Carmel Preparatory Fasting Prayer Days | August 03, August 04 and August 05, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | ஆகஸ்ட் 03, ஆகஸ்ட் 04, மற்றும் ஆகஸ்ட் 05, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்
நமது தாய் திருநாட்டிற்காக
- நமது தாய் திருநாட்டில் சத்தியம் ஜெயிக்க வேண்டும்.
- அசத்தியத்தில் இருக்கும் ஜனங்கள் சத்தியத்திற்குள் வர வேண்டும்.
- இருளிலிருக்கும் ஜனங்கள் இறைஒளிக்குள் வரவேண்டும்
- அநித்தியத்திற்கு நேராக போகும் ஜனங்கள் நித்திய ஜீவனுக்குள் வரவேண்டும்.
- நமது நாட்டின் சமாதானத்திற்காக, சுகத்திற்காக, சவுக்கியத்திற்காக.
- சுபிட்சத்திற்காக – வளமான வாழ்விற்காக – மக்களின் வாங்குதிறன் பெருக.
- மக்களின் தனிநபர் சுதந்திரம் – உரிமைகள் காக்கப்பட.
- மத, மற்றும் சமூக நல்லிணக்கம் பேணிகாக்கப்பட – சமூக நீதி, சமத்துவம் ஓங்கி வளர.
- அரசியல் சாசனம் சிதையுறாமல் காக்கப்பட்டு, பின்பற்றபட.
- நமது நாட்டின் தனிச்சிறப்பான பன்முகத்தன்மை சீருடன் பேணி போற்றி காக்கப்பட.
- உறவுகள்: குடும்ப உறவுகள், ஆசிரியர்-மாணாக்கர் உறவுகள், சமூதாய உறவுகள், பணி இட உறவுகள், நட்பு உறவுகள் பேணி போற்றி காக்கப்பட.
- மாநில, மற்றும் ஒன்றிய அரசு துறைகளுக்காக.
- அரசியல்வாதிகளுக்காக, மக்கள் தலைவர்களுக்காக.
- நாடாளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக, அமைச்சர் பெருமக்களுக்காக, நமது மாநில முதல் அமைச்சருக்காக, நமது நாட்டின் தலைமை அமைச்சருக்காக.
- நமது நாட்டில் இறை ஆட்சி நடைபெற, இறை ஆசீர் நிரம்பி இருக்க.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்