Carmel Preparatory Fasting Prayer Days | April 04, April 05 and April 06, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | ஏப்ரல் 04, ஏப்ரல் 05, மற்றும் ஏப்ரல் 06, 2024 (வியாழன், வெள்ள, சனி) | ஜெபக்குறிப்புக்கள்
1. நமது இந்திய தாய்த் திருநாட்டிற்க்காக – நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக
- நல்லாட்சி அமைய.
- பாசிஸ சர்வாதிகார சக்திகள் முற்றுமாய் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் தளிர்த்தோங்க.
- சமூகநீதி, சமத்துவம், மத நல்லிணக்கம், மனித நேயம் போன்றவை நிறைந்து நிறைவுடன் காணப்பட.
- மந்திரங்கள், தந்திரங்கள் போன்ற தில்லுமுல்லுகள் செயலற்று போக.
- பண ஆதிக்கம் செயலிழந்து மக்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க – தேவன் மக்களின் இதயங்களை ஒருமுகப்படுத்த.
- சமாதானத்தோடு, விடுதலையோடு அச்சமின்றி தேர்தல் நடைபெற.
2. நமது பிள்ளைகளின் எதிர்காலம் முற்றுமாக தேவசித்தத்தின்படி ஆசீர்வாதமாய் அமைய சரியான கல்வி வழிகாட்டுதலுக்காக.
3. நமது சபையில் உள்ள
- வளரிளம் பருவத்தினருக்காக (for adolescents)
- அவர்கள் நடுவில் நடைபெறும் ஊழியங்களுக்காக, ஊழியம் செய்பவர்களுக்காக.
4. VBS – 2024க்காக.
5. நமது வீடுகளில் செழிப்பும், செல்வமும் நிறைந்து காணப்பட (சங்கீதம் 112).
6. நமது குடும்பத்திலும், சபையிலும் உள்ள முதியோர்களுக்காக – அவர்களுக்கு நல்ல சுகம், பெலன், ஆரோக்கியத்திற்காக
- அவர்கள் தங்கள் முதிர்வயதிலும் கனிதந்து பசுமையும்,புஷ்டியுமாயிருக்கும் படிக்கு.
- அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக தங்கள் குடும்பங்களுக்கும், திருச்சபைக்கும் ஆசீர்வாதமாயிருக்க.
- அவர்களை பராமரிக்கிறவர்களுக்காக.
7. இரட்சிக்கப்படாத நம் குடும்ப உறவுகளுக்காக.
8. பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணைக்கப்பட – இசைவிணைப்பாய் கட்டப்பட.
9. நமது சபை விசுவாசிகளின் மனவஞ்சை – இருதயத்தின் விருப்பங்கள் – விண்ணப்பங்கள் – கர்த்தருக்குள்ளாக நிறைவேற.
10. விசுவாசிகளின் எல்லை எங்கும், மற்றும் அவர்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றும் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று விளங்க.
- மேலும், விசுவாசிகள் யாவரும் தேவபக்திக்கு நேராகப் பிரயாசப்பட.
1Ti 4:8 சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.
11. நம்முடைய விசுவாசிகள் ஆவிக்குரியவர்களாக விளங்க
- ஆவியின் கனி.
- ஆவியின் சிந்தை.
- ஆவியின் வரங்கள்.
- ஆவியினால் நடத்தப்படுதல்.
- ஆவியினால் ஆட்கொள்ளப்படுதல்.
- ஆவியில் நிறைந்து ஜெபித்தல்.
- ஆவிக்குள்ளாகுதல்.
12. நம்முடைய சபை ஜெபிக்கிற ஜெபவீரர்கள் நிரம்பிய சபையாக விளங்க மன்றாடி ஜெபிப்போம்.
13. சத்தியத்தை அறிந்து, அதை மனதார நேசித்து, ஏற்றுக்கொண்டு, கீழ்படிந்து, கைக்கொண்டு நடக்க.
14. விசுவாசிகளை பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து தூக்கியெடுத்து, அவர்கள் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, அவர்கள் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் அவர்கள் வாயிலே கொடுக்கும்படி.
15. திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, தன்னார்வ தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுக்காக.
1. Pray for India, our motherland, particularly for the upcoming Parliament Elections
- Formation of a Good Government.
- All Fascist Dictatorial Forces should be completely annihilated and democracy should be upheld.
- Social Justice, Equality, Religious Harmony, Humanity to be appreciated and upheld.
- All fraudulent ideas like black-magic, wizardry to become non-functional.
- Money dominance to fail and people should cast votes according to their conscience – The Lord should unite the hearts of men.
- Elections to take place in a free and peaceful manner.
2. The future of our children to fully become a blessing according to the will of God and for the right educational guidance.
3. Pray for the
# Adolescents in our church
# Ministries taking place amongst them and for the ministers
4. VBS – 2024.
5. Our houses should be filled with wealth and riches (Psalm 112).
6. For the elders in our family and churches – For God to grant to them good health, strength and wellness.
- Even in their old age they should bear fruit , they should be flesh and flourishing.
- As God’s blessed people, they should be a blessing to their families and the church.
- For those who take care of them.
7. Unsaved family members
8. Separated families to be united – To be knitted together
9. The desires – heart’s wishes – petitions of our believers to be fulfilled in Christ.
10. In all the boundaries of the believers, in spirit, soul and flesh they should be “Holy unto God”
Moreover, our believers should labor towards Godliness 1Ti 4:8 For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.
11. For our believers to lead a spiritual life
- Fruit of the Spirit
- Mind of the Spirit
- Spiritual Gifts
- Led by the Spirit
- Controlled by the Spirit.
- Praying in Spirit.
- Being filled in Spirit.
12. Pray with burden for our Church to be filled with men and women who are praying prayer warriors.
13. To know the truth, receive it, love it wholeheartedly, submit to it and walk.
14. To pull the believers out from horrible pit and miry clay and set their feet upon a rock, make their steps secure and to give in their mouth a new song of praise.
15. For ministry coordinators, volunteers, office staff, Pastor and Pastoramma.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்