Carmel 24 Hours Chain Prayer – September 19, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – செப்டம்பர் 19, 2020

Carmel 24 Hours Chain Prayer – September 19, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – செப்டம்பர் 19, 2020

CARMEL 24 HOURS PRAYER CHAIN
19 September 2020 08 AM to 20 September 2020 08 AM.

OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes – Praise and Worship and Sanctification Prayer
Praise !
For our Church ! For our Ministers !
For God’s messages ! For prophetic utterances !
Pray !

45 Minutes Intercessory Prayer
1. With the spread of infection not receding, God should cover and protect his children under his mighty wings until the calamities be over-past (Psalms 57:1)

2. Remember the names of our loved ones who are vulnerable to catch this infection, particularly the elderly, the diabetic, asthamatic and those with heart trouble and related illness.

3. Sunday Online Service should be a blessing to all those who are participating from their homes and to those who watch the same in our Prayer House. Normalcy must return and we all should gather to worship as a church in our Prayer House.

4. Pray for the protection and well-being of medical professionals (doctors and nurses), sanitation workers, policemen, Government staff and Bankers.

5. Protection of our loved ones who have to depend on public transport to commute to their workplace.

6. God has graciously helped us to complete metro water and bore-well project. Praise God! Other works including sewage facility and and front flooring should be completed without any hurdles. Pray for the needs to be met.

7. Financial needs of our loved ones who have lost their job, business and income to be met. New windows to be opened.

8. Believers should remain steadfast in prayer, be rooted in the Will of God and as Spiritual people grow up in the image of our Lord and Saviour Jesus Christ.

9. With great burden and tears, pray and labour for the salvation of perishing souls.

10. The doors of our Prayer House to be opened for all to conduct Baptism and Holy Communion Services.

 

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி
19 செப்டம்பர் 2020 காலை 08 மணியிலிருந்து
20 செப்டம்பர் 2020 காலை 08 மணிவரையில்
ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை

15 நிமிடங்கள் – துதிஸ்தோத்திரம் மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்

ஸ்தோத்திரியுங்கள் !
கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள சபைக்காக! ஊழியர்களுக்காக !
தேவதூதுகளுக்காக ! தீர்க்கதரிசன வார்த்தைகளுக்காக !
45 நிமிடங்கள் – மன்றாட்டு ஜெபம்
ஜெபியுங்கள்!

1. தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளை விக்கினம் கடந்துபோகும் மட்டும் தம்முடைய செட்டைகளின் நிழலின் கீழ பாதுகாக்கவேண்டும்(சங்கீ 57:1).

2. தொற்றின் தாக்கத்திற்கு எளிதில் ஆளாகும் நிலையில் உள்ள நம்முடைய உறவுகளில் உங்களுக்கு தெரிந்த முதியவர்கள் மற்றும் சர்க்கரை வியாதி, காச நோய், இதய நோய் போன்ற ஏனைய பெலவினங்களோடு காணப்படுவோரின் சுகம் மற்றும் பாதுகாப்பிற்காக பெயர் பெயராக ஜெபியுங்கள்.

3. ஞாயிறு இணையவழி ஆராதனையில் தங்கள் வீடுகளிலிருந்து கலந்துகொள்பவர்களுக்கும், ஜெபவீட்டிற்குள் வந்து கலந்துகொள்பவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமையவேண்டும். சீக்கிரத்தில் இயல்பு நிலை திரும்பி சபையார் கூடிவந்து ஜெபவீட்டில் ஆராதிக்கவேண்டும்.

4. மக்கள் தொடர்பு பணியில் இருக்கும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்களின் நலன் காக்கப்படவேண்டும்.

5. தங்கள் வேலையிடங்களுக்கு செல்ல பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தவேண்டிய நிலையில் இருக்கும் நம்முடைய உறவுகளின் பாதுகாப்பு.

6. மெட்ரோ வாட்டர் மற்றும் ஆழ்துளை கிணற்றின் பணிகளை சிறப்பாய் முடிக்க தேவன் உதவிசெய்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்த நாட்களில் ஜெபவீட்டில் கழிவுநீர் வசதியின் சீரமைப்பு (Sewarage) மற்றும் ஜெபவீட்டின் வெளிவளாகத்தின் தரைபோடுதல் (Front Space Flooring) பணிகளும் தடையின்றி நடக்கவேண்டும், தேவைகள் சந்திக்கப்படவேண்டும்.

7. வேலை, தொழில் மற்றும் வருமானத்தை இழந்த நம்முடைய் கர்மேல் உறவுகளின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட, புதிய வாய்ப்புகள் உண்டாக.

8. கர்மேல் உறவுகள் ஜெபத்தில் உறுதியாக தரித்திருக்க, எல்லா சூழ்நிலைகளிலும் தேவசித்தத்தில் நிலைத்திருக்க,ஆவிக்குரிய சிந்தையுடையவர்களாய் கிறிஸ்துவின் சாயலில் வளர.

9. ஆத்தும பாரத்தோடு கண்ணீரோடு அழிந்துபோகும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக ஊக்கத்துடன் ஜெபிக்கவும் பிரயாசப்படவும்வேண்டும்.

10. தற்போதைய சூழ்நிலை மாறி, ஜெபவீட்டின் வாசல்கள் சீக்கிரமாய் எல்லோருக்காகவும் திறக்கப்பட்டு, ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெறவேண்டும். தொடர்ந்து போதகர், போதகரம்மா அவர்களின் சுகம், பெலன் ஆரோக்கியத்திற்காக வேண்டிக்கொள்ளவும்.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with