Carmel Preparatory Fasting Prayer Days | November 30, December 01 and December 02, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | நவம்பர் 30, டிசம்பர் 01, மற்றும் டிசம்பர் 02, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்
1. நமது குடும்பத்திலும், சபையிலும் உள்ள முதியோர்களுக்காக – அவர்களுக்கு நல்ல சுகம், பெலன், ஆரோக்கியத்திற்காக.
2. அவர்கள் தங்கள் முதிர்வயதிலும் கனிதந்து பசுமையும்,புஷ்டியுமாயிருக்கும் படிக்கு.
3. அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக தங்கள் குடும்பங்களுக்கும், திருச்சபைக்கும் ஆசீர்வாதமாயிருக்க.
4. நாம் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்து களிகூர தேவன் காலைதோறும் தமது கிருபையை விளங்கப்பண்ண.
5. நமது ஜீவனுள்ள நாளெல்லாம் தேவனது நன்மையும், கிருபையும் நம்மைத் தொடர.
6. பாபிலோனிய, மற்றும் அந்நிய மத உபதேசங்களுக்கும், வழிபாடுகளுக்கும், பண்டிகைகளுக்கும் நாமும், நம், குடும்பங்களும் விலக்கி காக்கப்பட.
7. விசுவாசிகளின் எல்லை எங்கும், மற்றும் அவர்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றும் கர்த்த்ருக்குப் பரிசுத்தம் என்று விளங்க.
8. விசுவாசிகள் யாவரும் தேவபக்திக்கு நேராகப் பிரயாசப்பட:
1 தீமோத்தேயு 4:8 சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
1Ti 4:8 For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.
9. தேவனுக்குப் பயப்படுகிற பயம் உணர்வுப் பூரணமாக நம்மில் காணப்பட.
10. நம்முடைய விசுவாசிகள் தேவனுக்குச் சித்தமான எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும், பூரண நிச்சயமுடையவர்களாகவும் விளங்க.
11. நம்முடைய சபை ஜெபிக்கிற ஜெபவீரர்கள் நிரம்பிய சபையாக விளங்க மன்றாடி ஜெபிப்போம்.
12. சத்தியத்தை அறிந்து, அதை மனதார நேசித்து, ஏற்றுக்கொண்டு, கீழ்படிந்து, கைக்கொண்டு நடக்க.
13. சபையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆண்டிறுதி, மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்காக.
14. சபையில் நடைபெற்றுவரும் எல்லா ஊழியங்களுக்காக, மேலும், தடைபட்டிருக்கும் ஊழியங்கள் தடையின்றி நடைபெற.
15. திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, திருத்தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுகாக.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்