COVID-19 – Urgent Prayer Points | Coronavirus Prayer Points | கொரோனா வைரஸ் பெருந்தொற்று – அவசர ஜெபக்குறிப்புகள் | கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று – அவசர ஜெபக்குறிப்புகள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று – அவசர ஜெபக்குறிப்புகள்

COVID-19 – Urgent Prayer Points

1. ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கை, மருந்துகளின் தட்டுப்பாட்டினால் அநேகர் தங்கள் உறவுகளை மருத்துவமனைகளிலும், அவசர ஊர்திகளிலும் இழந்துவருகிறார்கள். இந்த கோர நிலை மாறி தேசத்தின் எந்த ஒரு மூலையிலும் எந்த நோயாளியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணம் மரிக்கக்கூடாது என்று ஊக்கத்துடன் ஜெபியுங்கள்.

2. தொற்றினால் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு கர்த்தருடைய ஆறுதலும் தேறுதலும் உண்டாகவேண்டும். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்படவேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் காக்கப்படவேண்டும்.

3. கர்த்தருக்குகள் நித்திரையடைந்த தேவ ஊழியர்கள், சபை போதகர்களின் குடும்பத்திற்கு கர்த்தர் ஆறுதலை தந்து அவர்களுடைய ஊழியங்கள் தொடர்ந்து நடத்துவதற்கு கிருபை பாராட்டவேண்டும். சிகிச்சை பெறுவோர் சீக்கிரத்தில் பூரணசுகம்பெற்று வீடு திரும்பவேண்டும்.

4.மத்திய மாநில அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

5. அதிக வேலைப்பளு மற்றும் மனஅழுத்தத்திற்கு ஆளாகக்குடிய நிலையில் இருக்கும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர், காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், பத்திரிக்கை துறையினார் மற்றும் அத்தியாவசியப் பணியில் இருக்கும் ஊழியர்கள். இவர்கள் மற்றும் இவர்களுடைய குடும்பங்களின் பாதுகாப்பிற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

6. பொதுமுடக்கத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலிகள், சிறு குறு வியாபாரிகளின் குடும்பத் தேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்று ஜெபியுங்கள்.

7. ஒன்றரை ஆண்டுகாலமாக பள்ளிக்கூட கல்வி தடைப்பட்டுள்ளதால் நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. அரசாங்கம் அனைத்து தரப்பு பிள்ளைகளுக்கும் பயனடைய கூடிய கல்விமுறைகளை கொண்டுவர ஜெபித்துக்கொள்ளுங்கள்.

8. மூடநம்பிக்கைகள், மூடபழக்கங்களை கடைபிடித்ததினால் இப்பெருந்தொற்றிற்கு பலியாகும் செய்தியை கேள்விபடுகிறோம். மக்கள் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்குள், இருளிலிருந்து ஒளிக்குள், அழிவிலிருந்து அழியாமைக்குள் வர ஜெபியுங்கள்.

9. கோவிட்-19 என்ற வாதையின் இரண்டாவது அலை முற்றுமாய் அற்றுப்போக; மக்கள் பீதி, கலக்கம், விரக்தி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து மீண்டுவர ஜெபியுங்கள்.

10. அவருடைய நாமத்தை தரித்துள்ள அவருடைய ஜனங்களாகிய நாம் நம்மை தாழ்த்தி, நம்முடைய பாவங்களை அறிக்கைசெய்து, பொல்லாத வழிகளை விட்டு திரும்பி அவருடைய இரக்கத்திற்காக மன்றாட வேண்டும்.

Prayer Points in English:
1. Many lives are being lost in hospitals and ambulances due to lack of oxygen, hospital beds and medicines. Pray fervently for this situation to change. No patient anywhere in India should die because of the above.

2. God to comfort and console the families of all those who have lost their loved ones; for their needs to be met, for the future to be safeguarded.

3. God to comfort the families of all the Servants of God who slept in the Lord during this pandemic. God to grant grace for their ministries to continue uninterrupted Those who are ill and taking treatment should totally recover and return home soon.

4. Pray for the health and protection of Ministers in Central and State Government, IAS Officers, Government employees. Pray for their family members protection and well being.

5. Doctors, Nurses, Policemen, Healthcare workers, News Reporters and such other Frontine workers who are labouring for long hours are going through acute stress and depression. Pray that they along with their families are protected during this pandemic.

6. Daily labourers, Small traders have lost their livelihood during this lockdown. Pray that the needs of the family be met.

7. The education of our children is hindered for nearly 1½ years. Pray for the Government to come out with good educational policies which provides equal opportunity to children belonging to all the cross section of the society.

8. Due to some superstitious beliefs and practices, some are loosing their loved ones. Pray for people to turn from falsehoold to truth, darkness to light, death to life.

9. The second wave of this COVID-19 pandemic should come to an end. Pray for people to be delivered from fear, anxiety and frustration.

10. His people those who are called by his name should humble themselves, confess their sins, leave their evil ways and plead for God’s mercy.

 

For any urgent COVID-19 Prayer Request(24/7), Kindly dial any of the following numbers:

+919025658484, +919092120821

We will pray for you.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / போதகர் இராபர்ட் சைமன்

Share with