Preparatory Fasting Prayer Days for Holy Communion | August 04, August 05 and August 06, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points | திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தும் உபவாச ஜெப நாட்கள் | ஆகஸ்ட் 04, ஆகஸ்ட் 05 and ஆகஸ்ட் 06, 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள் | Pr. Robert Simon | Carmel Ministries

Preparatory Fasting Prayer Days for Holy Communion | August 04, August 05 and August 06, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points | திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தும் உபவாச ஜெப நாட்கள் | ஆகஸ்ட் 04, ஆகஸ்ட் 05 மற்றும் ஆகஸ்ட் 06, 2022 (வியாழன், வெள்ளி, சனி)

கர்மேல் உபவாச ஜெப நாட்கள்

ஆகஸ்ட் 4, 5 & 6 (வியாழன், வெள்ளி, சனி)

ஜெபக்குறிப்புகள்:

1. சபை(குடும்பம்) தேவனால் நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட.

2. தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படக் கூடிய இக்கொடிய காலத்தில் சபைமக்களை தேவன் கள்ள உபதேசங்களும், தவறான உபதேசங்களும் விலக்கிக் காத்திட.

3. விசுவாசிகள் தேவ பக்திக்கடுத்தவைகளில் வைராக்கிய வாஞ்சையோடு வளர்ந்தோங்க.

4. விசுவாசிகள் தேவன் பிரியப்படுகிற பரிசுத்தத்தில் உறுதியாய் நிலைநிற்க.

5. விசுவாசிகள் சத்தியத்தில் பிரியப்படச் சத்தியத்தை மனோ உற்சாகத்துடன் கைக்கொள்ள.

6. விசுவாசிகள் தேவ அன்பினால் நெருக்கியேவப்பட்டு அநேகரை அக்கினியிலிருந்து விடுவிக்க.

7. சபையை(குடும்பத்தை) கெடுக்கிற தந்திரமான குழி நரிகளையும், குள்ளநரிகளையும் கர்த்தர் நமக்காகப் பிடித்து அகற்ற.

8. பாவிகள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டு ஞானஸ்தானம் பெற்று அனுதினமும் சபையில் சேர்க்கப்பட.

9. உண்மையும், உத்தமமாய் ஊழியம் செய்கிற தேவ பிள்ளைகளைக் கர்த்தர் ஏராளமாய் எழுப்ப.

10. சபையிலுள்ள பாவிகள் மாயக்காரர்கள் திகைத்து நடுக்கம் பிடித்து கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடு அவர் பக்கம் திரும்ப – அதற்கேற்ற பரிசுத்த அக்கினி சபையில் பற்றியெரிய (ஏசாயா 33:14)

  • தன்னார்வத் தொண்டர்களுக்காக.
  • சபை அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்காக.
  • பாஸ்டர் பாஸ்டரம்மாவுக்காக.
Share with