Carmel 24 Hours Chain Prayer – November 21, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 21, 2020

Carmel 24 Hours Chain Prayer – November 21, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 21, 2020

 

கர்மேல் 24 மணிநேர சங்கிலி ஜெபம்
சனிக்கிழமை, 21 நவம்பர் 2020 காலை 08 முதல் ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020 காலை 08 முடிய

ஒரு மணி நேர ஜெபத்திறகான ஓர் உருவரை
துதி, ஸ்தோத்திர சுத்திகரிப்பு ஜெபநேரம் – 15 நிமிடங்கள்
மன்றாட்டு ஜெபவேளை – 45 நிமிடங்கள்

ஜெபக்குறிப்புகள்:
1. உலகப்பெருந்தொற்று – அமெரிக்க தேர்தல் முடிவுகள் – புதிய இயல்பு வாழ்க்கை (New Normal) – புதிய உலக அமைப்பு (New World Order) இவைகளையும் கடந்து இனி சம்பவிக்கபோகிறவைகளுக்கு தப்பி மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்க – நாமும் நம்முடைய பிள்ளைகளும் ஆயத்தப்பட.

2. கடைசிநாட்களில் நாம் வாழ்ந்துவருகிறோம். இனி கொஞ்சகாலம் மட்டுமே இருப்பதால் தீவிரமாக நாமும் செயல்பட்டு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த.

3. பரிசுத்தம், பக்தி, ஆத்தும பாரம் – இம்முன்றும் நம்முடைய விசுவாசிகள் ஒவ்வொருவரின் இலக்காக மாறும்படிக்கு.

4. நமது தேசத்தில் – மத்தியிலும் மாநிலத்திலும் – மக்கள்நலன் சார்ந்த நல்லாட்சி மலர.

5. எல்லா துறைகளிலும், எல்லா நிலையிலும் காணப்படும் பொய், பித்தலாட்டம் சூது, வஞ்சகம், சூழ்ச்சி போன்ற காரியங்களை ஒழிந்து சத்தியம் ஜெயிக்க.

6. பிரிந்திருக்கும் விசுவாச குடும்பங்களில் பிசாசின் கிரியைகள் முற்றுமாய் அழிக்கப்பட்டு தெய்வீக அன்பும், சந்தோஷமும், சமாதானமும் நிலைத்திருக்க.

7. தேவப்பிள்ளைகள் எல்லா நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து தேவனையும, தேவனுடைய சித்தத்தை அறிகின்ற அறிவிலேயும் வளர.

8. சிறுபிள்ளைகள், வாலிபர்கள் உலகத்தால் கரைபடாதபடிக்கு தங்களை காத்து, இரட்சிப்பின் அனுபவத்திற்குள் கடந்துவந்து, சத்தியத்திலும் தேவஅன்பிலும் வளர ( இதனால் உபத்திரவகாலத்திற்கு தப்ப).

9. சபைகூடிவருதலைப் பற்றி தேவன் தம்முமுடைய ஆலோசனையை ஊழியர்களுக்கு வெளிப்படுத்த.

10. புதிய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு அனுதினமும் சபையில் சேர்க்கப்பட.

பொதுவான குறிப்புகள்:
1. வயோதீகம் மற்றும் வியாதியினால் உடலிலும் உள்ளத்திலும் சோர்ந்து, களைந்து பலவீனத்துடன் காணப்படும் நம் மக்கள் மற்றும் அவர்களை கருத்துடன் பரமாரித்துகொள்வோரின் ஆவி, ஆத்துமா மற்றும் தேகசுகம், பெலன், அரோக்கியம் மற்றும் நல்வாழ்வு.

2. ஞாயிறு நேரலை ஆராதனையை பதிவுசெய்து, தொகுத்து, அதனை ஒளிப்பரப்பு செய்வதில் உதவியாக இருக்கும் கரமேல் அலுவலகப் பணியாளர், ஊடகக் குழுவினர், மொழிப்பெயர்ப்பாளர், இசை குழுவினர், தன்னார்வலரின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

3. போதகர் அய்யா மற்றும் போதகர் அம்மா – உடல், சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு மற்றும் நிறைவான அபிஷேகத்துடன் ஊழியங்களை நிறைவேற்றிட.

 

CARMEL 24 HOUR PRAYER CHAIN
Saturday, 21 November 2020 08 AM to Sunday, 22 November 2020 08 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER
Praise, Thanks-giving, Sanctification Prayer – 15 Minutes
Intercessory Prayer – 45 Minutes

Prayer Points
1. Pandemic – US Election Results – New Normal – New World Order. To escape from the things which are to come and to stand before the Son of God. We and our children should be prepared.

2. We are living in the end times. Since there is very limited time, we must act fervently and win souls for the Kingdom of God.

3. Purity, Piety, Passion for Souls – These three should be the focus and goal of believers.

4. A people welfare oriented Government – both in the Centre and State.

5. To get rid of all all kinds of falsehood, fraudulence, financial impropriety and prevalent in all departments and for truth to triumph.

6. The schemes and works of the devil causing separation in families to be totally destroyed and divine love, joy and peace to remain in families.

7. Children of God should wholly submit themselves to God and His Will and grow in the knowledge of Knowing the Will of God.

8. Children and Youth by not corrupting themselves from the ways of the world should grow in truth and the love of God (and thus escape from tribulation)

9. God to reveal his counsel to his servants regarding resumption of Church services on Sundays.

10. Every day new souls must get saved and added to Church.

General Points:

# Our loving elderly members and their care-givers who are physically and mentally weak and depressed. Health, strength and general well-being of all.

# Carmel Staff, Volunteers, Choir and Musician who diligently organize the place for Sunday Morning Service (pre-recorded at Prayer House). Pray for their spirit, soul and body.

# Health, strength, well-being and divine protection of Pastor and Pastoramma

Share with