Carmel 24 Hours Chain Prayer – September 26, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – செப்டம்பர் 26, 2020

 

Carmel 24 Hours Chain Prayer – September 19, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – செப்டம்பர் 26, 2020

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி

26 செப் 2020 காலை 08:00 முதல் 27 செப் 2020 காலை 08:00 முடிய
ஒரு மணி நேர ஜெபத்திற்காக ஒரு உருவரை

ஜெபக் குறிப்புகள்
ஸ்தோத்தரியுங்கள்!

  • கர்த்தர் செய்த சகல உபகாரங்களுக்காக! (சங்கீ 103:1-3).
  • நம்மை பாதுகாப்பதற்காக! (சங்கீ 57:1).
  • ஆவிக்குரிய சகல ஆசீர்வதிங்களினாலும் நம்மை ஆசீர்வதித்ததற்காக! (எபேசி 1:3).

ஜெபியுங்கள்!

1. நாம் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு நமது தேசத்தை ஆளும் தலைவர்களுக்காகவும் – மத்திய மற்று மாநில அரசுகள் – அதிகாரத்தின் உள்ள யாவருக்காகவும்! (1 தீமோ 2:2).

2. பரிசுத்த தேவன் அருவருக்கிற பொய், பித்தலாட்டம், வஞ்சகம் நம்முடைய தேசத்தை விட்டு அகல, சத்தியம் நம் தேசத்தில் ஜெயிக்க.

3. ஒடுக்கப்படுகிற, துன்புறுத்தப்படுகிற யாவருக்கும் தேவன் தாமே நீதி நியாயம் செய்ய (சங்கீ 10:18).

4. பொருளாதார சரிவிலிருந்து நம்முடைய தேசத்தை மீட்டு வளர்ச்சியின் பாதையில் நிலைநிறுத்த.

5. பிரிவினைவாத சக்திகள் அழிக்கப்பட்டு, அனைத்து மதத்தினரின் உரிமைகள் காக்கப்பட்டு, நலமுடன் வாழ.

6. மக்கள் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்குள், இருளிலிருந்து ஒளிக்குள், அழிவிலிருந்து அழியாமைக்குள் வர.

7. கிறிஸ்தவ சபைகளிலிருந்து கள்ள உபதேசம், கலப்பட உபதேசம், மாறுபாடான உபதேசம் முற்றுமாய அகற்றப்பட.

8. சபை சத்தியத்திற்கு தூணும் ஆதாரமாகவும், திசைகாட்டும் கலங்கரை விளக்காகவும் செயல்பட (பிலி 2:14).

9. கோவிட்-19 என்ற வாதை முற்றுமாக அற்றுப்போக; மக்கள் பீதி, கலக்கம், விரக்தி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து மீண்டுவர.

10. சபையாக நாம் சீக்கிரத்தில் ஒன்றுகூடி, வேதமுறைமையின்படி ஆராதிக்க, ஊழியங்களை நிறைவேற்ற.

பொதுவான குறிப்புகள்

# நம் கர்மேல் உறவுகள் – முதியவர், வியாதியஸ்தர் மற்றும் பெலவீனர் – மற்றும் அவர்களை கவனித்துகொள்பவர்கள்.

# பாஸ்டர், பாஸ்டரம்மா – நல் ஆரோக்கியம், பெலன் மற்றும் அபிஷேகம்.

# வேலை, தொழில் இழந்தவர்கள் – தேவைகள் சந்திக்கப்பட, புதிய வாசல்கள் திறக்கப்பட.

CARMEL 24 HOUR PRAYER CHAIN | OUTLINE FOR ONE HOUR PRAYER

26 SEP 2020 08:00 AM TO 27 SEP 2020 08:00 AM

Praise!

  • Praise Him for all the benefits (Psalms 103:1-5)
  • Praise Him for his protection (Psalms 57:1).
  • Praise Him for all the Spiritual Blessings (Ephes 1:3).

Pray!

1. Pray for the rulers and leaders – Central and State Government – that we may lead a quite and peacable life ( 1 Tim 2:2)

2. Our nation to be relieved from all falsehood, fraudulence and deception. Truth alone to Triumph.

3. God to command his justice all those who are oppressed and crushed (Psalms 10:18)

4. To redeem our nation from the economic downfall and restore progress

5. All divisive forces to be destroyed. Rights of people belonging to different faith to be preserved and their well-being ensured.

6. People should move from falsehood to truth, from darkness to light, from death to life.

7. All false teachings, polluted teachings, contrary teachings to be totally removed from the churches.

8. Church should function as a pillar and ground for truth and as a light house to the world (Phil 2:14).

9. COVID-19 to be brought under control. People should come out from panic, anxiety, trouble, frustration and a disturbed mindset.

10. As a church we must soon come together and worship God according to Bible pattern and to fulfill all ministries.

General Points
# Uphold our loved ones – the elderly, sick and physically weak – and their care givers.

# Uphold Pastor, Pastoramma and helpers – good health, strength and anointing.

# Uphold those who have lost their jobs and business – needs to be met, new opportunities.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with