Carmel 24 Hours Chain Prayer – October 31, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – அக்டோபர் 31, 2020

Carmel 24 Hours Chain Prayer – October 30, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – அக்டோபர் 31, 2020

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி

31 அக்டோபர் 2020 காலை 08:00 முதல் 01 நவம்பர் 2020 காலை 08:00 வரை

ஒரு மணி நேர ஜெபத்திற்காக ஒரு உருவரை

ஜெபக் குறிப்புகள்

ஸ்தோத்தரியுங்கள்!

கர்த்தர் செய்த சகல உபகாரங்களுக்காக! (சங்கீ 103:1-5)

செட்டையின் மறைவினில் நம்மை பாதுகாப்பதற்காக! (சங்கீ 57:1)

ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்ததற்காக! (எபேசி 1:3)

ஜெபியுங்கள்!

1. நாம் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு நமது தேசத்தை ஆளும் தலைவர்களுக்காகவும் – மத்திய மற்று மாநில அரசுகள் – அதிகாரத்தின் உள்ள யாவருக்காகவும்! (1 தீமோத்தேயு 2:2).

2. பரிசுத்த தேவன் அருவருக்கிற பொய், பித்தலாட்டம், வஞ்சகம் நம்முடைய தேசத்தை விட்டு அகல, சத்தியம் நம் தேசத்தில் ஜெயிக்க.

3. ஒடுக்கப்படுகிற, துன்புறுத்தப்படுகிற யாவருக்கும் தேவன் தாமே நீதி நியாயம் செய்ய (சங்கீ 10:18).

4. பொருளாதார சரிவிலிருந்து நம்முடைய தேசத்தை மீட்டு வளர்ச்சியின் பாதையில் நிலைநிறுத்திட.

5. பிரிவினைவாத சக்திகள் அழிக்கப்பட்டு, அனைத்து மதத்தினரின் உரிமைகள் காக்கப்பட்டு, நலமுடன் வாழ.

6. மக்கள் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்குள், இருளிலிருந்து ஒளிக்குள், அழிவிலிருந்து அழியாமைக்குள் வர.

7. கிறிஸ்தவ சபைகளிலிருந்து கள்ள உபதேசம், கலப்பட உபதேசம், மாறுபாடான உபதேசம் முற்றுமாய அகற்றப்பட.

8. சபை சத்தியத்திற்கு தூணும் ஆதாரமாகவும், திசைகாட்டும் கலங்கரை விளக்காகவும் செயல்பட (பிலி 2:14).

9. கோவிட் 19 என்ற வாதை முற்றுமாக அற்றுப்போக; மக்கள் பீதி, கலக்கம், விரக்தி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து மீண்டுவர.

10. சபையாக நாம் சீக்கிரத்தில் ஒன்றுகூடி, வேதமுறைமையின்படி ஆராதிக்க, ஊழியங்களை நிறைவேற்ற.

பொதுவான குறிப்புகள்

# நம் கர்மேல் உறவுகள் – முதியவர், வியாதியஸ்தர் மற்றும் பெலவீனர் – மற்றும் அவர்களை கவனித்துகொள்பவர்கள்

# பாஸ்டர், பாஸ்டரம்மா – நல் ஆரோக்கியம், பெலன் மற்றும் அபிஷேகம்

# வேலை, தொழில் இழந்தவர்கள் – தேவைகள் சந்திக்கப்பட, புதிய வாசல்கள் திறக்கப்பட

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with