Carmel 24 Hours Chain Prayer – October 17, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி செப்டம்பர் 17, 2020

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி
17 அக்டோபர் 2020 காலை 08:00 முதல் 18 அக்டோபர் 2020 காலை 08:00 முடிய
ஒரு மணி நேர ஜெபத்திற்காக ஒரு உருவரை.

ஸ்தோத்தரியுங்கள் ! (துதி, ஸ்தோத்திரம், சுத்திகரிப்பு ஜெபம்) – 15 நிமிடங்கள்

• கர்த்தர் செய்த சகல உபகாரங்களுக்காக! (சங்கீ 103:1-3)

• செட்டையின் மறைவினில் நம்மை பாதுகாப்பதற்காக! (சங்கீ 57:1)

• ஆவிக்குரிய சகல ஆசீர்வதிங்களினாலும் நம்மை ஆசீர்வதித்ததற்காக! (எபேசி 1:3)

ஜெபியுங்கள்! (மன்றாட்டு ஜெபம்) – 45 நிமிடங்கள்

கர்மேல் உறவுகளின் நலனுக்காக!
1. தொற்றின் தீவிரம் குறையாத இந்த சூழ்நிலையில் கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளை விக்கினம் கடந்துபோகும் மட்டும் தம்முடைய செட்டைகளின் நிழலின் கீழ பாதுகாக்கவேண்டும்(சங்கீ 57:1).

2. நம்முடைய உறவுகளில் உங்களுக்கு தெரிந்த முதியவர்கள் மற்றும் சர்க்கரை வியாதி, காச நோய், இதய நோய், நுரையீரல் தொற்று போன்ற ஏனைய பெலவினங்களோடு காணப்படுவோரின் சுகம் மற்றும் பாதுகாப்பிற்காக.

3. இணையவழி ஆராதனையில் தங்கள் வீடுகளிலிருந்து கலந்துகொள்பவர்களுக்கும், ஜெபவீட்டிற்குள் வந்து கலந்துகொள்பவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமையவேண்டும்.

4. கர்மேல் குமுக ஆராதனைகளை(Community Worship Service) கர்த்தர் அபரீவிதமாக ஆசீர்வதித்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! வருகிற நாட்களீல் இன்னும் அநேகர் கலந்துகொள்ள, தேவ ஆலோசனையோடு நடத்தப்பட, மகிமையான சாட்சிகள் எழும்ப.

5. இந்த பெருந்தொற்று, ஊரடங்கு நாட்களில் அநேகர் வேலையை இழந்துள்ளனர், அநேகரின் தொழில் முடக்கப்பட்டுள்ளது, வாழ்வாதாராம் கேள்விக்குறியாகவிட்டது. கர்த்தர்தாமே இரங்கி புதுவேலை, புதுதொழில், வருமானத்திற்கான வழிவாசல்களை திறக்க.

6. வசதிகுறைவு, வறுமை காரணமாக அநேகரால் தங்கள் பிள்ளைகளை ஆன்-லைன் வழி கல்வியில் சேர்க்கமுடியவில்லை. பிள்ளைகளின் கல்வி எவ்விதத்திலும் தடைப்படாதவாறு அரசாங்கம் சமதளத்தை உண்டாக்கவேண்டும். பள்ளி கல்லூரிகளில் திறக்கப்படும் நாட்களில் நம் பிள்ளைகள் காக்கபடவேண்டும்.

7. கர்மேல் உறவுகளின் குடும்பங்களில் உள்ள இரட்சிக்கப்படாத உறவினர்கள் இரட்சிக்கப்படவேண்டும் (அப்போ 16:31) ஆத்தும பாரத்தோடு கண்ணீரோடு அழிந்துபோகும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக ஊக்கத்துடன் ஜெபிக்கவும் பிரயாசப்படவும்வேண்டும் (Passion Vission Mission).

8. குடும்பங்களில் தேவசமாதானம், சந்தோஷம் பூரணமாக காணப்பட – அன்பும், ஐக்கியமும் பெருக, ஒருமனம் ஒற்றுமை வளர்தோங்க, ஞானமாய் நடந்து, தெய்வீக புரிதலோடு செயல்பட தேவையான ஞானம், விவேகம், கிருபை – தேவன் அருளிச்செய்ய.

9. கர்மேல் மிஷனரிகள் மற்றும் குடும்பத்தினர், அவர்களுடைய பணித்தளம் மற்றும் விசுவாசிகளுக்காக! நம்முடைய திட்டத்தில் இன்னும் கூடுதலான மிஷனரிகளை தாங்க.

10. தற்போதைய சூழ்நிலை மாறி, ஜெபவீட்டின் வாசல்கள் சீக்கிரமாய் எல்லோருக்காகவும் திறக்கப்பட்டு, ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெறவேண்டும். தொடர்ந்து போதகர், போதகரம்மா அவர்களின் சுகம், பெலன் ஆரோக்கியத்திற்காக வேண்டிக்கொள்ளவும்.

இந்த ஜெபக்குறிப்புகளை சனி-ஞாயிரு சங்கிலி ஜெபத்திற்காக மட்டுமல்ல, இந்த வாரம் முழுவதும் உங்கள் ஜெபவேளைகளில் இக்குறிப்புகளுக்காக ஜெபிக்கலாம்.

CARMEL 24 HOUR PRAYER CHAIN
17 Oct 2020 08:00 am to 18 Oct 2020 08:00 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER!

PRAISE! (Praise, Thanks-giving, Sancitification Prayer) – 15 Minutes
• Praise Him for all the benefits (Psalms 103:1-5)
• Praise Him for his protection (Psalms 57:1)
• Praise Him for all the Spiritual Blessings (Ephes 1:3)

PRAY! (Intercessory Prayer) – 45 Minutes

Pray for the well-being of Carmeleans
1. With the spread of infection not receding, God should cover and protect his children under his mighty wings until the calamities be over-past (Psalms 57:1)

2. Remember the names of our loved ones who are vulnerable to catch this infection, particularly the elderly, the diabetic, asthamaticm lung infection and those with heart trouble and related illness. Pray for the health and protection.

3. Sunday Online Service should be a blessing to all those who are participating from their homes and to those who watch the same in our Prayer House.

4. God has been blessing our Community Worship Service gatherings in a mighty way. Praise God! In the weeks to come, pray for many to participate, pray for God’s counsel, pray for glorious testimonies to arise.

5. During this pandemic and lockdown days many of our loved ones have lost jobs, businesses shut down, livelihood has become a big question mark. Lord God should have mercy upon them and open new employment, business and income avenues.

6. Due to lack of income and affordability reasons, many parents are not in a position to enrol their children for online education. Government should chalk out plans and programmes to benefit every cross section of the society. Also our Children should be protected when the Schools and Colleges are opened
7. Unsaved members of Carmel families should get saved (Acts 16:31). With great burden and tears, pray and labour fervently for the salvation of perishing souls. (Passion Vision Mission)

8. For the increase of Love, Joy, Peace, One-mindedness in families. For family members to walk wisely with divine understanding God to grant wisdom, prudence and grace.

9. Pray for Carmel missionaries and their families, for their mission field and believers. More missionaries to get added in our Missionary Project.

10. The prevalent situation should change and doors of the prayer house to be made open to all, baptism and holy communion services to take place. Continue to pray for the health and strength of Pastor and Pastoramma.

THESE POINTS ARE NOT JUST FOR CHAIN PRAYER, YOU MAY PRAY FOR THESE POINTS IN YOUR PERSONAL/FAMILY PRAYERS DURING THE WHOLE OF THIS WEEK.

Share with