கர்மேல் ஜெப சங்கிலி
மே 30, 2020 காலை 08 மணியிலிருந்து மே 31, 2020 காலை 08 மணிவரை
ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
15 நிமிடங்கள் : துதி ஆராதனை மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்.
45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்
ஜெபக் குறிப்புகள்
1. சிறையிருப்பின் நாட்களில் பவுல் சபைகளுக்கு கடிதங்களை அனுப்பியது போல் சபைகள் அடைக்கப்பட்டுள்ள இந்த நாட்களில் விசுவாசிகளோடு தொடர்பு கொள்ள தேவன் இணையவழி ஊழியத்தை ஆசீர்வதித்து வருகிறார். இந்த ஊழியத்தின் மூலம் இன்னும் அநேக தீர்க்கத்தரிசன வார்த்தைகள் சபையாருக்கு தொடர்ந்து வெளிப்படவேண்டும்.
2. ஞாயிறு ஆராதனை செய்திகள், மனம் திறந்து பேசுகிறேன், RS Talks போன்ற இணையவழி பதிவுகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. செய்திகளை வழங்கும் போதகருக்கும் தேவையான சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் அதனை பதிவுசெய்து ஒளிபரப்ப உதவும் ஊடகக் குழுவினருக்காக.
3. தொடர் ஊரடங்கு, பெருகும் தொற்று, பொருளாதார இழப்புகள், சபை கூடுதல் இல்லாமை போன்ற காரணங்களினால் தேவபிள்ளைகள் மனச்சோர்வடையாமல், தேவனை பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் கர்த்தருடைய செட்டைகளின் நிழலிலே இவர்கள் காக்கப்படவேண்டும் (சங்கீதம் 57:1).
4. இந்த ஊரடங்கினால் நம் கர்மேல் உறவுகளில் சிலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர், சிலரால் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தமுடியவில்லை. கர்த்தர் தாமே இவர்களுக்கு இரங்கி புதிய வாசல்களை திறக்க.
5. தேவப்பிள்ளைகள் பலவிதமான காற்றுகளினால் அலைவுபடாமல், கள்ள உபதேசம், தவறான உபதேசங்களுக்கு விலகியிருக்கவேண்டும். (எபேசி 4:14)
6. பொதுத் தேர்வு மற்றும் நீட் தேர்வு எழுதும் பிள்ளைகள் பயம் பதட்டத்திற்கு விலகி, நல்ல நினைவாற்றல், தெளிந்த புத்தி, அமைதியான மனநிலையோடும், பாதுகாப்போடும் தேர்வுகளை சந்திக்கவேண்டும்.
7. இந்தியாவில் எந்த ஒரு மனிதனுக்கும் பட்டினி சாவு நேரிக்கூடாது. ஏழை எளியவர்களை ஆதரிக்கும் நம் தேவனின் தயவால் இநதிய மக்களின் அடிப்படை தேவைகளை தடையின்றி சந்திக்கப்பட.
8. தேவப்பிள்ளைகள் எல்லாவிதத்திலும் கர்த்தருக்கு பயந்து, ஞானமாய் நடந்துகொள்ளவேண்டும். (புத்தியீனமாக நடந்துகொள்ளக்கூடாது).
9. நம்முடைய தலைவர்கள் தேவனுக்கு பயந்து சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும் (லஞ்சம், அக்கிரமம், அநியாயம், பித்தலாட்டம் போன்றவைகள் தலைதூக்காதபடிக்கு).
10. ஒன்றான மெய்த்தேவன் மற்றும் சத்தியத்தை அறிகின்ற அறிவுக்குள்ளாகவும் உலகமக்கள் யாவரும் வரவேண்டும்.
பொதுவாக
# வியாதி பெலவீனத்துடன் உள்ள நம் கர்மேல் உறவுகளை நினைத்து கொள்ளுங்கள்.
– சகோ. ஜோ
– சகோதரி. பெர்னி (சகோ ஜோ அவர்களின் சகோதரி)
– சகோ. அர்சுலா பெலிகன்
– சகோ. லியோ
– சகோ. ரமணன் குடும்பம் (சகோதரி. ஒமிகாவின் தந்தை)
– உங்களுக்கு தெரிந்த மற்றவர்கள்.
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.
# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.
# பொருளாதார நெருக்கடியிலிருந்து அவரது பிள்ளைகள் காக்கப்படும்படிக்கு(சங் 34.10).
– வேலை இழந்தவர்கள்
– சம்பளம் இழந்தவர்கள்
– வியாபாரிகள்
– தொழில் முனைவோர்
– தேவ ஊழியர்கள்
# பஞ்சத்தின் விளைவாக ஏற்படும் சமூகவிரோத தீயச்செயல்களுக்கு கர்த்தர் தம் பிள்ளைகளை விலக்கிக் காத்திட.
# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.
# பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்காக ஜெபியுங்கள்.
CARMEL PRAYER CHAIN
MAY 30, 2020 08 am to MAY 31, 2020 08 am
OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes : Praise and Worship and Prayer for Sanctification
45 Minutes: Intercessory Prayer
Prayer Points
1. Just as Paul wrote and sent letters to the churches when he was in prison, during this lockdown, God is using our Pastor to reach the believers through online ministry. Pray for the powerful flow of God’s prophetic and healing words through this media.
2. Along with Sunday Service messages, our daily devotional videos Manam Thiranthu Pesugiren and RS Talks is continuing to be blessing to thousands of people. Pray for good health, strength, unction and wisdom. Pray for all the brothers involved in video recording, editing and uploading these messages on a daily basis.
3. People of God should not get perturbed or depressed due to lock downs, spreading infections, financial losses and no church services, but must strongly hold on to their faith in Lord Jesus who is able and willing to revive them. May they be come under the shadow of the wings of the almighty until calamities are over-past (Psalms 57:1)
4. Some of our Carmeleans have lost their jobs, could not continue their businesses due to lock down. God should open new avenues for their rehabilitation.
5. People of God should be protected and not carried away by every wind of doctrine, false teachings, wrong teachings (Eph 4:14)
6. No fear, no panic should grip the students approaching Public, NEET and other exams. They must face the exams with all wisdom, sobriety, peace and protection.
7. No man should due to starvation in India. With the blessings and grace of our God, who cares for the poor, the basic needs of poor and helpless Indians must be met.
8. People of God, should fear God and walk wisely in all their ways (and be not foolish)
9. Leaders, guided by the fear of God, should take all the right decisions (bribery, cheating, iniquity and unlawfulness should not raise its ugly head)
10. People of the world should come into the knowledge of one true God and His truth.
General
# Pray for loved ones who are weak and sick
* Br. Joe
* Sr. Bernie (Elder sister of Br.Joe)
* Sr. Ursula Pelican
* Br. Leo
* Br. Ramanan and family ( father of our Sr.Omika)
# Medical Professionals, Sanitation Workers, Police Force, Government Employees, Merchants, and Bankers – welfare of Public Relation Officers to be preserved.
# Pray that people, in their agony and pain, should not curse God. Bur rather return to him.
# Pray that His children are well preserved even during this economic crisis (Psalms 34.10).
– Those who lost their jobs
– Those who have lost their salary
– Business people
– Servants of God
# Pray for our Lord to preserve his people from all the anti-social activities which could creep up during this famine.
# Pray for all our relatives who are stationed/stuck in different cities, states and countries.
# Pray for our Pastor and Pastoramma