Carmel 24 Hours Chain Prayer – June 13, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூன் 13, 2020

Carmel 24 Hours Chain Prayer – June 06, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூன் 06, 2020

June 13, 2020 08:00 am to June 14, 2020 08:00 am

Outline for One Hour Prayer

15 Minutes: Prayer for sanctification, Praise and Worship.

45 Minutes: Intercessory prayer

(1) O Lord forgive us; Have mercy on us; Command healing to our nation
Gone very far from Christ

  • Disregarding the church services
  • No fear of God in worship services
  • Worship songs becoming howling (Amos 8:3).
  • Worship services reduced to a place of revelry, entertainment and dance parties.
  • Instead of prophetic messages that convict people about sin, judgement and righteousness preaching sessions has become hilarious talk and humor clubs.
  • Showing utter disdain throwing to the wind all the promises and covenant made in the presence of God.
  • Husband and Wife dishonoring the presence of God by transgressing the marriage covenant.
  • In Holy communion Services becoming utterly guilty of the body and the blood of the Lord and stamping its sanctity under our feet. With truth discounted and doctrines overlooked, this remains only as a ritual.
  • The days of christian marriages being fixed by the heaven, determined by saints are gone. Now instead of parents, parks and bus-stands are arranging the marriages.
  • Salient Christian Doctrines and Regulations have been fully set aside and have become an object of scorn.
  • Instead of pleasing God, we have become lovers of our own selves, coveteous, man-pleasers, pleasure-lovers,
  • Lord forgive us of every other shortcoming and things that are displeasing to you in our life.
  • Lord have mercy on us, Command healing to our nation!

(2) God should have mercy and reveal his marvellous works to all all those who have lost their job, business and income.

(3) God must give the grace to all Carmelites to be responsible and bear accountability for the salvation of at least 3 members in their street/work place/class/relatives.

(4) Post the announcement to open places of worship, God’s counsel and advise should be revealed to our Pastor, Pastoramma and other servants of God on how to run their church services, programmes.

(5) The infection count is continuing to climb very steeply in Chennai. No need to panic, but need to be careful. Fervent prayers coveted for Chennai to become no-infection zone.

GENERAL

# Pray for loved ones who are weak and sick.

# Pray that people, in their agony and pain, should not curse God. Bur rather return to him.

# Medical Professionals, Sanitation Workers, Police Force, Government Employees, Merchants, and Bankers – welfare of Public Relation Officers to be preserved.

# Pray for all our relatives who are stationed/stuck in different cities, states and countries.

# Pray for our Pastor and Pastoramma.

கர்மேல் ஜெப சங்கிலி
ஜுன் 13, காலை 08:00-லிருந்து ஜூன் 14, காலை 08:00-மணி வரை

ஓரு மணி நேரத்திற்கான ஜெப உருவரை

15 நிமிடங்கள் : சுத்திகரிப்பு ஜெபம், துதி ஸ்தோத்திரம்.

45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்

(1) கர்த்தாவே மன்னியும்; மனமிரங்கும்; தேசத்திற்கு ஷேமத்தை கட்டளையிடும்.

  • கிறிஸ்துவை விட்டு வெகுதூரம் விலகிப்போனது.
  • சபைகூடுதலை அசட்டை பண்ணியது.
  • ஆராதனை வேளைகளில் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் அற்றுப்போனது.
  • ஆராதனை பாடல்கள் வெறும் அலறுதல்களாக மாறியது (ஆமோ 8:3).
  • ஆராதனை வேளைகளை களியாட்டும் பொழுதுபோக்கும் நடனநிகழ்ச்சிக்களுமாக மாற்றியது.
  • பாவத்தையும், நியாயத்தையும், நீதியையும், உணர்த்துகிற தீர்க்கதரிசன தேவதூதுகளுக்கு பதிலாக தேவச்செய்திகள்
    நகைச்சுவை கிளப்களாக (Humour club) சிரிப்பொலி பேச்சுகளாக மாறியது.
  • தேவசமூகத்தில் பண்ணுகிற வாக்குறுதிகளும், உடனபடிகையும் எண்ணமற்று போய் காற்றில் பறக்கவிடுவது.
  • தேவசமூகத்தில் கணவன் மனைவி பண்ணுகின்ற உடன்படிக்கை தனை மீறி தேவனுடைய சமூகத்தை அசட்டைபண்ணுவது.
  • திருப்பந்தி இயேசுவின் திருச்சரீரத்தையும், திருஇரத்தத்தையும் முற்றிலும் குற்றமுள்ளதாக மாற்றி அதனை காலின் கீழ் மிதித்து போடுவதாய் காணப்படுகிறது
    இது வெறுமனே ஒரு சடங்காக மாறி, சத்தியம் முழுவதுமாக தள்ளுபடியாக்கப்பட்டு வேத உபதேசங்கள் புறக்கணிக்கபடுகிறது.
  • கிறிஸ்தவ திருமணங்கள் பரலோகத்தில் நிச்சயிக்கப்பட்டு
    பரிசுத்தவான்களால் தீர்மானிக்கப்பட்ட காலங்கள் எல்லாம் மாறி பெற்றோர்களால் ஏற்படுத்தப்படாமல் பார்க்கிலும் பஸ் ஸ்டாண்டிலும் நிச்சயிக்கப்படுகின்றன்.
  • கிறிஸ்தவ உபதேச சட்டத்திட்டங்கள் யாவும் முற்றுமாய் ஒதுக்கப்பட்டு பரிசுத்தம் கேலிக்குறியாக மாறியது
  • நாம் தேவப்பிரியராக இல்லாமல் தற்பிரியராக, சுகப்போக பிரியராக, பணப்பிரியராக, மனுஷபிரியராக மாறிப்போனது.
    இன்னும் எங்களுக்குள் காணப்படும் எல்லா குறைவுகளையும், உமக்கு பிரியமில்லாத காரியங்களையும் எங்களுக்கு மன்னியும்.
    தேவனே மனமிரங்கும்; தேசத்திற்கு ஷேமத்தை கட்டளையிடும்!

(2) வேலை, தொழில் மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு தேவன் இரக்கத்தை காண்பித்து அதிசயங்களை நடப்பிக்க வேண்டும்.

(3) கர்மேலர்கள் அவர்கள் வசிக்கும் தெரு, பணியிடம், பள்ளி/கல்லூரி வகுப்பு மற்றும் உறவுகளில் குறைந்தபட்சம் மூன்று நபர்களின் இரட்சிப்புக்காக ஜெபிக்கவும், பொறுப்பெடுக்கவும் தேவன் கிருபை அருளவேண்டும்.

(4) சபைகளை திறப்பதற்கான அனுமதி வழங்கியபின் சபை ஆராதனைகளை, எப்படி நடத்தவேண்டும் என்ற தேவ ஆலோசனை நம்முடைய பாஸ்டர், பாஸ்டரம்மா மற்றும் எல்லா தேவ ஊழியர்களுக்கு உண்டாகவேண்டும்.

(5) சென்னை மாநகரத்தில் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. பயம் வேண்டாம்; எச்சரிப்பு வேண்டும். நம் சென்னை விரைவில் நோய் தொற்றிலாத நகரமாக மாறவேண்டும்.

பொதுவாக

# வியாதி பெலவீனத்துடன் உள்ள நம் கர்மேல் உறவுகள நினைத்துகொள்ளுங்கள். பூரண சுகத்தையும் ஆரோக்கியத்தையும் அனுபவித்து நலமுடன் வாழவேண்டும்.

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்காக ஜெபியுங்கள்

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with