Carmel Preparatory Fasting Prayer Days | August 03, August 04 and August 05 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | ஆகஸ்ட் 03, ஆகஸ்ட் 04, மற்றும் ஆகஸ்ட் 05, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

Carmel Preparatory Fasting Prayer Days | August 03, August 04 and August 05, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | ஆகஸ்ட் 03, ஆகஸ்ட் 04, மற்றும் ஆகஸ்ட் 05, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

நமது தாய் திருநாட்டிற்காக

  1. நமது தாய் திருநாட்டில் சத்தியம் ஜெயிக்க வேண்டும்.
  2. அசத்தியத்தில் இருக்கும் ஜனங்கள் சத்தியத்திற்குள் வர வேண்டும்.
  3. இருளிலிருக்கும் ஜனங்கள் இறைஒளிக்குள் வரவேண்டும்
  4. அநித்தியத்திற்கு நேராக போகும் ஜனங்கள் நித்திய ஜீவனுக்குள் வரவேண்டும்.
  5. நமது நாட்டின் சமாதானத்திற்காக, சுகத்திற்காக, சவுக்கியத்திற்காக.
  6. சுபிட்சத்திற்காக – வளமான வாழ்விற்காக – மக்களின் வாங்குதிறன் பெருக.
  7. மக்களின் தனிநபர் சுதந்திரம் – உரிமைகள் காக்கப்பட.
  8. மத, மற்றும் சமூக நல்லிணக்கம் பேணிகாக்கப்பட – சமூக நீதி, சமத்துவம் ஓங்கி வளர.
  9. அரசியல் சாசனம் சிதையுறாமல் காக்கப்பட்டு, பின்பற்றபட.
  10. நமது நாட்டின் தனிச்சிறப்பான பன்முகத்தன்மை சீருடன் பேணி போற்றி காக்கப்பட.
  11. உறவுகள்: குடும்ப உறவுகள், ஆசிரியர்-மாணாக்கர் உறவுகள், சமூதாய உறவுகள், பணி இட உறவுகள், நட்பு உறவுகள் பேணி போற்றி காக்கப்பட.
  12. மாநில, மற்றும் ஒன்றிய அரசு துறைகளுக்காக.
  13. அரசியல்வாதிகளுக்காக, மக்கள் தலைவர்களுக்காக.
  14. நாடாளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக, அமைச்சர் பெருமக்களுக்காக, நமது மாநில முதல் அமைச்சருக்காக, நமது நாட்டின் தலைமை அமைச்சருக்காக.
  15. நமது நாட்டில் இறை ஆட்சி நடைபெற, இறை ஆசீர் நிரம்பி இருக்க.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with