தவேண்டும்.

2. சபையின் பல்வேறு ஊழிய பகுதிகள் மற்றும் அதில் பங்கெடுப்பவர்கள் – சகோதரிகள் ஜெபம், சிறுபிள்ளை ஊழியம், ஊடக் குழுவினர், தகவல் மையம், உதவி மையம், திருவிருந்து ஆயத்தம், அன்பின் விருந்து குழு, பாடகர் குழு, இசைக் குழு, மிஷனரி திட்ட ஒருங்கினைப்பாளர் குழு, பங்காளர்கள் மானிய விலை வேதாகம திட்டம், காணிக்கை சேகரிப்பு, சபை அலுவலக பணியார்கள் மற்றும் தன்னார்வர்கள் – இவர்களுக்கு கர்த்தரை ஸ்தோத்தரித்து தேவ நாம மகிமைக்கென்று இந்த ஆண்டில் இவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பு இன்னும் சிறப்புடன் விளங்க வேண்டிக்கொள்ளுங்கள்.

3. சபை முழுவதும் அவர் விரும்பும் பரிசுத்தத்திலே வளர, அவருடைய பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாகும்படிக்கு நாம் அழைக்கப்பட்டவர்கள் (எபி 12:10) என்ற உணர்வோடு பரிசுத்தத்தில் வளர்ந்துபெருக, அந்த உணர்வை கர்த்தர் எல்லாருக்கும் கட்டளையிட.

4. நம்முடைய மிஷனரி குடும்பங்களை பெயர்பெயராக நினைத்து இந்த புதிய ஆண்டிலும் கர்த்தர் அவர்களை கொண்டு நிறைவேற்றவேண்டிய ஊழியங்களை நிறைவேற்றவும், மிஷனரிகள் மற்றும் குடும்பத்தினரின் சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தேவைகள் யாவும் குறைவின்றி சந்திக்கப்படவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

5. தேவப்பிள்ளைகள் எல்லா நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து தேவனையும, தேவனுடைய சித்தத்தை அறிகின்ற அறிவிலேயும் வளர. கர்த்தர் விரும்பாத, கர்த்தருக்கு வேதனையை தரக்கூடிய அசுத்தமும், அருவருப்பும் முற்றுமாக சபையைவிட்டு அகன்றுபோக.

6. பரிசுத்தம், பக்தி, ஆத்தும பாரம் – இம்முன்றும் நம்முடைய விசுவாசிகள் ஒவ்வொருவரின் இலக்காக மாறும்படிக்கு.

7. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு தேர்தலை சந்திக்கவுள்ளது. கர்த்தருக்கு சித்தமான ஒரு நல்லாட்சி அமையவேண்டும்.

8. கொரோனா வைரஸின் உருமாறின வடிவம் தீவீரமான பாதிப்பினை உண்டாக்கும் என்ற சொல்லப்படுகிறது. நம் மாநிலத்தில், நம் நாட்டில் இது எவ்வித தாக்கத்தை உண்டாக்காதபடிக்கு கர்த்தர்தாமே வேலியடைத்துகாக்கவேண்டும்.

9. கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. நம் மாநிலத்திலும் அசாதாரண மழை மற்றும் குளிர் நிலவுவதால் பனிக்கால நோய்களிலிருந்து பிள்ளைகள், பெரியவர்கள் காக்கப்படவேண்டும்.

10. இந்த மாதத்திலும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தொற்றின் பரவல் நீங்காத ஒரு சூழலில் நம் பிள்ளைகளின் நலன் காக்கப்படவேண்டும்.

 

Carmel 24 Hour Prayer Chain | 08 January 06:00 PM To 09 January 06:00 PM | One Hour Prayer Outline

Praise And Worship : 15 Minutes

Intercessory Prayer : 45 Minutes

PRAYER POINTS

PRAY !

1. Even in this New Year, God to grant new visions, new plans, new unction and best health and strength to our leaders ( Pastor and Pastoramma ) to carry out all the ministries without any hindrance whatsoever for the Glory of God.

2. Praise God for different ministerial areas and the people incharge/involved – Sister’s Prayer, Children Ministry, Media Team, Info centre, Help Centre, Holy Communion arrangement, Love-feast team, Singing Team, Music Team, Missionary Project Partners and Co-ordinators, Bible Project, Holy Offering Collection team, Church Staff and General Volunteers – Pray for God to use them even more mightily in this new year!

3. Our church should grow and mature in the standard of holiness expected by God with the sure conviction that we have been called to be the partakers of his holiness (Heb 12:10).

4. Remember our Missionary Families individually. All the ministry plans for this year to be fulfilled with no obstacle whatsoever. God to grant good health, strength even to their children and for all the needs to be met.

5. People of God should fully submit themselves to God and His Will and grow in the knowledge of Knowing the Will of God.

6. Purity, Piety, Passion for Souls – These three should be the focus and goal of believers.

7. Tamil Nadu is going to face Assembly Elections in a few months time. Pray that God commands a Government which is fully committed to the welfare of all its people is elected.

8. New strain of Corona Virus is expected to be more deadlier, as per media reports. Pray that it should not cause any damage whatsoever in our state, in our country.

9. Bird-flu cases are on the rise in Kerala. Our State is also experiencing unprecedented cold weather and unseasonal rains posing a threat in the form of various winter related infections. Pray for the protection of our elders and children.

10. Government is proposing to open schools for 10th and 12th students. With the pandemic still around, fervently pray for divine protection of our children, student community.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with