Carmel 24 Hours Chain Prayer – July 04, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூலை 04, 2020

Carmel 24 Hours Chain Prayer – July 04, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூலை 04, 2020

கர்மேல் 24 மணிநேர ஜெபசங்கிலி| 04 ஜூலை காலை 08:00 மணியிலிருந்து 05 ஜூலை காலை 08:00 வரை

ஒரு மணிநேரத்திற்கான ஓர் ஜெப உருவரை

15 நிமிடங்கள் : துதி ஸ்தோத்திரம், சுத்திகரிப்பு ஜெபம்

# போதகருக்கு இம்மட்டுமாய் கர்த்தர் கொடுத்த சுகத்திற்காக நன்றியோடுகூட கர்த்தரை துதித்து ஸ்தோத்தரிப்போம்.

45 நிமிடங்கள்: மன்றாட்டு ஜெபம்

ஜெபக்குறிப்புகள்:

1. உடல்சோர்வு, பெலவீனம் முழுவதும் நீங்கி, பூரண சுகம், பெலன் ஆரோக்கியத்தை போதகர் அனுபவிக்க.

2. ஒத்தாசையாக இருந்து ஊழியங்களை நிறைவேற்றும் பாஸ்டரம்மாவுக்கு தேவையான சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் அபிஷேகத்தின் நிறைவு.

3. போதகருக்கு உதவியாக இருக்கும் கர்மேல் அலுவலக பணியாளர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

4. இணையவழி ஞாயிறு ஆராதனைகள் தங்குதடையின்றி நடக்க. ஒளிப்பதிவு, எடிட்டிங் பணியில் உதவியாக இருக்கும் ஊடகப் பணியாளரின் சுகம், பெலன் மற்றும் பாதுகாப்பு.

5. இணையவழி ஞாயிறு பள்ளியை ஒருங்கினைக்கும் சகோ. எப்சி, சகோ. நோப்ளின் மற்றும் குழுவினருக்கு தேவையான சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் ஆபிஷேகத்தின் நிறைவு.

6. கர்மேல் உறவுகளில் சிலர் சுகவீனமாய் உள்ளனர். அவர்களுக்கு தெய்வீக விடுதலை மற்றும் பாதுகாப்பு உண்டாக.

7. பொதுமுடக்கத்தினால் நம் உறவுகளில் சிலர் வேலை, தொழில் மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர். குடும்ப தேவைகள் குறைவின்றி சந்திக்கப்பட்டு, புது வாசல்கள் ஆச்சரியமாய் திறக்கப்படவேண்டும்.

8. அநேக சபை போதகர்கள், சுவிசேஷகர்கள், மிஷனரிமார்கள் இந்த நாட்களில் சரீர பெலவினம் மற்றும் பொருளாதார சவால்களை சந்தித்துவருகின்றனர். கர்த்தர் தாமே இரங்கி இவர்களுக்கு நல்ல சுகத்தை கொடுத்து குடும்ப தேவைகளை சந்திக்கவேண்டும்.

9. நம்முடைய தமிழ்நாட்டின் ஆசீர்வாதத்துக்காக ஊக்கத்துடன் ஜெபிக்கவேண்டும். ஒரு பக்கம் வியாதியின் பரவல் இன்னொரு பக்கம் காவல்துறை அத்துமீறலினால் உண்டான அவப்பெயர்.

10. தேசத்தையும் உலகத்தையும் காரிருள் மூடியுள்ளது. கர்மேல் விசுவாசிகள், தேவப்பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தில், வசிப்பிடத்தில், பள்ளி கல்லூரிகளில், அலுவலகங்களில், திருச்சபையில் தேவனுடைய ஒளியை பிரகாசிக்கிறவர்களாக எழும்பவேண்டும் (ஏசாயா 60:1,2).

பொதுவான

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள்
– மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.

 

CARMEL 24 HOURS PRAYER CHAIN | 04 July 08 AM to 05 July 2020

Outline for One Hour Prayer
15 Minutes – Praise and Worship and Prayer for Sanctification

# Praise and Thank God for the healing commanded to our Pastor.

45 Minutes – Intercessory Prayer.

Prayer Points
1. Our Pastor should experience divine relief from all physical weariness and enjoy very good health and strength.

2. Besides providing care, our Pastoramma is also fulfilling her ministries. Pray for good health, strength and fulness of anointing.

3. Health, strength and protection to Carmel Staff helping our Pastor and Pastoramma.

4. Online Sunday Services to get relayed without any hindrance. Good health, strength and protection of media people involved in shooting, editing and uploading the video.

5. Good health, strength, divine protection and fulness of anointing to Sr. Hepsi, Sr. Noblin and the Children Ministry team involved in Online Sunday Class.

6. Some loved ones of our Carmel family are continuing to be sick and weak. They should experience divine deliverance and divine protection.

7. Lock-down has left some of our loved ones jobless. Some have lost their businesses. The needs of the family should be met miraculously and God should open up new avenues and regular income source.

8. Many Pastors, Evangelists, Missionaries are fighting with sickness and financial constraints. God, in his mercy, should grant good health and meet all their needs.

9. Pray for the blessings and protection of Tamil Nadu. On the one hand, it is battling with the spread of virus; on the other hand, the recent police atrocity has badly tarnished the state’s reputation.

10. Thick darkness has covered the whole nation and the world. Carmeleans, people of God must ‘ARISE‘ in their families, in their streets, in their schools/colleges, in their work places, in Churches and ‘SHINE‘ as the ones carrying the light of the Gospel (Isaiah 60:1,2).

General
# Medicos, health workers, policeman, government staff, business people, bankers – the welfare of all public relation workers should be guarded.

# People, instead of cursing God amidst their pains, they must return to him.

# Pray for our loved ones who are stranded/staying in different states/districts and countries.

# God to stop this pandemic Covid 19 in a miraculous manner.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with