Carmel Preparatory Fasting Prayer Days | September 01, September 02 and September 03, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | செப்டம்பர் 01, செப்டம்பர் 02 and செப்டம்பர் 03, 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள் | Pr. Robert Simon | Carmel Ministries

Carmel Preparatory Fasting Prayer Days | September 01, September 02 and September 03, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | செப்டம்பர் 01, செப்டம்பர் 02 and செப்டம்பர் 03, 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்

துதிப்போம்!
1. கர்மேல் ஊழியங்களை கர்த்தர் கடந்த 32 ஆண்டுகளாக ஆச்சரியமாய், அதிசயமாய் நடத்தி வந்த அவரது பெரிதானக் கிருபைக்காக.

2. கர்மேல் ஊழியங்கள் மூலம் கர்த்தர் நிறைவேற்றின மகத்தான ஊழியங்களுக்காக (கருத்தரங்குகள், சிறப்பு வேதபாடங்கள், படை முயற்சி கூட்டங்கள், ஊழியர் கூடுகைகள், ‘சத்தியத்தின் சத்தம்’ கருத்துக்கங்கள், பட்டிமன்றங்கள், ஊடகவியல் ஊழியங்கள், மிஷினரி செயல்திட்டம், ‘மானியவிலையில் வேதாகமம்’ செயல்திட்டம், நல்ல சமாரியன் நிதி மூலமாக சமூகசேவைகள், … இன்னும் பல பல) தேவனுக்கே மகிமை!!

3. சபை கூடுகைகளில் கர்த்தர் வெளிப்படுத்தித்தரும் தீர்க்கத்தரிசன வார்த்தைகளுக்காக, தெய்வீக விடுதலைக்காக, வசன வெளிச்சத்திற்காக.

4. சபையில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காக.

5. கர்மேல் தொண்டர் படைக்காக, கர்மேல் அலுவலக பணியாளர்களுக்காக (பெயர் பெயராக).

6. ஊழியத்தின் தேவைகளைக் குறைவில்லாமல் கர்த்தர் சந்தித்துவருகிற அவரது மகாத்தயவிற்காக.

7. சபை மக்கள் அனேகருடைய வாழ்க்கையில் தேவன் கட்டளையிட்டிருக்கிற உயர்வுக்காக, வளத்திற்காக, வாழ்வுக்காக.

ஜெபிப்போம்!
8. சபை மக்கள் எதிபார்த்து காத்திருக்கும் நன்மைகள் தேவனால் அவர்களுக்கு ஏற்ற வேளையில் அருளப்பட.

9. விசுவாசிகள் தேவபயத்திலும், தேவபக்தியிலும், பரிசுத்தத்திலும், சத்தியதிலும், கிருபையிலும், கீழ்ப்படிதழிலும் வளர்ந்துபெருக.

10. பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுக்காக, ஊழியத்தில் உதவியாக, உறுதுணையாக உள்ள அனைவருக்காக.

கர்மேல் விழா – 2022

செப்டம்பர் 9, வெள்ளி
– காலை 5 மணி: நன்றி நவிலல் ஆராதனை
– மாலை 6 மணி; தொடக்க விழா

செப்டம்பர் 10, சனி
‘மங்கலம் செழிக்க’ – காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை: பல்சுவை ஆவிக்குரிய ஆசீர்வாத நிகழ்ச்சிகள்

செப்டம்பர் 11, ஞாயிறு
– காலை 10 மணி: சாட்சி ஆராதனை
– பிற்பகல் 2 மணி: மிஷினரி விற்பனை விழா
– மாலை 5.30 மணி: சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

Share with