Family Blessing Prayer Points | குடும்ப ஆசீர்வாத ஜெப குறிப்புகள்:
ஜெபியுங்கள்….
1. இரட்சிக்கப்படாத குடும்ப உறுப்பினர்களின் இரட்சிக்கப்பட.
2. பிள்ளைகள் கர்த்தருக்குள வளர்ந்து கனிதர, வளமான எதிர்காலம் அமைந்திட.
3. நோய்நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திட.
4. மூத்த குடிமக்களின் நலன் – ஆவி, ஆத்துமா மற்றும் சரீர சுகம், சமாதானம்.
5. வாலிப ஆண் பெண் பிள்ளைகள் பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கும் திராணியுள்ளவர்களாய் மாறி சாட்சியின் ஜீவியம் ஜீவிக்க.
6. குடும்பத் தேவைகள் யாவும் குறைவின்றி சந்திக்கப்பட.
7. கர்த்தருக்கு பிரியமான நம் இருதயத்தின் வாஞ்சைகளை கர்த்தர்தாமே நிறைவேற்றிட.
8. கணவன்-மனைவி உறவில் காணப்படும் பிளவுகள், விரிசல்கள், பிரிவினைகள் யாவும் நீங்கி திருமண வாழ்க்கை கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட.
9. விசுவாசிகளின் தொழில் மற்றும் தொழில்சார்ந்த முயற்சிகள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட.
10. சபை ஐக்கியத்தை விட்டு விலகியிருக்கும் குடும்பங்கள் திரும்பவும் ஐக்கியத்தில் இணைந்து பெலப்பட.
11. பல்வேறு காரணங்களினால் பின்மாற்றத்தில் இருக்கும் விசுவாசிகள் கர்த்தரால் தொடப்பட்டு தங்கள் ஆதிநிலைக்கு திரும்ப.
12. சபையில் போதிக்கப்படும் சத்தியத்திற்கு முழுமையாக கீழ்ப்படிய.
13. இருளின் அதிகாரங்களால விளையும் போராட்டங்களிலிருந்து பரிபூரண விடுதலையை அனுபவிக்க.
14. எல்லா நிலையிலும், எல்லா சமயத்திலும் முழு ஒப்படைப்புடன், முழு உண்மையுடன் கர்த்தருக்கு ஊழியம் செய்தல்.
15. ஒவ்வொருவரும் கர்த்தருடைய ஊழியத்தில் ஏதோ ஒரு வகையில் ஈடுபடவேண்டும், கர்த்தரால் பயன்படுத்தப்படவேண்டும்.
16. நம்முடைய மிஷனரிகள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் ஊழியங்களின் வளர்ச்சி.
17. வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் வசித்துவரும் நம்முடைய உறவுகளுக்காக.
For any urgent COVID-19 Prayer Request(24/7), Kindly dial any of the following numbers:
We will pray for you.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / போதகர் இராபர்ட் சைமன்