Carmel Chain Prayer : To Break Corona Virus Chain – கர்மேல் சங்கிலி ஜெபம் : நோயின் சங்கிலி முறிக்கப்பட
24 மணிநேர தொடர் சங்கிலி ஜெபம்
சனி, 28-மார்ச் காலை 08 முதல் ஞாயிறு, 29-மார்ச் காலை 08 வரை
ஒரு மணிநேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
10 – 15 நிமிடங்கள்: துதிவேளை:
சில பாடல்கள்/பல்லவிகளைப் பாடி விடுதலையுடன் தேவனை துதித்து ஜெப ஆவியில் நிரம்புங்கள்.
10 – 15 நிமிடங்கள்: பாவ அறிக்கை ஜெபம்:
நமது (திருச்சபையின், தேசத்தின், உலகத்தின்) பாவங்களை, குற்றங்களை, தவறுகளை அறிக்கை பண்ணி ஜெபியுங்கள்.
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
சங்கீதம் 51:17.
30 நிமிடங்கள்: மன்றாட்டு ஜெப குறிப்புக்கள்:
1. அனைவரின் – உங்களின், உங்கள் குடும்பத்தினரின், நமது சபை விசுவாசிகளின் – பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்!
2. வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் நமது சபையார் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்காக பெயர் பெயராக ஜெபியுங்கள்!
3. வியாதி பெலவீனத்தில் அவதிப்படுவோர், உதவி ஒத்தாசை அற்றவர்கள், பொருளாதார நிலையில் அல்லல்படுவோர் – இவர்களுக்காக ஜெபியுங்கள்!
4. மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள, காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள – ஜெபியுங்கள்!
5. தலைவர்களுக்காக, பொறுப்பில் உள்ளவர்களுக்காக – தேவனின் நல் ஆலோசனை வெளிப்பட, மனிதரின் தவறான ஆலோசனை அழிக்கப்பட ஜெபியுங்கள்!
6 .மக்கள் எப்படியாகிலும் தேவனை அறிகின்ற அறிவுக்குள், உணர்வுக்குள் வர ஜெபியுங்கள்!
7. சபைகள் கூடிவந்து தேவனை ஆராதிக்க இயலாதபடிக்கு உள்ள தடைகள் யாவும் நீங்கி, நாம் அனைவரும் ஒன்றுகூடி ஆராதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாக ஜெபியுங்கள்!
8. உள்நாடு, வெளிநாடு போக்குவரத்தில் காணப்படும் தடைகள் நீங்கி இயல்பு நிலை திரும்ப ஜெபியுங்கள்!
9. இந்த ஊரடங்கினால் தடைப்பட்டிருக்கிற சுபநிகழ்ச்சிகள் யாவும் தடையின்றி நடைபெறும் சூழ்நிலைகள் உண்டாக ஜெபியுங்கள்!
10. பணியில் ஈடுபட்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் வியாபாரிகள். இவர்களின் நலனுக்காக ஜெபியுங்கள்!
மிஷனரிமார்களுக்காக தேவ ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்!
கர்த்தர் தாமே இரக்கப்பட்டு இந்த வாதையை உடனே நிறுத்தும்படிக்கு, மரித்தோருக்கும் உயிரோடு இருப்பவர்களுக்கும் நடுவில் நின்று இனி ஒரு சாவும் இந்த கொள்ளைநோயினால் விழாதபடிக்கு நாம் வேண்டிக்கொள்வோம்.
உங்கள் அன்பு போதகர்
இராபர்ட் சைமன்