Carmel Media Ministries Prayer Points | கர்மேல் ஊடகவியல் ஊழியங்களுக்காக ஜெப குறிப்புகள் | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

Carmel Media Ministries Prayer Points – கர்மேல் ஊடகவியல் ஊழியங்களுக்காக ஜெப குறிப்புகள்

கர்மேல் ஊடகவியல் ஊழியங்களுக்காக ஊக்கத்துடன் மன்றாடி ஜெபிப்போம்!

Let’s pray fervently for our Carmel Media Ministries!

நமது கர்மேல் ஊடக ஊழியம், குறிப்பாக நமது கர்மேல் வலைவொளி தடம் (Our YouTube Channel: Carmel Ministries), என்பது வலைவொளியில் கொட்டிகிடக்கும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ செய்திகளின் நடுவே இதுவும் ஒன்று என்று அன்று. இது சத்தியத்திற்கான ஓர் பேரியக்கம். இந்த புரிந்துகொள்ளுதலுடன் நாம் ஜெபிப்போம்!

  • நமது ஊடகவியலாலர்களுக்கு தேவையான ஞானம், அறிவு, யுக்தி, செயல்திறன் ஆகியவற்றை தேவன் அவர்களுக்கு அருளிச்செய்யும்படி.
  • நமது ஊடகவியலாலர்கள் கடமையுணர்வுடன், பொறுப்புணர்வுடன் திறன்பட செயல்பட.
  • நமது ஊடகவியலாலர்கள் கூட்டுணர்வுடன் (with Team Spirit) ஒற்றுமையுடன் செயல்பட.
  • ஊடகத்துறைக்கு தேவையான எல்லா நேர்த்தியான சாதனங்களும் குறைவற்றிருக்க.
  • சாதனங்கள் நல்லமுறையில் பராமரிக்கப்பட – வீண்செலவீனங்கள் தவிர்க்கப்பட.
  • ஒவ்வொரு நாளும் உலகெங்குமுள்ள ஆயிரக்க்ணக்கானவர்கள் இந்த சத்தியவசனங்களைக் கேட்க, ஆசீர்வாதம் பெற (ஓவ்வொரு நாளும் ஜெபம் செய்வோம்).
  • அனேகருக்கு இந்த சத்திய வசனங்கள் பகிரப்பட.
  • நமது தொலைக்காட்சி ஊழியங்களுக்காக (அதிசயம் டிவி (Aathisayam TV), ஆர்க் டிவி(Ark TV))
  • நமது தொலைக்காட்சி, மற்றும் வலைவொளி ஊழிய சாட்சிகளுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். இன்னுக் ஜீவனுள்ள சாட்சிகள் எழும்ப ஊக்கத்துடன் ஜெபிப்போம்.
  • எவர்களை அவர்கள் இருதயம் எழுப்புகிறதோ, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்துகிறதோ, அவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் அறிவுத்திறனாலும், செயல்திறனாலும், பொருளாலும் தங்கள் பங்களிப்பை அருள.
  • நமது ஊடகவியல் ஊழியத்தின் பணத் தேவைகள், மற்றும் பொருள் தேவைகள் குறைவின்றி சந்திக்கப்பட.
  • தேவன் தமது ஆதீனத்தில் உள்ள நல்ல செயல்திட்டங்களை நமக்கு வெளிப்படுத்தி நம் மூலம் அவர் செயல்படுத்த.
  • சத்தியத்தின் சத்தம் எத்திக்கும் தொனிக்க, வசன வெளிச்சம் இருளில் பிரகாசிக்க – இருளில் உள்ள மக்கள் பெரிய வெளிச்சத்தைக் காண.
  • நமது சபையின் தன்னார்வ தொண்டர்கள் ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களாக விளங்க.
  • நமது சபையின் தன்னார்வ தொண்டர்கள் சபையிலும், வெளியிலும் நல்சாட்சி உள்ளவர்களாய் விளங்க.

 

The effectual fervent prayer of a righteous man availeth much James 5:16

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with