Carmel Preparatory Fasting Prayer Days | November 02, November 03 and November 04, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | நவம்பர் 02, நவம்பர் 03, மற்றும் நவம்பர் 04, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

Carmel Preparatory Fasting Prayer Days | November 02, November 03 and November 04, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | நவம்பர் 02, நவம்பர் 03, மற்றும் நவம்பர் 04, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

  1. தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிவருகிற இக் காலக்கட்டத்தில் நம் குடும்பங்களும், நம் திருச்சபையும் வருகைக்கேற்றப் பரிசுத்தத்தில் – ஆயத்தத்தில் காணப்பட.
  2. விசுவாசிகளின் எல்லை எங்கும், மற்றும் அவர்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றும் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று விளங்க.
  3. விசுவாசிகள் யாவரும் தேவபக்திக்கு நேராகப் பிரயாசப்பட:
    1 Tim 4:8 சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
    For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.
  4. தேவனுக்குப் பயப்படுகிற பயம் உணர்வுப் பூரணமாக நம்மில் காணப்பட.
  5. நம்முடைய விசுவாசிகள் தேவனுக்கு சித்தமான எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும், பூரண நிச்சயமுடையவர்களாகவும் விளங்க.
  6. நம்முடைய சபை ஜெபிக்கிற ஜெபவீரர்கள் நிரம்பிய சபையாக விளங்க மன்றாடி ஜெபிப்போம்.
  7. நாம் ஆவின் கனிகளால் நிறைந்து வாழ.
  8. நம் சபையார் யாவரும் ஆவியின் வரங்களால் நிரப்பப்பட.
  9. விசுவாசிகள் அனைவரும் ஆத்தும ஆதாயத் திருப்பணி செய்ய.
  10. சத்தியத்தை அறிந்து, அதை மனதார நேசித்து, ஏற்றுக்கொண்டு, கீழ்படிந்து, கைக்கொண்டு நடக்க.
  11. சபையில் சிறுபிள்ளைகள் நடுவில் நடைபெறும் ஊழியங்களுக்காக.
  12. வாலிப நாளில் இயேசுவை கண்டேன் என்ற வலைஒலி (YouTube) ஊழியத்திற்காக
  13. ஊடகவியல் ஊழியங்களுக்காக.
  14. தடைபட்டிருக்கும் ஊழியங்கள் தடையின்றி நடைபெற.
  15. திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, திருத்தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுக்காக.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with