Carmel 24 Hours Chain Prayer – June 27, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூன் 27, 2020

கர்மேல் ஜெபசங்கிலி
ஜூன் 27, 2020 காலை 08 மணியிலிருந்து ஜூன் 28, 2020 காலை 08 மணி வரை

24 மணிநேரத்திற்கான ஓர் ஜெப உருவரை

15 நிமிடங்கள் : துதி ஸ்தோத்திரம், சுத்திகரிப்பு, பாவமன்னிப்பு ஜெபம்
மருத்துவமனையில் உள்ள நம் போதகருக்கு தேவன் இம்மட்டுமாய் கொடுத்துள்ள நல்ல விடுதலைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்!

45 நிமிடங்கள்: மன்றாட்டு ஜெபம்

1. பெலவீனத்திலிருந்து மீண்டு தற்போது நன்கு தேறிவரும் போதகரைய்யா அவர்கள் பூரண நலமடைந்து வீடுதிரும்பவேண்டும்.

2. போதகருக்கு உதவியாக இருக்கும் நம்முடைய பாஸ்டரம்மா, Dr.பிரவீன், சகோ.எப்ஸி, சகோ.சாம்சன், சகோ.செல்வம் அவர்களுக்கு தேவனால் வரும் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நீடித்திருக்க.

3. இணையவழி ஞாயிறு ஆராதனை, மாதப்பிறப்பு ஆராதனை, ஞாயிறு பள்ளி போன்ற நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறவேண்டும். உதவியாக இருக்கும் ஊடகத்துறையினருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

4. அனைத்து திருச்சபை போதகர்கள், சுவிசேஷகர்கள், மிஷனரிமார்களுக்கு தேவசுகம், தேவபெலன், தேவஆரோக்கியம் மற்றும் தீர்க்காயுசு உண்டாகி, அவர்கள் மூலமாக நிறைவேற்றவேண்டிய ஊழியங்கள் யாவும் தடையின்றி நிறைவேற.

5. தொடர்ந்து சபைகள் மூடப்பட்டுள்ளதால் ஊழியத்தினால் வரும் பிழைப்பு நலிந்துபோய் தவிக்கும் ஊழியர்கள் மற்றும் மிஷனரிகளின் தேவைகள் யாவும் தேவனால் ஆச்சரியமாய் சந்திக்கப்படவேண்டும். நன்மை ஒன்றும் குறைவுபடக்கூடாது.

6. ஊரடங்கினால் கர்மேல் உறவுகளில் அநேகருடைய தொழில் நலிந்துள்ளது, சிலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கர்த்தர்தாமே அவர்கள் தேவையை ஆச்சரியமாக சந்தித்து புதிய வாய்ப்புகளை உண்டாக்க.

7. நம்முடைய கர்மேல் உறவுகளிலும் சிலர் சரீர பெலவீனத்துடன் உள்ளனர். கர்மேல் குடும்பத்தார் ஒவ்வொருவரின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு. அவர்களை கவனித்துகொள்பவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

8. தமிழ்நாட்டு காவல்துறையினருக்காக ஜெபியுங்கள். இந்த இக்கட்டான நாட்களில் காவல்துறை மக்களுடன் கனிவுடன் நடக்கவேண்டும். மக்களும் ஒத்துழைக்கவேண்டும். தூத்துக்குடி போன்ற நிகழ்வுகள் இனி தொடரக்கூடாது.

9. தமிழ்நாட்டில் கொரோனோ தொற்றின் தாக்கம் முழுவதுமாக கட்டுக்குள் வரவேண்டும். கூடுமானால் அனைத்து மாவட்டகளின் பெயர்களை சொல்லி ஜெபியுங்கள்.

10. மாநில மற்றும் மத்திய அரசு தலைவர்கள், அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காக ஜெபியுங்கள். தேவனால் வழிநடத்தப்பட்டு அனைத்து தர்ப்பு மக்களுக்கும் நலம் பயக்கும் திட்டங்களை கொண்டுவரவேண்டும்.

பொதுவாக

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.

CARMEL PRAYER CHAIN
June 27, 2020 08 am to June 28, 2020 08 am

24 Hours Prayer Outline

15 Minutes:
Praise and Worship, Prayer for sanctification and forgiveness (Refer previous week’s prayer points).
Praise and thank God for the healing commanded to our Pastor.

45 Minutes:
Intercessory prayer

1. Our Pastor is progressing very well. Pray for his total healing and early discharge from hospital.

2. God’s protection, good health, strength to all the care-givers including Pastoramma, Dr.Praveen, Sr.Hepsi, Br.Samson and Br.Selvam.

3. Our online Sunday Services, Promise Services, Zoom Sunday Class should get relayed without any hindrance. Pray for the media team.

4. Good health, strength and length of days to all servants of God, Pastors, evangelists, missionaries so as to fulfil all that God wants to accomplish through them.

5. Due to closure of churches, many a full-time servant and missionaries are struggling to meet their ends. God should miraculously meet all their personal and family needs. They should lack no good thing.

6. Many of our loved ones have lost their business, jobs due to this lockdown. God should meet all their needs and open up new avenues.

7. Some of our loved ones are unwell, weak and sick. Pray for their healing, strength and protection. Pray also for their care-givers.

8. Pray for Tamil Nadu Police Department. During these difficult they should behave courteously with the public. People also should co-operate. Tuticorin incident should not get repeated.

9. The rapid spread of Covid-19 in Tamil Nadu should be brought under control. If possible, pray taking the names of each and every district.

10. Pray for the protection Central and State Leaders, Ministers, M.Ps, M.L.As, District Collectors. The ruling authorities should implement plans and programmes which benefit all the cross-sections of the society.

General

# Medicos, health workers, policeman, government staff, business people, bankers – the welfare of all public relation workers should be guarded.

# People, instead of cursing God amidst their pains, they must return to him.

# Pray for our loved ones who are stranded/staying in different states/districts and countries.

# God to stop this pandemic Covid 19 in a miraculous manner.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with