Carmel Chain Prayer – கர்மேல் ஜெப சங்கிலி
ஜூன் 06, 2020 காலை 08:00 மணியிலிருந்து ஜூன் 07, 2020 காலை 08:00 மணி வரை
ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
15 நிமிடங்கள் : துதி ஆராதனை மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்
ஸ்தோத்தரிப்போம்!
– சகோ. ஓமிகா அவர்களுடைய தந்தை சகோ. ரமணன் மற்றும் அவர்களுடைய சகோதரன் முற்றுமாக குணமடைந்து தங்கள் வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.
– சகோதரி. பெர்னி மற்றும் சகோதரர். ஜோ தேறிவருகிறார்கள். பரிபூரண சுகம் அடையவேண்டும்.
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் !
45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்
ஜெபக் குறிப்புகள்:
1. உலக அளவில் அமெரிக்க தேசம் ஒரு அசாதாரண சூழ்நிலையை சந்தித்துகொண்டுவருகிறது. தேசத்திற்கு ஷேமம் உண்டாக வேண்டும், அங்குள்ள தேவப்பிள்ளைகள் காக்கப்படவேண்டும்.
2. கிறிஸ்தவ நாடுகளில் உள்ள தேவப்பிள்ளைகள் எல்லாரும் சத்தியத்தின் பக்கமாக திரும்பவேண்டும்.
3. நம்முடைய தேசத்திற்கு ஷேமம் உண்டாக, தேவப்பிள்ளைகள் யாவரும் தங்களை தாழ்த்தி, தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி தேவனை தேடவேண்டும்.
4. தேவப்பிள்ளைகள் பலவிதமான காற்றுகளினால் அலைவுபடாமல், கள்ள உபதேசம், தவறான வழிகாட்டுதல்களுக்கு, உபதேசங்களுக்கு முற்றுமாக விலகியிருக்கவேண்டும் (எபேசி 4:14).
5. கர்மேலர்கள் அவர்கள் வசிக்கும் தெரு, பணியிடம், பள்ளி / கல்லூரி மற்றும் உறவுகளில் குறைந்தபட்சம் மூன்று நபர்களின் இரட்சிப்புக்காக ஜெபிக்கவும், பொறுப்பெடுக்கவும் தேவன் கிருபை அருளவேண்டும்
6. பொது முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், தேவப்பிள்ளைகள் அநேகர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வாழவழியில்லை என்று கருதி ஒருவரும் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது.
7. சபைகளை திறப்பதற்கான அனுமதி வழங்கியபின் சபை ஆராதனைகளை, எப்படி நடத்தவேண்டும் என்ற தேவ ஆலோசனை நம்முடைய பாஸ்டர், பாஸ்டரம்மா மற்றும் எல்லா தேவ ஊழியர்களுக்கு உண்டாக வேண்டும்
8. பொதுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திலுள்ள பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் பதட்டத்திற்கு விலகி, நல்ல நினைவாற்றல், தெளிந்த புத்தி, அமைதியான மனநிலையோடும், பாதுகாப்போடும் தேர்வுகளை சந்திக்கவேண்டும்.
9. ஆன்லைனில் பாடங்கள் படிக்கும் வசதி அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைப்பதில்லை. நம்முடைய அரசாங்கத்தின் கல்விகொள்கை மற்றும் திட்டங்கள் அனைவருக்கு சமதளத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக் இருக்கவேண்டும்.
10. நம்முடைய சென்னை மாநகரம் கொரோனா (கோவிட் -19) கருஞ்சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம்முடைய பட்டணம் நோய்தொற்றில்லாத பகுதியாக மாற பாரத்துடன் வேண்டிக்கொள்வோம்.
பொதுவாக
# வியாதி பெலவீனத்துடன் உள்ள நம் கர்மேல் உறவுகளை நினைத்து கொள்ளுங்கள். பூரண சுகத்தையும் ஆரோக்கியத்தையும் அனுபவித்து நலமுடன் வாழவேண்டும்.
