Carmel 24 Hours Chain Prayer – July 18, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூலை 18, 2020

Carmel 24 Hours Chain Prayer – July 18, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூலை 18, 2020

கர்மேல் 24 மணிநேர ஜெபசங்கிலி

18 ஜூலை காலை 08:00 மணியிலிருந்து 19 ஜூலை காலை 08:00 வரை

ஒரு மணிநேர ஜெபத்திற்கான ஓர் உருவரை

15 நிமிடங்கள்: துதி ஸ்தோத்திரம், சுத்திகரிப்பு ஜெபம்
45 நிமிடங்கள்: மன்றாட்டு ஜெபம்

ஜெபக்குறிப்புகள்:
1. வரலாறு காணாத இருள் உலகை சூழ்ந்திருந்தாலும், தேவபிள்ளைகளாகிய நாம் கர்த்தரிடமிருந்து ‘*எழும்பி பிரகாசி* எனும் அழைப்பினை பெற்றிருக்கிறோம். நம்முடைய குடும்பங்களில். தெருக்களில், வேலையிடங்களில் நாம் ஒவ்வொருவரும் எழும்பி பிரகாசிக்க தேவன் கிருபையருளவேண்டும். (ஏசா 60:1).

2. இந்த நாட்களில் நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் பெலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு போதகர் மூலமாக தேவன் அருளின ஒரு விலையேறப்பெற்ற ஆலோசனை “அந்நிய பாஷையில் பேசுவது“. அபிஷேகம் பெற்றவர்கள் இதிலே வளரவேண்டும், பெறாதவர்கள் இதனை அதிகமாய்வாஞ்சித்து அடையவேண்டும்.

3. போதகரின் உடல்நிலை மிகவும் சீராக தேறிவருகிறது. இந்நாட்களில் நமக்காக ஜெபிக்கவும் தேவதூதுகளை ஆயத்தப்படுத்தவும் தேவன் அவருக்கு கிருபை செய்துள்ளார். போதகரின் பூரண சுகம், கவனித்துகொள்ளும் பாஸ்டரம்மா, சபை பணியாளர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புகாக தொடர்ந்து ஜெபிப்போம்.

4. வியாதி பெலவீனத்துடன் காணப்படும் சபை விசுவாசிகள் மற்றும் அவர்களை கவனித்துகொள்வோரின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

5. புதிய கல்வியாண்டு ஆன்லைன் முறையில் தொடங்கிவிட்டது. அநேக பெற்றோரின் வேலை, தொழில் மற்றும் பொருளாதார சூழநிலை கேள்விக்குறியாக மாறியுள்ள சூழ்நிலையில் கல்விக்கட்டணங்களை செலுத்துவது ஒரு பெரும் சவாலாக உள்ளது. பிள்ளைகளின் கல்வி தொடராமல் போகவும் வாய்ப்புள்ளது. தேவன் தாமே புது வழி வாசல்களை திறந்து தேவைகளை சந்திக்கவேண்டும்.

6. கர்மேல் உறவுகளின் குடும்பங்களில் தேவசமாதானம், சந்தோஷம் பூரணமாக காணப்படவேண்டும். அன்பும், ஐக்கியமும் பெருகவேண்டும். ஒருமனம் ஒற்றுமை வளர்ந்தோங்கவேண்டும்.

7. இந்த நாட்களில் சில தேவ ஊழியர்களும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வேதனைகளை அனுபவிக்கின்றனர். ஊழியக்காரரின் சுகத்தை விரும்பும் தேவனால் இவர்கள் குணமடைந்து பாதுகாக்கப்படவேண்டும், தேவைகள் சந்திக்கப்படவேண்டும்.

8. அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் போன்ற பொது சேவையில் இருக்கும் மக்களும் இந்நாட்களில் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். அரசுத் துறையில் இருக்கும் ஒவ்வொருவரின் சுகம் மற்றும் பாதுகாப்பிற்காக வேண்டிக்கொள்ளுங்கள்(1 தீமோ 2:2).

9. தமிழ்நாட்டில் கொரோனோ தொற்றின் தாக்கம் முழுவதுமாக கட்டுக்குள் வரவேண்டும். கூடுமானால் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை சொல்லி ஜெபியுங்கள்.

10. நம்முடைய தேசத்திற்கு ஷேமம் உண்டாக, தேவப்பிள்ளைகள் யாவரும் தங்களை தாழ்த்தி, தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி தேவனை தேடவேண்டும்.

பொதுவாக
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.

Carmel 24 Hour Prayer Chain
18 July 2020 08:00 AM to 19 July 2020 08:00 AM
One Hour Prayer Outline
15 Minutes: Praise & Worship, Sanctification prayer
45 Minutes: Intercessory Prayer

Prayer Points:
1. Even though the world is gripped in darkness, God’s counsel and call to his people has been to “Arise and Shine”. May the Lord shower his grace upon each and everyone of us to to arise and shine for the Lord (Isa 60:1).

2. In these troubled times, for the strength and well-being of our spirit, soul and body, we have received a precious counsel from the Lord through our Pastor to “Speak in Tongues”. Those who have received the anointing of the Holy Spirit must grow in this gift. Those who are yet to receive must sincerely desire and receive it.

3. Pastor’s health very steadily improving. By God’s immense grace nowadays he is able to spend to pray for us and to prepare God’s messages. Pastor’s perfect health, strength, well-being and divine protection upon Pastoramma and the assisting staff.

4. Pray for the divine healing of our loved ones who are sick and weak. Pray for the strength, well-being and divine protection over care-givers.

5. New Academic Year has just begun through on-line education. With job, business and finances of many a family in doldrums, it is indeed a big challenge for the parents to pay fees. Many a children may even be forced to drop out. Lord God should open new door and meet all their needs.

6. Fulness of peace and joy in all Carmel families. Love and solidarity should continue. Unity and one-mind should grow.

7. These days, even some servants of God are sick and suffering. Through our God who desires the health (prosperity) of his Servants, they should be healed and protected, needs to be met.

8. Ministers, MLAs, District Collectors and such people who are in public service are getting infected these days. Kindly pray for the health and protection of every other employee in Government Department. (1 Timo 2:2)
9. The spread of infection in Tamil Nadu must come under control. If possible, pray by taking the name of each and every district of Tamil Nadu.

10. In order for our country to be healed, people of God should seek God in all humility by confessing their sins and turning from their evil ways.

General
# Medicos, health workers, policeman, government staff, business people, bankers – the welfare of all public relation workers should be guarded

# People, instead of cursing God amidst their pains, they must return to him.

# Pray for our loved ones who are stranded/staying in different states/districts and countries.

# God to stop this pandemic COVID-19 in a miraculous manner.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with