– சகோ. டேரில் கன்னிங்காம் (கொரோனா தொற்று)
(பாஸ்டர் க்ளென் கன்னிங்காமின் சகோதரர்).
– சகோ. ஜோ.
– சகோதரி. பெர்னி (சகோ. ஜோ அவர்களின் சகோதரி).
– சகோ. அர்சுலா பெலிகன்.
– சகோ. லியோ.
– சகோதரி. ஓமிகாவின் அண்ணி குடும்பத்தினருக்கு காய்ச்சல்.
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.
# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.
# பொருளாதார நெருக்கடியிலிருந்து அவரது பிள்ளைகள் காக்கப்படும்படிக்கு (சங் 34.10).
– வேலை இழந்தவர்கள்.
– சம்பளம் இழந்தவர்கள்.
– வியாபாரிகள்.
– தொழில் முனைவோர்.
– தேவ ஊழியர்கள்.
# பஞ்சத்தின் விளைவாக ஏற்படும் சமூகவிரோத தீயச்செயல்களுக்கு கர்த்தர் தம் பிள்ளைகளை விலக்கிக் காத்திட.
# வெளியூர்களில் / மாநிலங்களில் / நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.
# பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்காக ஜெபியுங்கள்.
CARMEL CHAIN PRAYER
June 06, 2020 08:00 am to June 07,2020 08:00 am
AN OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes: Praise and Worship and Sanctification Prayer
PRAISE REPORT!
– Bro. Ramanan and his elder son (Sr.Omika’s father and brother) have fully recovered and are discharged form hospital.
– Sr. Bernie and Br. Joe are improving. They must enjoy good health.
Praise be to God!
45 Minutes: Intercessory Prayer
PRAYER POINTS
1. United States of America(USA) is facing one of its worst crisis. The country should be healed and the children of God should be protected.
2. People of God in all the Christian nations should turn towards the truth.
3. In order for our country to be healed, people of God should seek God in all humility by confessing their sins and turning from their evil ways.
4. People of God should not be led astray but guarded from every wind of doctrine and wrong teaching (Eph 4:14).
5. God must give the grace to all Carmelites to be responsible and bear accountability for the salvation of at least 3 members in their street / work place / class / relatives.
6. Many, including children of God, have lost their livelihood during this lockdown. None should take the extreme decision of ending their life due to poverty and lack of income. They must hold on strongly to God.
7. Post the announcement to open places of worship, God’s counsel and advise should be revealed to our Pastor, Pastoramma and other servants of God on how to run their church services, programmes.
8. 10th Standard Students, now constrained to write their annual exams must be fully guarded against fear and stress. God should grant to them good memory power, sound and serene mind to write the exams under his protective cover.
9. Not all children are benefitted by online classes. The educational policies and plans of the Government should help create a level playing field to children belonging to every strata of the society.
10. Chennai city is already declared as Corona Virus (COVID -19) Dark Red Zone. Fervent prayers coveted for Chennai to become no-infection zone.
GENERAL
# Pray for loved ones who are weak and sick
– Bro. Darryl Cunningham (Covind 19) (Brother of Pr.Glenn Cunningham).
– Br. Joe.
– Sr. Bernie.
– Sr. Ursula Pelican.
– Br. Leo.
– Sr. Omika’s sister-in-law and her mother (fever).
# Medical Professionals, Sanitation Workers, Police Force, Government Employees, Merchants, and Bankers – welfare of Public Relation Officers to be preserved. Pray that people, in their agony and pain, should not curse God. Bur rather return to him.
# Pray that His children are well preserved even during this economic crisis (Psalms 34.10).
– Those who lost their jobs.
– Those who have lost their salary.
– Business people.
– Servants of God.
# Pray for our Lord to preserve his people from all the anti-social activities which could creep up during this famine.
# Pray for all our relatives who are stationed/stuck in different cities, states and countries.
# Pray for our Pastor and Pastoramma
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்